சைதன்யா

From Tamil Wiki
சைதன்யா

சைதன்யா ( 29 டிசம்பர் 1996) சைதன்யா தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு மேற்பார்வையாளர் , ஒருங்கிணைப்பாளர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

சைதன்யா எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் அருண்மொழிநங்கை ஆகியோருக்கு 29 டிசம்பர் 1996 ல் தர்மபுரியில் பிறந்தார். தக்கலை ஹிந்து வித்யாலயாவில் ஆரம்பக்கல்வியும் நாகர்கோயில் செயிண்ட் அல்போன்ஸா மேல்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிக்கல்வியும் முடித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் நியூடெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

சைதன்யா ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தின் ஆங்கிலப் பக்கங்களின் மொழியாக்கத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார்.

உசாத்துணை