அணில் மாமா
From Tamil Wiki
அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்) இவ்விதழ் அணில் இதழின் துணை இதழாக வெளிவந்தது.
வெளியீடு
1975-ஆம் ஆண்டு முதல் அணில் இதழ் அணில் மாமா என்ற இணைப்பு இதழை மாதம் ஒருமுறையாக வெளியிட்டது. இதில் அணில் அண்ணாவின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். .
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
- https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09
- அணில் அண்ணா: அணில்; மிகை கற்பனை கதைகளின் முன்னோடி
✅Finalised Page