சிதம்பர அடிகள்

From Tamil Wiki
Revision as of 17:49, 9 April 2022 by Logamadevi (talk | contribs)

சிதம்பர அடிகள் சங்கப்புலவர் மரபில் தோன்றியவர். நெஞ்சு விடு தூது, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா முக்கியமான படைப்புகள்.

வாழ்க்கைக் குறிப்பு

அங்கயற்கண்ணம்மையை வழிபட்டவர். சாந்தலிங்க சுவாமிகளின் சீடர். குமார தேவர் இவரின் நண்பர். சாந்தலிங்க சுவாமிகளின் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற நூல்களுக்கு உரை நூல்களை எழுதியுள்ளார். இவரது சரித்திரம் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரால் எழுதப்பட்டது. சிற்றிலக்கிய வகைகளைக் கொண்டு பாடல்களை இயற்றியுள்ளார்.

வேறு பெயர்கள்
  • சிதம்பரதேவர்
  • சிதம்பர ஸ்வாமிகள்

நூல் பட்டியல்

  • மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா
  • நெஞ்சு விடு தூது
  • திருப்போரூர்ச் சன்னதிமுறை
  • பஞ்சாதிகார விளக்கம்
  • உபதேச உண்மை
  • உபதேசக் கட்டளை
  • திருப்போரூர் சந்நிதி முறை
  • தோத்திர மாலை
  • திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
  • கிளிப்பாட்டு
  • குயில்பாட்டு
  • தாலாட்டு
  • திருப்பள்ளி எழுச்சி
  • ஊசல்
  • தூது

உசாத்துணை

Template:First Review Completed