under review

பனி உருகுவதில்லை (கட்டுரைத் தொகுப்பு)

From Tamil Wiki
Revision as of 19:41, 29 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
பனி உருகுவதில்லை (கட்டுரைத் தொகுப்பு)

பனி உருகுவதில்லை (கட்டுரைத் தொகுப்பு) அருண்மொழி நங்கையின் தன்வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு நூல்.

பதிப்பு

‘பனி உருகுவதில்லை’ என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பினை எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகம்) 2022-ல் அச்சுப்பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

அருண்மொழிநங்கை இந்தக் கட்டுரைகளைத் தன்னுடைய வலைப்பூவில்[1] தொடராக எழுதினார். பின்னர் அதனைத் தொகுத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் நூலாக வெளிட்டுள்ளார்.

நூல்சுருக்கம்

அருண்மொழிநங்கை எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பாக 317 பக்கங்களில் ‘பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்துள்ளது. இக்கட்டுரைகளுள் இரண்டு கட்டுரைகள் இசை பற்றியவை. மற்றனைத்தும் இவரின் தன்வரலாற்றுக் குறிப்புகள். தன்னுடைய இளமைக்கால வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நுட்பமான தகவல்களுடன் புனைவும் நிஜமும் கலந்து எழுதியுள்ளார். பொதுவாசிப்புச் சுவைக்கும் இலக்கியத் தன்மையும் ஒருங்கே கொண்டவை என்ற நிலையில் இந்த நூல் தனித்து இருக்கிறது.

இலக்கிய இடம் / மதிப்பீடு

அருண்மொழிநங்கை பணி ஓய்வுக்குப் பின்னர் தன் இளமைக்கால வாழ்வைச் சுயமதிப்பீடு செய்யும் வகையில் இவர் தன்னுடைய வலைப்பூவில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் பரவலாக வாசகர் ஏற்பினைப் பெற்றன. தமிழில் இவை புதுவகை பெண்ணிய எழுத்தாகவும் நுட்பமான தகவல்களைச் செறிவாக அடுக்கி எழுதப்பட்ட இலக்கிய ஆக்கங்களாகவும் கருதப்பட்டன. இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பான ‘பனிஉருகுவதில்லை’ ஒரு முன்மாதிரியான படைப்பாகவும் புனைவுவல்லாத இலக்கிய வகைமைகளுள் கவனிப்புக்குரியதாகவும் கருதப்படுகிறது.

“அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.”

- எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

“இளமை நினைவுகளை எழுத முற்படும்போது, நினைவேக்கத்தின் தழுதழுப்பும் இழந்தவை பற்றிய பொருமலும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படும். அருண்மொழியின் கட்டுரைகளில் அது நடக்கவில்லை . துல்லியமான விபரங்களுடன், சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம். சமனமான, முதிர்ந்த நடை.”

- எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page