மீரா (கவிஞர்)

From Tamil Wiki

மீரா: தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம்- அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கியத்தில் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது.

பிறப்பு ,கல்வி

கவிஞர் மீராவின் இயற்பெயர் மீ.ராஜேந்திரன். சிவகங்கையில் 10 அக்டோபர்1938-ல் எஸ். மீனாட்சிசுந்தரம்- இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவருடைய உடன் பிறந்த தம்பி மீ.மனோகரன் வரலாற்றாய்வாளர். சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.படித்தார். அங்கே கவிஞர் அபி , பா.செயப்பிரகாசம் , நா.காமராசன் போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார்.

தனிவாழ்க்கை

மீரா சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் தொழிற்சங்கமான மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். போராட்டம் நடத்தியதனால் கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அப்போதுதான் அன்னம் பதிப்பகத்தை தொடங்கினார். தன் நண்பர் அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை முதலில் வெளியிட்டார்.

மீரா இரா.சுசீலாவை 10.செப்டெம்பர்1964 ல் மணந்தார். கண்மணி, செல்மா, கதிர் என மூன்று வாரிசுகள். கதிர் மீரா நடத்திய அன்னம் -அகரம் பதிப்பகத்தை தொடர்ந்து நடத்துகிறார்

பதிப்பு

இதழியல்

மீரா இரண்டு இலக்கிய இதழ்களை நடத்தினார்

  • கவி
  • அன்னம் விடு தூது

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
  • பாவேந்தர் விருது
  • சிற்பி இலக்கிய விருது
  • தமிழ்ச் சான்றோர் பேரவை விருது

மறைவு

1.செப்டெம்பர் 2002 ல் மறைந்தார்.

இணைப்புகள்

மீராவின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் இணைய நூலகம்

நூல்கள்

திறனாய்வு
  • மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை
  • மீ.இராசேந்திரன் கவிதைகள்
  • மூன்றும் ஆறும்
  • மன்னர் நினைவில்
  • கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
  • ஊசிகள்
  • கோடையும் வசந்தமும்
  • குக்கூ
கட்டுரைகள்
  • வா இந்தப் பக்கம்
  • எதிர்காலத் தமிழ்க்கவிதை
  • மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்
  • முகவரிகள்

கலந்துரையாடல்

  • கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்

தொகுத்தவை

  • தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
  • பாரதியம் (கவிதைகள்)
  • பாரதியம் (கட்டுரைகள்)
  • சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)

உசாத்துணை