கொங்குமண்டல சதகம் கம்பநாத சாமி

From Tamil Wiki

கொங்குமண்டல சதகம் (பொயு17) கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம். இந்நூல் சிதைந்த நிலையில் சில பாடல்களே கிடைத்துள்ளன. இது மூன்று கொங்குமண்டல சதகங்களில் ஒன்று

கொங்குமண்டல சதகங்கள்

கொங்குமண்டல சதகங்கள் மூன்று உள்ளன. கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்கு மண்டல சதகம், வாலசுந்தரக் கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம் ஆகியவை அவை. இவற்றில் கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்குமண்டல சதகமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.  

நூலாசிரியர், காலம்

இந்நூல் பொயு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர் கருதுகின்றனர். ’முதற் சதகம் 17 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட தென அறிகின்றோம். மற்ற சதகங்களில் 'நாலாறு நாடது நாற்பத்தெண்ணாயிரம் நற்கொங்கு" என்னும் தொடக்கப் பாடல் பயின்று வருதலின் இவையிரண்டு சதகங்களும் அதன்பின் தோன்றியனவாம்’ என்று பதிபபசிரியர் ஐ. இராமசாமி,இக்கரை போளுவாம்பட்டி கருதுகிறார்

பதிப்பு

ஐ. இராமசாமி,இக்கரை போளுவாம்பட்டி இந்நூலை 1970 ல் பதிப்பித்துள்ளார். வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் பூந்துறைப்பிரதி,தாராபுரம் பிரதி, பழைய கோட்டைப் பிரதி என்று பிரதி என மூன்று இடங்களில் கிடைத்த பிரதிகளில் இருந்து தொகுத்து வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பிற கொங்குமண்டல சதகங்களில் இருந்த பாடல்களை தவிர்த்து பாடபேடங்கள் ஒப்பிடப்பட்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

கொங்குமண்டல சதகத்தில் கொங்குநாட்டுச் செய்திகளுடன் பூசகுலம், மணியகுலம் பரதகுலம், கூரைகுலம், கனவாளகுலம், எண்ணகுலம், ஒழுக்கர்குலம், மேதிகுலம்,வாரணவாசிகுலம் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன

உசாத்துணை

கம்பநாதசாமி கொங்குமண்டல சதகம் இணையநூலகம்