being created

தொல்காப்பியம்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 3: Line 3:

'''தொல்காப்பியம்''' தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல். இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் 1610 நூற்பாக்களையும் உடையது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.  இவர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்கியுள்ளார். பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலைத்  தெளிவாக வரையறை செய்துள்ளார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.
'''தொல்காப்பியம்''' தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல். இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் 1610 நூற்பாக்களையும் உடையது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.  இவர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்கியுள்ளார். பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலைத்  தெளிவாக வரையறை செய்துள்ளார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுதான். 

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
Line 9: Line 9:

== உரை ==
== உரை ==
தொல்காப்பியத்துக்கு முதன்முதலில் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர். அவரைத் தொடர்ந்து சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், பேராசிரியர், கல்லாடர் எனப் பலரும் தொல்காப்பியத்திற்கு உரையெழுதி உள்ளனர்.
தொல்காப்பியத்துக்கு முதன்முதலில் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர். அவரைத் தொடர்ந்து சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், பேராசிரியர், கல்லாடர் எனப் பலரும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதி உள்ளனர்.

== பதிப்பு ==
== பதிப்பு ==

* மகாலிங்கையர் மழலை, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை, 1848.
*மகாலிங்கையர் மழலை, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை, 1848.
* சி.வை.இ தாமோதரம் பிள்ளை,  தொல்காப்பியம்-சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை, 1868.
* சி.வை.இ தாமோதரம் பிள்ளை,  தொல்காப்பியம்-சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை, 1868.
* சாமுவேல் பிள்ளை, தொல்காப்பியம் - நன்னூல் இரண்டையும் ஒத்த நூற்பாக்கள் அடிப்படையில் 1858 இல் பதிப்பித்துள்ளார்.
* சாமுவேல் பிள்ளை, தொல்காப்பியம் - நன்னூல் இரண்டையும் ஒத்த நூற்பாக்கள் அடிப்படையில் 1858 இல் பதிப்பித்துள்ளார்.
Line 25: Line 25:
*'''சொல்லதிகாரம் -''' திணைப்பாகுபாடும் பால்பாகுபாடும் இதில் பேசப்பட்டுள்ளது. தமிழ்த்  தொடர்களின் அமைப்புமுறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
*'''சொல்லதிகாரம் -''' திணைப்பாகுபாடும் பால்பாகுபாடும் இதில் பேசப்பட்டுள்ளது. தமிழ்த்  தொடர்களின் அமைப்புமுறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
* '''பொருளதிகாரம் -''' அகம், புறம்; களவு, கற்பு போன்ற தமிழ்ப் பண்பாட்டில் நிலவும் தனிச்சிறப்பான கூறுகளை முன்வைத்து அவற்றுக்குரிய இலக்கணத்தைத் தெரிவித்துள்ளது. செய்யுள் இயற்றும் முறையையும் பா வகைகளையும் எட்டு வகையான மெய்ப்பாடுகளையும் விளக்குகிறது. உயிரினப் பாகுபாடும் இக்கால அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இலக்கிய வகைமைகளையும் படைப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய 27 உத்திகளையும் தெரிவித்துள்ளது.

தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒன்பது இயல்கள் என மொத்தம் 27 இயல்களை உள்ளன.
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒன்பது இயல்கள் என மொத்தம் 27 இயல்கள் உள்ளன.

* '''எழுத்ததிகாரம் -''' நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல்,  புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல்.   
* '''எழுத்ததிகாரம் -''' நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல்,  புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல்.   
Line 33: Line 33:
== மொழிபெயர்ப்பு ==
== மொழிபெயர்ப்பு ==
[[File:தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு - 1937.jpg|thumb|தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு - 1937]]
[[File:தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு - 1937.jpg|thumb|தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு - 1937]]
பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரி ( டாக்டர் P. S. சுப்பிரமணிய சாஸ்திரி) 1937இல் தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  
 
* பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரி ( டாக்டர் P. S. சுப்பிரமணிய சாஸ்திரி) 1937இல் தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  
* செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் டிசம்பர் 22, 2021இல் தொல்காப்பியத்தை இந்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது. 

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 40: Line 42:
* https://www.bbc.com/tamil/arts-and-culture-59758537
* https://www.bbc.com/tamil/arts-and-culture-59758537
* http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l4.htm
* http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l4.htm
*https://www.hindutamil.in/news/opinion/columns/657629-tholkappiyam.html

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:02, 11 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

தொல்காப்பியம் - ஓலைச்சுவடி

தொல்காப்பியம் தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல். இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் 1610 நூற்பாக்களையும் உடையது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்கியுள்ளார். பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலைத் தெளிவாக வரையறை செய்துள்ளார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுதான்.

ஆசிரியர்

தொல்காப்பியம் நூலில் சிறப்புப்பாயிரம் உள்ளது. இதனை எழுதியவர் பனம்பாரனார். அந்தச் சிறப்புப் பாயிரத்தில் இந்த நூலை எழுதியவர் தொல்காப்பியர் என்றும் இந்த இலக்கண நூல் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ அவையில், அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து வழக்கு, செய்யுள் ஆகிய இரண்டையும் தழுவி நூல் செய்தார் என்றும் அவருக்கு ‘ஐந்திரம்’ என்ற வடமொழி இலக்கண நூலில் சிறந்த பயிற்சி உண்டு என்றும் அந்தச் சிறப்புப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார். இவற்றைத் தவிர தொல்காப்பியரைப் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை. பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்கள் சிலர், ‘தொல்காப்பியர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்’ என்கின்றனர்.

உரை

தொல்காப்பியத்துக்கு முதன்முதலில் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர். அவரைத் தொடர்ந்து சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், பேராசிரியர், கல்லாடர் எனப் பலரும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதி உள்ளனர்.

பதிப்பு

  • மகாலிங்கையர் மழலை, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை, 1848.
  • சி.வை.இ தாமோதரம் பிள்ளை, தொல்காப்பியம்-சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை, 1868.
  • சாமுவேல் பிள்ளை, தொல்காப்பியம் - நன்னூல் இரண்டையும் ஒத்த நூற்பாக்கள் அடிப்படையில் 1858 இல் பதிப்பித்துள்ளார்.

இப்பதிப்புக்களுக்குப் பின்னர் பலர் தொல்காப்பியத்தை விரிவாக ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டு இருக்கின்றார்கள். உ.வே. சாமிநாதையர், வ.உ. சிதம்பரனார், ரா. இராக வையங்கார், கா. நமச்சிவாய முதலியார், கா. சுப்பிரமணியபிள்ளை P.S. சுப்பிரமணிய சாஸ்திரி, சி. கணேசையர், ச. சோமசுந்தர பாரதியார் எனப் பலரும் தொல்காப்பியத்தைப் பதிப்பித்துள்ளனர்.

நூல் அமைப்பு

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களை உடையது.

  • எழுத்ததிகாரம் - இதில் தமிழ் எழுத்துகள், அவற்றை ஒலிக்கும் முறை, அவற்றின் வரிவடிவம் ஆகியன இக்கால மொழியியல் கண்ணோட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நிலைமொழி - வருமொழி இணையும் முறை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
  • சொல்லதிகாரம் - திணைப்பாகுபாடும் பால்பாகுபாடும் இதில் பேசப்பட்டுள்ளது. தமிழ்த் தொடர்களின் அமைப்புமுறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
  • பொருளதிகாரம் - அகம், புறம்; களவு, கற்பு போன்ற தமிழ்ப் பண்பாட்டில் நிலவும் தனிச்சிறப்பான கூறுகளை முன்வைத்து அவற்றுக்குரிய இலக்கணத்தைத் தெரிவித்துள்ளது. செய்யுள் இயற்றும் முறையையும் பா வகைகளையும் எட்டு வகையான மெய்ப்பாடுகளையும் விளக்குகிறது. உயிரினப் பாகுபாடும் இக்கால அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இலக்கிய வகைமைகளையும் படைப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய 27 உத்திகளையும் தெரிவித்துள்ளது.

தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒன்பது இயல்கள் என மொத்தம் 27 இயல்கள் உள்ளன.

  • எழுத்ததிகாரம் - நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல்.
  • சொல்லதிகாரம் - கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு, பெயரியல், வினை இயல், இடையியல், உரியியல், எச்சவியல்.
  • பொருளதிகாரம் - அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்.

மொழிபெயர்ப்பு

தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு - 1937
  • பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரி ( டாக்டர் P. S. சுப்பிரமணிய சாஸ்திரி) 1937இல் தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் டிசம்பர் 22, 2021இல் தொல்காப்பியத்தை இந்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

உசாத்துணை