அப்பாத்துரை ஐயர்
From Tamil Wiki
அப்பாத்துரை ஐயர் (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்)(1824 - 1865) இசைவாணர். வீணை இசைக்கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
அப்பாத்துரை ஐயர் தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின் தந்தை.
கலை வாழ்க்கை
அப்பாத்துரை ஐயர் வீணை திருமலை ஐயர்-ன் மாணவர். தஞ்சை சிவாஜி மன்னன் காலத்தில் சமஸ்தான வித்துவானாயிருந்தார். இசையிலும் பரத சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவர்.
மாணவர்
- தஞ்சாவூர் கிருஷ்ணபாகவதர்
உசாத்துணை
- தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu
- தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர் மு. அருணாசலம்: பதிப்பாசிரியர் உல. பாலசுப்பிரமணியன் - அக்டோபர் 2009.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.