under review

பொய்கையார்

From Tamil Wiki

பொய்கையார் சங்ககாலப் புலவர். இவரது மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

தொண்டி, நறவு, மாந்தை ஆகிய பேரூர்களை அரசாண்ட சேரமான் கணைகாலிரும்பொறையின் அவைக்களப் புலவர். இவர் வறுமையில் வாடும் புலவர்களைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுபடுத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

நற்றிணை 18, புறநானூறு 48, 49 ஆகிய சங்கப்படல்களை எழுதினார். சேரனின் இறப்பிற்குப் பின் பொய்கையார் கழுமலப் போரின் சிறப்பையும் அவரின் வெற்றிப் பெருமைகளையும் களவழி நாற்பது என்ற நூலில் பாடினார். இந்தப் பாடல்களின் வழி சேரனின் சிறப்பை உணர்ந்த செங்கணான் அவரை சிறையிலிருந்து விடுவித்தார். இந்தச் செய்தி கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழனுலா, குலோத்துங்க சோழனுலா, ராஜராஜசோழனுலா, பழம்பாடல் போன்ற நூல்களில் உள்ளது.

பொய்கையார் இரும்பொறையைப் பாடியது
  • கலிங்கத்துப்பரணி

களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன்
கால்வழித்தளையை வெட்டி அரசிட்ட பரிசும்

  • விக்கிரம சோழனுலா

மேதக்கபொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத்தளைவிட்ட பார்த்திபனும்

  • குலோத்துங்க சோழனுலா

பொறையனைப் பொய்கைக் கவிக்குக்
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்

  • ராஜராஜசோழனுலா

பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்ட கோன்

  • பழம்பாடல்

செய்கை அரியகளவழிப்பா முன்செய்த
பொய்கை யொருவனாற் போந்தராமோ?

பாடல் நடை

நற்றிணைச் செய்யுள்

மூவன்
முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின்
கானலந் தொண்டிப் பொருநன்; வென்வேல்
தெறலருந் தானைப் பொறையன்; பாசறை
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக்
கடாஅம் கழீஇய கதனடங்கு யானைத்
தடவுநிலை ஒருகோடு

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.