being created

வெள்ளைக்குடி நாகனார்

From Tamil Wiki

வெள்ளைக்குடி நாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூல்களான நற்றிணை, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளைக்குடி நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளைக்குடி நாகனார் பாடிய மூன்று பாடல்கள் நற்றிணை (158, 196); புறநானூறு (35) ஆகியவற்றில் உள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணை 158

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது அம்ம, தோழி கேள். நம்மிடத்தே இவையெல்லாம் எனக்குத் தென்படவில்லை. ஓங்கிய மலைநாடன் வரும் வழியில்தான் இந்த இடர்பாடுகள். அவன் இரவில் வருகிறான். கல்லுப் பாதை அவன் கால்களைக் கொல்லுகிறது. மிகுந்த இருட்டு அவன் கண்களைக் கொல்கிறது. குகையில் இருக்கும் புலி யானையைத் தாக்கி அதன் குருதியைப் பருகிவிட்டுத் தன் வாயை வேங்கை மரத்தில் துடைத்துக்கொள்கிறது. எனக்கு அச்சமாக இருக்கிறது. – இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

நற்றிணை 196
புறநானூறு 35

பாடல் நடை

  • நற்றிணை 158 (குறிஞ்சி)

அம்ம வாழி தோழி நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே

  • நற்றிணை 196
  • புறநானூறு 35

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.