standardised

குகப்பிரியை

From Tamil Wiki
Revision as of 04:50, 25 April 2022 by Tamizhkalai (talk | contribs)

குகப்பிரியை (1902 - 1970) தமிழில் கதைகள் எழுதிய தொடக்ககாலப் பெண் எழுத்தாளர். குடும்பச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை எழுதியவர்

தனிவாழ்க்கை

குகப்பிரியையின் இயற்பெயர் சுவர்ணாம்பாள். கோவை மாவட்டம் காராத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவருடைய தமையன் புகழ்பெற்ற இசை விமர்சகரும், கேசவர்த்தினி கூந்தல் எண்ணை தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனருமான கே.வி.ராமச்சந்திரன். குகப்பிரியை. காந்திய இயக்கத்தின்மேல் ஆர்வம் கொண்டவர். தன் கணவர் சுப்ரமணிய ஐயர் பெயரில் இருந்து குகப்பிரியை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார் .

இதழியல்

குகப்பிரியை மங்கை என்னும் பெண்கள் இதழை 1946 முதல் 1950 வரை நடத்தினார். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் இருந்து வெளியிட்டார்

இலக்கிய வாழ்க்கை

குகப்பிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய ஜகன்மோகினி, நந்தவனம் போன்ற இதழ்களிலும் ஆனந்தபோதினி, கலைமகள் போன்ற இதழ்களிலும் எழுதினார். 1933-ல் ‘கல்கி’ விகடனில் 1000 ரூபாய் பரிசு கொண்ட நாவல் போட்டி வைத்தார்.  பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டி அது.இரண்டு நாவல்கள் தேர்வுற்றன. அவற்றுள் ஒன்று “குகப்ரியை”யின் “சந்திரிகா”. பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது. நாவலின் முகவுரையில் கல்கி ‘குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை’ என்று எழுதினார்.

குகப்பிரியையின் நூல்களில் ஸ்ரீமகா பக்தவிஜயம் மாபெரும் வெற்றிபெற்ற நூல். 60 பக்தர்களின் வரலாறுகளின் தொகுப்பு இது. இந்நூல் தொடர்ந்து பல பதிப்புகள் வெளியாகியபடியே இருந்தது.

நூல்கள்

நாவல்
  • சந்திரிகா 1933
  • இருள்
  • ஒலி
  • இன்பத்தொல்லை 1962
  • தம்பி மனைவி 1950
வரலாறு
  • திப்பு சுல்தான்
  • மார்த்தாண்ட வர்மன்
  • சாம்ராட் அசோகன் 1954
மதம், ஆன்மிகம்
  • ஸ்ரீ மகாபக்த விஜயம் 1959
  • ஆறுமுகன் தோத்திரம் பதிகம் கீர்த்தனை நலங்கு
பொது
  • பெண்களுக்கு 1954
கதைகள்
  • சஞ்சீவி முதலிய கதைகள் 1946
  • தேவகி முதலிய கதைகள் 1949

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.