under review

எழுதுக (கட்டுரைத் தொகுப்பு): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Removed non-breaking space character)
Line 21: Line 21:
. ஒவ்வொரு கட்டுரையும் ஒரே உட்பொருளைக் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.  

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
புதிதாகத் தீவிர இலக்கியங்களை வாசிக்க நுழையும் இளம் வாசகருக்கும், புதிதாகத் தீவிர இலக்கியங்களைப் படைக்க முயற்சி செய்யும் இளம் எழுத்தாளர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கையேடு. இது அவர்களின் வாசிப்புப் பாதையும் எழுத்து நடையையும் நெறிப்படுத்த உதவும். மூத்த வாசகர்களும் எழுத்தாளர்களும் தங்களின் பாதையைப் பின்னோக்கிப் பார்த்து, தாம் சரியான பாதை வழியாகத்தான் வாசிப்புலகத்துக்குள் நுழைந்துள்ளோமா, எழுத்துத்தளத்துக்கு வந்துள்ளோமா என்பதைச் சுயபரிசீலனை செய்துகொள்வதற்கும், மறுபரிசீலனை செய்துகொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். அந்த வகையில், இந்தப் புத்தகம் இலக்கிய வாசிப்புச் செயல்பாடு, இலக்கியப் படைப்புச் செயல்பாடு ஆகியனவற்றுக்கு அணிவாயிலாக உள்ளது.       

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:49, 31 December 2022

'எழுதுக’ (கட்டுரைத் தொகுப்பு)

'எழுதுக’ (கட்டுரைத் தொகுப்பு) இளம் வாசகர்களுக்கும் புதிய படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய அனுபவ அறிவுரைகளின் தொகுப்பு . வினா - விடை அமைப்பில் உள்ள இந்நூலில். ஒவ்வொரு வினாவுக்கும் ஜெயமோகன் கட்டுரை வடிவில் விடையளித்துள்ளார். இந்தக் கட்டுரைகள் 15 பொதுத்தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தை வாசிக்க நுழைபவர்களுக்கும் இலக்கியத்தைப் படைக்க விரும்புவோருக்கும் இந்த நூல் ஒரு கையேடு.

உருவாக்கம், வெளியீடு

'எழுதுக’ என்ற கட்டுரைத் தொகுப்பினைத் தன்னறம் பதிப்பகம் 2022-ல் வௌியிட்டது.

நூல் அமைப்பு

'எழுதுக’ என்ற கட்டுரைத்தொகுப்பு 15 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. அவை,

  • புது எழுத்தாளனின் பயிற்சி
  • இளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா?
  • எழுதும் கனவு, 4. எழுத்தும் உழைப்பும்
  • எழுதுக
  • எழுத்தாளர்களைக் கொண்டாடலாமா
  • ஆடைகளைதல்
  • கனவெழுக,
  • கலையும் பகுத்தறிவும்,
  • எழுத்தாளர்களைச் சந்தித்தல்,
  • சொல் தேர்தல்
  • இலக்கிய வாசகனின் பயிற்சி
  • தீவிரவாதமும் இலட்சியவாதமும்
  • அறிவியக்கவாதியின் உடல்
  • கல்வியழிதல்

. ஒவ்வொரு கட்டுரையும் ஒரே உட்பொருளைக் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இலக்கிய இடம்

புதிதாகத் தீவிர இலக்கியங்களை வாசிக்க நுழையும் இளம் வாசகருக்கும், புதிதாகத் தீவிர இலக்கியங்களைப் படைக்க முயற்சி செய்யும் இளம் எழுத்தாளர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கையேடு. இது அவர்களின் வாசிப்புப் பாதையும் எழுத்து நடையையும் நெறிப்படுத்த உதவும். மூத்த வாசகர்களும் எழுத்தாளர்களும் தங்களின் பாதையைப் பின்னோக்கிப் பார்த்து, தாம் சரியான பாதை வழியாகத்தான் வாசிப்புலகத்துக்குள் நுழைந்துள்ளோமா, எழுத்துத்தளத்துக்கு வந்துள்ளோமா என்பதைச் சுயபரிசீலனை செய்துகொள்வதற்கும், மறுபரிசீலனை செய்துகொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். அந்த வகையில், இந்தப் புத்தகம் இலக்கிய வாசிப்புச் செயல்பாடு, இலக்கியப் படைப்புச் செயல்பாடு ஆகியனவற்றுக்கு அணிவாயிலாக உள்ளது.

உசாத்துணை

அகத்திறப்பின் வாசல்

எழுதுக!

✅Finalised Page