under review

பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்

From Tamil Wiki
Revision as of 10:10, 1 May 2022 by Ramya (talk | contribs)

பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கத்தொகை பாடல்களாக உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பொதுமபை என்ற ஊரில் வெண்கண்ணனார் பிறந்தார். கிழான் என்பது சிறப்புப் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

அவர் பாடியனவாக 2 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அகநானூற்றில் 130, 192 வது பாடலாக உள்ளன. குறிஞ்சி, நெய்தல் திணைப் பாடல்கள் பாடினார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • நற்றேர் வழுதி கொற்கை அரசன். குதிரை சென்ற காலடிகளைக் கடலலை கொண்டுவரும் முத்துக்கள் தூர்க்குமாம்.
  • தன் காதலியின் கண் கொற்கைக் கழியில் பூத்த நெய்தல் மலர் போல் மதமதப்போடு நோக்கும்.

பாடல் நடை

  • அகநானூறு: 130

அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை,
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும்
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.

  • அகநானூறு: 192

மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைந் தார்,
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி,
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்,
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல்
உரும் இறை கொண்ட உயர்சிமைப்
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.