under review

இரட்டைக் குவளை முறை

From Tamil Wiki
Revision as of 12:48, 12 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors in article)
இரட்டைக் குவளை முறை (நன்றி: கீற்று)

இரட்டைக் குவளை முறை என்பது தேநீர்க் கடைகள் போன்ற பொதுமக்கள் புழங்கும் இடங்களில் சாதிய அடிப்படையில் தலித்துகளுக்கும் இதர முன்னேறிய, இடைநிலை சாதிக்களுக்கும் தேநீர் குடிப்பதற்கு வெவ்வேறு வகையான குவளைகளைப் பயன்படுத்தும் முறை.

இரட்டைக் குவளை முறை வகைகள்

  • தலித்துகளுக்கு தனிக் குவளையும், பிற முன்னேறிய, இடைநிலை சாதிக்களுக்கு தனிக் குவளையும் பயன்படுத்துதல்.
  • ஒரே விதமான குவளையாக இருந்தாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படுகின்ற குவளை தனியாகவும், பிற முன்னேறிய, இடைநிலை சாதிக்களுக்கு கொடுக்கப்படுகிற குவளை தனியாகவும் வைக்கப்படுதல்.
  • ஒரே விதமான குவளை பயன்படுத்தப்பட்டாலும் அக்குவளையின் தரம் தலித்துகளுக்கும் இதர முன்னேறிய, இடைநிலை சாதிக்களுக்கு மாறுபட்டிருத்தல்.
  • தலித்துகளுக்கு பிளாஸ்டிக் குவளையும், இதர முன்னேறிய, இடைநிலை சாதிக்களுக்கு சில்வர் மற்றும் கண்ணாடி குவளையும் பயன்படுத்தல்.
  • தலித்துகள் தேநீர் அருந்திய பிறகு அவர்களது குவளையத் தாங்களே சுத்தம் செய்ய வைத்தல்.
பிற தீண்டாமைகள்
  • தலித்துகள் தேநீர்க் கடைக்குச் செல்லும் முன் அதற்கு வெகு தொலைவில் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு தேநீர் குடிக்க வரச் செய்தல்.
  • தலித்துகளைத் தங்கள் வீட்டிலிருந்தே தேநீர் அருந்த பாத்திரங்கள் எடுத்து வரச் சொல்லுதல்.
  • தேநீர்க் கடையில் தலித்துகளுக்கு இருக்கைகள் அளிக்காமல் இருத்தல்
  • தேநீர்க் கடையில் தலித்துகளுக்கும், இதர முன்னேறிய, இடைநிலை சாதிக்களுக்கும் தனித்தனியான இருக்கைகள் பயன்படுத்தப்படுதல்.

சட்ட நடவடிக்கை

தலித் ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அல்லது உணர்வுகளைப் புண்படுத்தும்விதமான செயல்களில் ஈடுபடுவது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

போராட்டங்கள்

  • இம்மானுவேல் சேகரன் 1954-ல் இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் நடத்தினார்.
  • இரட்டைக் குவளை முறை, முடி வெட்டுவதில் பாரபட்சம், பொருள் விற்பதில் பாகுபாடு, நியாய விலைக் கடை, குடி தண்ணீர், பொதுக் குளம், பொதுக்கிணறு பயன்பாடு, சாலை உபயோகம், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் நிலவும் பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அமைப்புகளில் ஒன்றாக ”தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி” உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jul-2024, 11:26:12 IST