தென்னாட்டுப் போர்க்களங்கள்

From Tamil Wiki
Revision as of 20:41, 17 February 2022 by Jeyamohan (talk | contribs)
தென்னாட்டுப் போர்க்களங்கள்

தென்னாட்டுப் போர்க்களங்கள் (1961) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார்.

வெளியீடு

1961ல் இந்நூலை கா.அப்பாத்துரை எழுதினார். 1971ல் அவரே அலமேலு நிலைய வெளியீடாக விரிவான முன்னுரையுடன் வெளியிட்டார்.

உள்ளடக்கம்

தென்னாட்டுப் போர்க்களங்கள் கீழ்க்கண்ட அத்தியாயங்கள் கொண்ட நூல்

  • வீரமரபு
  • வான விளிம்பு
  • அகல் உலகத் தொடர்பு
  • வடதிசைத் தொடர்புகள்
  • சங்ககாலப் போர்கள், 3 பகுதிகள்
  • பேரரசுப் போட்டி
  • சோழப்பெரும்பேரரசு
  • தேசியவாழ்வும் புதுமறுமலர்ச்சியும்

இவற்றில் கா.அப்பாத்துரை தமிழகத்தில் தொல்சான்றாதாரங்கள் கிடைக்காத முற்சங்க காலத்தை நூலாதாரங்களைக் கொண்டு அணுகுகிறார். சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்கள், பேரரசுகள் உருவாதல் ஆகியவற்றை விரித்துரைத்து சோழர்காலத்திய போர்களை விளக்குகிறார். ஆங்கிலேய ஆட்சிக்காலத்து போர்கள் , 1947 வரையிலான விடுதலைப்போராட்டங்கள் வரையிலான போர்களின் சித்திரம் இந்நூலில் உள்ளது.

உசாத்துணை