being created

சி. கணபதிப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
Line 28: Line 28:
கவிசமயம் என ஒரு சமயம் புலவர்களுக்கு உண்டு என சி. கணபதிப் பிள்ளை சொன்னார். அந்தச் சமயம் சைவ சமயம் முதலிய சமய வகைகளைச் சேராதது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவ பருவம் நோக்கி நன்றாகக் கனிந்துவிட்டது என்று கண்டபொழுது, ஏற்ற சந்தர்ப்பங்கள் பாத்திரங்களை நாடி அதனை இன்னும் இன்னும் பொறாது, பொறுக்க முடியாது கருவுயிர்த்தற்கு, சொல்லுருவத்திற் கண்டுகளித்தற்கு - முகஞ் செய்கின்றான். அம் முகத்திற்குக் கவிசமயம் என்று பெயர் வைத்துக் கொள்வோம் என்கிறார் சி. கணபதிப் பிள்ளை

== பல்கலைக்கழகக் கௌரவப் பட்டங்கள் ==
== பல்கலைக்கழகக் கௌரவப் பட்டங்கள் ==
* இலங்கைப் பல்கலைக்கழகம் 1978, மே 31 ஆம் நாள் இலக்கியக் கலாநிதி என்ற கௌரவப்பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
* 1951-ல் தமிழ்ப்புலமையைப் பாராட்டி ‘பண்டிதமணி’ பட்டம் வழங்கப்பட்டது.
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1978 ஆகஸ்ட் 14 ஆம் நாள் அன்றைய துணைவேந்தர் சு. வித்தியானந்தன் இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கௌரவித்தார்.
* இலங்கைப் பல்கலைக்கழகம் மே 31, 1978-ல் ’இலக்கியக் கலாநிதி’ என்ற கௌரவப்பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14, 1978-ல் அன்றைய துணைவேந்தர் சு.வித்தியானந்தன் இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கௌரவித்தார்.
 
== மறைவு ==
== மறைவு ==
பண்டிதமணி கணபதிப்பிள்ளை 1986 மார்ச் 13 வியாழக்கிழமை தின்னவேலியில் உள்ள அவரது இல்லத்தில் தனது 86-வது அகவையில் காலமானார்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை 1986 மார்ச் 13 வியாழக்கிழமை தின்னவேலியில் உள்ள அவரது இல்லத்தில் தனது 86-வது அகவையில் காலமானார்.

Revision as of 13:10, 1 January 2023

சி.கணபதிப்பிள்ளை
சி.கணபதிப்பிள்ளை
சி.கணபதிப்பிள்ளை
சி.கணபதிப்பிள்ளை

சி. கணபதிப் பிள்ளை (27 ஜூன் 1899 - 13 மார்ச் 1986) ஈழத்துத் தமிழறிஞர், சைவ அறிஞர். சிற்றிலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றை எழுதியவர். சொற்பொழிவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர்.

பிறப்பு, கல்வி

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி, தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை இணையருக்குப் பிறந்தார். இளமைப்பெயர் சட்ட நாதர். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர், 13வது வயதில் தந்தையாருடன் தனங்கிளப்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலானந்தர் போன்ற அறிஞர்களிடம் கல்வி கற்றார். அ. குமாரசுவாமிப் புலவர்ரிடம் சைவக் கல்வியை மரபு முறைப்படி கற்றார். 1926 ஆம் ஆண்டில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத் தேர்வில் வென்று பண்டிதர் பட்டம் பெற்றார். ஏ. பெரியதம்பிப்பிள்ளை இவரது சகமாணவர்.

தனிவாழ்க்கை

லோச் செல்லப்பாவின் தூண்டுதலால் மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் காவிய வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார். கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற கணபதிப்பிள்ளை 1929 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். முப்பது ஆண்டுகாலம் அங்கு பணியாற்றி பண்டிதர் பரம்பரையைத் தோற்றுவித்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • யாழ்ப்பாணம் கலாநிலையம், அங்கிருந்து வெளியான கலாநிதி இதழ், யாழ்ப்பாணம் ஆரிய–திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், சைவ வித்தியா விருத்திச் சங்கம், யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ், தமிழாசிரியர் சங்கம், சைவ பரிபாலன் சபை, இந்து வாலிபர் சங்கம் முதலிய அமைப்புகளில் பங்கு பெற்று செயல்பட்டார்.
  • இலங்கை சாகித்திய மண்டலத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.
திருநெல்வேலி ஈரப்பலா சங்கம் =

காவியபாடசாலையில் சி. கணபதிப் பிள்ளை பயிலும்போது அங்குள்ள ஓர் பலாமரத்தடியில் கூடி காவிய விவாதம் செய்வதுண்டு. அது 'திருநெல்வேலி ஈரப்பலா சங்கம்’ என அழைக்கப்பட்டது. மாணவர்களுடன் உரையாட அதை சி. கணபதிப் பிள்ளை பயன்படுத்திக்கொண்டார்.

இலக்கியவாழ்க்கை

சொற்பொழிவு

1951-இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் சி. கணபதிப் பிள்ளை தமிழ் என்ற பொருளில் ஆற்றிய உரை தமிழக அறிஞர்களால் பாராட்டப்பட்டது. அந்த உரையை வெளியிட்ட தினகரன் இதழ் அவருக்கு ’பண்டிதமணி’ என்ற பட்டத்தை அளித்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை வானொலி சி. கணபதிப் பிள்ளையின் இலக்கிய உரைகளை ஒலிபரப்பியது.

நல்லூர் ஆறுமுக நாவலர் மீது மிகுந்த பற்றுக் கொண்டு அவர் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவற்றை எழுதினார் சி. கணபதிப் பிள்ளை. சிதம்பரம் கும்பாபிசேக மலரில் சுவாமி ஞானப்பிரகாசர் குறித்தும் கலைமகள் மலரில் பஞ்ச கன்னிகைகள் குறித்தும் எழுதினார். ஈழகேசரி, தினகரன் ஆகிய இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதியுள்ளார்.

உரையாசிரியர்

சி. கணபதிப் பிள்ளை எழுதிய கந்தபுராணம் தஷகாண்ட உரை என்னும் நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது.

கவிச்சமயம்

கவிசமயம் என ஒரு சமயம் புலவர்களுக்கு உண்டு என சி. கணபதிப் பிள்ளை சொன்னார். அந்தச் சமயம் சைவ சமயம் முதலிய சமய வகைகளைச் சேராதது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவ பருவம் நோக்கி நன்றாகக் கனிந்துவிட்டது என்று கண்டபொழுது, ஏற்ற சந்தர்ப்பங்கள் பாத்திரங்களை நாடி அதனை இன்னும் இன்னும் பொறாது, பொறுக்க முடியாது கருவுயிர்த்தற்கு, சொல்லுருவத்திற் கண்டுகளித்தற்கு - முகஞ் செய்கின்றான். அம் முகத்திற்குக் கவிசமயம் என்று பெயர் வைத்துக் கொள்வோம் என்கிறார் சி. கணபதிப் பிள்ளை

பல்கலைக்கழகக் கௌரவப் பட்டங்கள்

  • 1951-ல் தமிழ்ப்புலமையைப் பாராட்டி ‘பண்டிதமணி’ பட்டம் வழங்கப்பட்டது.
  • இலங்கைப் பல்கலைக்கழகம் மே 31, 1978-ல் ’இலக்கியக் கலாநிதி’ என்ற கௌரவப்பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14, 1978-ல் அன்றைய துணைவேந்தர் சு.வித்தியானந்தன் இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கௌரவித்தார்.

மறைவு

பண்டிதமணி கணபதிப்பிள்ளை 1986 மார்ச் 13 வியாழக்கிழமை தின்னவேலியில் உள்ள அவரது இல்லத்தில் தனது 86-வது அகவையில் காலமானார்.

நினைவுகள்

  • மட்டுவில் கிராமத்தில் கணபதிப்பிள்ளை நினைவாகப் பண்டிதமணி மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 1999 இல் மட்டுவில் இந்து இளைஞர் மன்றத்தினர் நூற்றாண்டு விழா எடுத்துக் கௌரவித்தனர்.
  • மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் பண்டிதமணி அவர்களுக்கு உருவச்சிலை ஒன்றைப் பாடசாலை வளவில் நிறுவியுள்ளனர்.
  • 1999 ஆம் ஆண்டில் இலங்கை அரசு பண்டிதமணிக்கு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது.
மதிப்பீட்டு நூல்கள்,வாழ்க்கை வரலாறுகள்

இலக்கிய இடம்

"யாழ்ப்பாணக் கலாசாரத் தூதுவராகவும், கல்வித் தூதுவராகவும் விளங்கிய பண்டிதமணியவர்கள், ஆறுமுக நாவலரைப் போல ஈழத்தில் தமக்கென அறிஞர் குழாம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்." என யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் மதிப்பிடுகிறார். ஈழ இலக்கியச் சூழலில் ஆறுமுக நாவலர் உருவாக்கிய சைவத்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தவர் என்னும் இடம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு உண்டு

நூல்கள்

  • கண்ணகி தோத்திரம்
  • கதிர்காம வேலவன் பவனி வருகிறான்
  • இலக்கிய வழி
  • சைவ நற்சிந்தனைகள்
  • பாரத நவமணிகள்
  • கந்த புராண கலாசாரம்
  • கந்த புராண போதனை
  • சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவைகள்
  • இருவர் யாத்திரிகர்
  • சமயக் கட்டுரைகள்
  • இலக்கிய வழி
  • கம்பராமாயணக் காட்சிகள்
  • கந்தபுராணம் தட்சகாண்டம் உரை
  • நாவலர்
  • சிந்தனைச் செல்வம்
  • நாவலரும் கோயிலும்
  • சிந்தனைக் களஞ்சியம்
  • கோயில்
  • ஆறுமுக நாவலர்
  • அன்பினைந்திணை
  • அத்வைத சிந்தனை
  • செந்தமிழ்க் களஞ்சியம்
  • ஒளவை குறள் (மூலமும் தெளிவுரையும்)
  • பத்தினி வழிபாடு

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.