under review

தத்துவப் பிரகாசம்

From Tamil Wiki

தத்துவப் பிரகாசம் (திருத்தாலாட்டு) தத்துராயர் தனது குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய தாலாட்டு. தத்துராயரின் அடங்கன்முறையில் உள்ள பதினெட்டு சிற்றிலக்கியங்களில் முதலாவது.

ஆசிரியர்

தத்துவப் பிரகாசத்தை இயற்றியவர் தத்துவராயர். தமிழில் வேதாந்தக் கருத்துக்களை எழுதிய முன்னோடி. அவரது மாமனும் குருவுமான சொரூபானந்தரின் மேல் பல சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

பெயர்க்காரணம்

தத்துவராயரால் சொரூபானந்தர் மேல் எழுதப்பட்ட தாலாட்டு என்பதால் திருத்தாலாட்டு எனப் பெயர் பெற்றது. தத்துவப் பிரகாசம் எனவும் அறியப்படுகிறது. குழந்தைக்குப் பாடுவதுபோல் அவரது உயர்வை தாலாட்டாகப் பாடுகிறார் தத்துவராயர்.

நூல் அமைப்பு

திருத்தாலாட்டு 52 கண்ணிகளைக் கொண்டது. வேதப்பொருளை உணர்ந்தவராய், நல்வினை தீவினைகளுக்கு அப்பாற்பட்டவராய், தெய்வமாய், மெய்ப்பொருளை உணர்த்தியவராய் தத்துவராயர் சொரூபானந்தரை வழிபடுகிறார்.

பாடல் நடை

புண்டரிகக் கைம்மலெரென்புந்தலைமேல் வைத்தருளி
பண்டை வினைதீரப் பார்க்கும் பெருமானோ (2)

ஆவாவிருவர் அறியாத சேவடியை
வாவா வென்றலைமேல் வைக்கும் பெருமானோ (3)

ஏட்டைவா சித்திவிடாமே எனக்கென்னை
காட்டாவா வென்ற கருணைத் தடங்கடலோ (4)

உசாத்துணை

தத்துவராயர் அடங்கன்முறை-ஆர்கைவ் வலைத்தளம்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.