under review

ஹென்றி கிரிஸ்ப்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Category Category:கிறிஸ்தவ மதபோதகர்கள் சேர்க்கப்பட்டது)
Line 32: Line 32:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கிறிஸ்தவ மதபோதகர்கள்]]

Revision as of 21:08, 31 December 2022

To read the article in English: Henry Crisp. ‎

ஹென்றி கிரிஸ்ப் சமாதி, சேலம்

ஹென்றி கிரிஸ்ப் (1803 - 1831) (Henry Crisp) தமிழகத்தில் மக்கள்பணி ஆற்றிய லண்டன்மிஷன் மதப்பரப்புநர். சேலம் நகரில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு அரும்பணி ஆற்றியவர்.

கிரிஸ்ப் சமாதிக்கு கனேடிய தூதுக்குழு

பிறப்பு, கல்வி

ஹென்றி கிரிஸ்ப் ஜூலை 14, 1803-ல் இங்கிலாந்தில் ஹெர்ட்ஃபோர்ட் (Hertfotd) என்னும் ஊரில் ஜான் கிரிஸ்ப் (John Crisp) மற்றும் மேரி வொர்ஸ்லே ( Mary Worsley) இணையருக்குப் பிறந்தார். ஹோக்ஸ்டன் (Hoxton) மிஷன் கல்லூரியில் பட்டம்பெற்றார்

தனிவாழ்க்கை

ஹென்றி கிரிஸ்ப் எலிஸா ஸ்டெஃபி(Eliza Steffe)யை மணந்தார். மார்ச் 20, 1827-ல் நார்விச் (Norwich )நகரில் குருப்பட்டம் பெற்றார். கிரிஸ்ப் இணையருக்கு ஒரு மகள். எலிஸா வொர்ஸ்லே கிரிஸ்ப் (Eliza Worsley Crisp) 1829-ல் சேலத்தில் பிறந்தார். 1910-ல் எலிசா லண்டனில் மறைந்தார்.

மதப்பணிகள், கல்விப்பணிகள்

ஆந்திரமாநிலம் கடப்பாவில் மதகுருவாக நியமனம் பெர்று ஏப்ரல் மாதம் 1827-ல் கிளம்பி ஜூலை 17, 1827-ல் சென்னை வந்தார். கடப்பாவில் சிலகாலம் பணியாற்றியபின் தமிழகத்தில் சேலம் நகருக்கு அனுப்பப்பட்டார். சேலம் நகரின் முதல் கிறிஸ்தவ மதப்பணியாளர் கிரிஸ்ப்தான். சேலத்தின் முதல் ஆங்கிலக் கல்விநிலையத்தை கட்டினார். முதல் ஆங்கில மருத்துவமனையையும் அமைத்தார்.

ஆனால் நான்காண்டுகளே கிரிஸ்ப் பணியாற்ற முடிந்தது. சேலம் நகரில் அன்று தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்த தொற்றுநோய்களால் அவரும் பாதிக்கப்பட்டார். பெரும்பாலான நோயாளிகள் அவருடைய திருச்சபை வளாகத்துக்குள் மருத்துவம் பார்க்க வந்தமையால் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மே 7, 1829-ல் அவர் மனைவி எலிசா பிரசவத்தின்போது மறைந்தார். அடுத்த ஆண்டு கிரிஸ்ப் மறைந்தார். அவர் மகள் எலிஸா லண்டன் மிஷன் சொசைட்டியால் வளர்க்கப்பட்டார்

மறைவு

கிரிஸ்ப் அக்டோபர் 28, 1831-ல் மறைந்தார்.

கிரிஸ்ப் சமாதி

பழைய கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சிஎஸ்ஐ கல்லறைத்தோட்டத்தில் கிரிஸ்பின் சமாதி உள்ளது. பிப்ரவரி 5, 2007-ல் கனடாவைச் சேர்ந்த மைக்கேல் காப்பர் மற்றும் அவர் சகோதரி காதரைன் இருவரும் அதை கண்டடைந்து மலரஞ்சலி செலுத்தினர்.

கொடை

கிரிஸ்ப் எழுதிய அன்றாடக்குறிப்பு இணைய சேகரிப்பில் உள்ளது. சேலம் வரலாற்றாய்வாளர்களுக்கு அரிய தகவல்களஞ்சியம் இது - Journal of Henry Crisp, Salem (soas.ac.uk)

உசாத்துணை


✅Finalised Page