under review

விரிச்சியூர் நன்னாகனார்

From Tamil Wiki
Revision as of 14:03, 9 June 2024 by Logamadevi (talk | contribs)

விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய படல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். விரிச்சியூரில் பிறந்தார். நன்னாகனார் என்பது பெயர்.

இலக்கிய வாழ்க்கை

விரிச்சியூர் நன்னாகனாரின் பாடல் ஒன்று புறநானூற்றில் 292-வது பாடலாக அமைந்துள்ளது. வஞ்சித் திணைப்பாடல். பெருஞ்சோற்றுநிலை என்னும் துறையைச் சேர்ந்தது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • வேந்தர்க்கு வழங்கும் இனிய குளுமையான நறவக்கள்ளை உரிய முறையில் கலக்கி வரிசையாக வழங்குவர்.

பாடல் நடை

  • புறநானூறு: 292 (திணை-வஞ்சி, துறை-பெருஞ்சோற்றுநிலை)

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனென் என்று,
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்,
என்முறை வருக என்னான், கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி,
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

உசாத்துணை


✅Finalised Page