first review completed

ஓரிற்பிச்சையார்: Difference between revisions

From Tamil Wiki
Line 6: Line 6:
====== பாடல்வழி அறியவரும் செய்திகள் ======
====== பாடல்வழி அறியவரும் செய்திகள் ======
* தலைவன் இல்லாத வீட்டிலுள்ள தலைவியர் இரவல் இடும் வழக்கமில்லை.
* தலைவன் இல்லாத வீட்டிலுள்ள தலைவியர் இரவல் இடும் வழக்கமில்லை.
* நாயகள் காவலுக்கு இல்லாத வீடு இருக்கும் குற்றமற்ற/மாசு இல்லாத தெருவைக் கொண்ட ஊர் இருந்திருக்கிறது.
* நாய்கள் காவலுக்கு இல்லாத வீடு இருக்கும் குற்றமற்ற/மாசு இல்லாத தெருவைக் கொண்ட ஊர்.
* செந்நெல் சோற்று உருண்டையுடன் மிக வெண்மையான வெண்ணெ கலந்து பிச்சை பெறுபவர்க்கு இடும் வழக்கமும், பனிகாலத்துக்கு ஏற்ப அவர்களுக்கு வெந்நீர் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.
* செந்நெல் சோற்று உருண்டையுடன் மிக வெண்மையான வெண்ணெ கலந்து பிச்சை பெறுபவர்க்கு இடும் வழக்கமும், பனிகாலத்துக்கு ஏற்ப அவர்களுக்கு வெந்நீர் வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.
 
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
* குறுந்தொகை: 277
* குறுந்தொகை: 277

Revision as of 14:00, 2 March 2023

ஓரிற்பிச்சையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இவரது பெயர் தெரியவில்லை. இவர் பாடலில் பயின்று வரும் 'ஓரிற் பிச்சை' என்ற வார்த்தையின் சிறப்பு கருதி 'ஓரிற் பிச்சையார்' என்று குறுந்தொகையைத் தொகுத்த அறிஞர்கள் அழைத்தனர்.

இலக்கிய வாழ்க்கை

ஓரிற்பிச்சையார் குறுந்தொகையில் 277-வது பாடல் பாடினார். பாலைத்திணைப்பாடல். தோழி கூற்றாக அமைந்துள்ள பாடல். தலைவனின் பருவ வரவு குறித்து தோழி அறிவரை அணுகிக் கேட்டு அவர் கூறுவதாக அமைந்த பாடல்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • தலைவன் இல்லாத வீட்டிலுள்ள தலைவியர் இரவல் இடும் வழக்கமில்லை.
  • நாய்கள் காவலுக்கு இல்லாத வீடு இருக்கும் குற்றமற்ற/மாசு இல்லாத தெருவைக் கொண்ட ஊர்.
  • செந்நெல் சோற்று உருண்டையுடன் மிக வெண்மையான வெண்ணெ கலந்து பிச்சை பெறுபவர்க்கு இடும் வழக்கமும், பனிகாலத்துக்கு ஏற்ப அவர்களுக்கு வெந்நீர் வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை: 277

திணை: பாலை.

கூற்று : தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது.

ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரிற் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவ தென்றி
அக்கால் வருவரெங் காத லோரே.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.