being created

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

From Tamil Wiki
Revision as of 10:06, 27 October 2023 by Ramya (talk | contribs)

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இரணியமுட்டமென்பது மதுரையைச் சார்ந்த யானைமலை முதலிய இடங்களைத் தன்பாற் கொண்டதாகிய ஒரு சிறியநாடு. மலைபடுகடாத்தின் 145-வது அடியில் இவரைப்பற்றிய தகவல்கள் உள்ளன. இவர் சாதியால் அந்தணர்.

இலக்கிய வாழ்க்கை

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார். இந்நூலன்றி நற்றிணையில் இரண்டு (44,139) செய்யுட்களும் இவர் செய்தனவாகத் தெரிகின்றன. கௌசிகனாரென்று ஒரு நல்லிசைப் புலவர் பெயர் பழைய நூல்களிற் காணப்படுகின்றது; அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • இவர் பாடியவற்றுள், ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப்பறை, பாண்டில், பேரியாழ், முழவென்னும் இசைக்கருவிகளைப்பற்றிய செய்திகளும், குறிஞ்சி, படுமலை, மருதமென்னும் பண்களைப்பற்றிய செய்திகளும், யாழ்வருணனையும், காட்டுவழியிடையே செல்லுகையில் இசைக் கருவிகளுக்கு நேரும் இடையூறுகளும், அவற்றை நீக்கிக் கொள்ளும் உபாயங்களும் காணப்படுகிறது.

பாடல் நடை

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.