under review

அமிர்த குணபோதினி

From Tamil Wiki
அமிர்தகுணபோதினி

அமிர்த குணபோதினி (1926-1940) தமிழில் வெளி வந்த ஒரு பல்சுவை இதழ். எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு இதன் ஆசிரியராக இருந்தார்.

வரலாறு

1926-ல் தி.ராஜகோபால் முதலியார் தொடங்கிய ஆனந்தகுணபோதினி இதழில் ஆசிரியராக எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு பொறுப்பேற்றார். ஆனந்த போதினி இதழுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட இதழ் அது. ஆனந்தபோதினி அன்று ஆரணி குப்புசாமி முதலியாரின் தொடர்கதைகளை வெளியிட்டு புகழ்பெற்றிருந்தது. ஆனந்தகுணபோதினியின் அமைப்பும் பெயரும் தன் பத்திரிகைபோல் இருப்பதாக எண்ணிய அதன் உரிமையாளர் நாகவேடு முனுசாமி முதலியார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே ஆனந்த குணபோதினி தன் வடிவை மாற்றிக்கொண்டு அமிர்தகுணபோதினியாக பெயரையும் மாற்றிக்கொண்டது.

இதழில் சிறுவர் பக்கம், பெண்கள் பக்கம், சென்ற மாதம், பத்திரிகாச்சாரம் என பல பகுதிகளை எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு எழுதினார். நமது கதாப்பிரசங்கி என்ற பெயரில் நகைச்சுவைக்கதைகள், நடைச்சித்திரங்கள் எழுதினார். அவ்விதழில் மாறல் கார்த்திகேய முதலியார், அரியூர் வ. பதுமநாப பிள்ளை என சிலர் தவிர எல்லா பக்கங்களும் அவரே எழுதியவை. ஜே.ஆர். ரங்கராஜுவின் நாவல்கள் அமிர்தகுணபோதினியில் வெளிவந்தன.

1934-ஆம் ஆண்டு அமிர்தகுணபோதினி மதுரை இ.மா.ப்கோபால கிருஷ்ண கோனுக்கு விற்கப்பட்டபோது அவருக்கும் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடுவுக்கும் முரண்பாடு உருவாகியது. எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு இதழில் இருந்து விலகினார். அதன்பின் ஜே.ஆர். ரங்கராஜு நாவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அமிர்தகுணபோதினி அச்சகத்திலிருந்து நூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. 1940-ல் இதழ் நின்றுபோனது.

உசாத்துணை


✅Finalised Page