being created

ஓ.ரா.ந. கிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 09:28, 12 April 2023 by Ramya (talk | contribs)

ஓ.ரா.ந. கிருஷ்ணன் (ஓடத்துறை ராமாயாள் நல்லுச்சாமி கிருஷ்ணன்) (பிறப்பு: மே 16, 1934) பௌத்த தத்துவ அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஓ.ரா.ந. கிருஷ்ணன் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் ஓடத்துறையில் மே 16, 1934-ல் ராமாயாள், நல்லுசாமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். கோபிசெட்டிப்பாளையம் டைமண்ட் ஜூபிலி பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தார். 1950-1952இல் சென்னை லயோலாவில் இண்டர் மீடியேட் படித்தார். 1956இல் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஓ.ரா.ந. கிருஷ்ணன் ஜெயாவை மணந்தார். மகள்கள் மாலதி, மணிமேகலை, மகன் அமுதன். சென்னை மவுண்ட் ரோடில் மின்சார வாரியத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் அரசு வேலையிலிருந்து வெளிவந்து பல தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தார். சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

அமைப்புப் பணிகள்

2006இல் பௌத்த தியான முறைமைகளை பரப்புவதற்கு ‘தமிழ்நாடு பௌத்த சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

இதழியல்

2014ல் ‘போதி முரசு’ எனும் மாத இதழை தங்கவயல் வாணிதாசன் என்பவருடன் இணைந்து தொடங்கி அதில் பௌத்தம் பற்றி எழுதி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பௌத்த தத்துவம், தியானம், சடங்குகள் ஆகியவற்றை பற்றி அறுபதுக்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார். பௌத்த நூல்களை வெளியிடுவதற்கு 2005-ல் ‘மெத்தா பதிப்பகம்’ என்ற பதிப்பகம் ஒன்றை தொடங்கி பௌத்தம் சார்ந்த நூல்களையும், பௌத்தத்தின் மூல நூல்களையும் தமிழில் வெளியிட்டு வருகிறார். இவரது முதல் நூல் 2003இல் ”In search of reality” மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. 2007இல்‘பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும்’ என்ற முதல் தமிழ் நூல் வெளியானது.

நூல் பட்டியல்

  • பௌத்த பைபிள் (மெத்தா பதிப்பகம்)
  • புத்த ஜாதக கதைகள் (மெத்தா பதிப்பகம்)
  • பௌத்த தியானம் (காலச்சுவடு)
  • பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் (காலச்சுவடு)
  • இந்திய ஞான மரபுகள் பௌத்தத்தின் பார்வையில் (மெத்தா பதிப்பகம்)
  • பௌத்த பாவனை மனவள தியான பயிற்சிகள் (மெத்தா பதிப்பகம்)

உசாத்துணை

  • ஓ.ரா.ந. கிருஷ்ணன்: நேர்காணல்: குருகு மின்னிதழ்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.