first review completed

சிற்றம்பலப் புலவர்

From Tamil Wiki
Revision as of 17:39, 28 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (added Category:ஈழத்து ஆளுமைகள்)

சிற்றம்பலப் புலவர் (18-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கண்டிகை அரசன் மீது பாடிய கிள்ளைவிடு தூது முக்கியமான படைப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். தமிழ் நாட்டில் வேதாரணியத்துக்குச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அவர் ஆங்கிலேயரால் சிறப்பிடிக்கப்பட்டதால் அரங்கேற்றம் செய்ய இயலாமல் போனது.

இலக்கிய வாழ்க்கை

இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் மீது கிள்ளைவிடு தூது எனும் பிரபந்தம் இயற்றினார்.

மாணவர்கள்
  • இருபாலைச் சேனாதிராயர் முதலியார்
  • அராலி அருணாச்சலம் பிள்ளை

நூல்கள்

தூது
  • கண்டி அரசன் கிள்ளை விடுதூது

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.