being created

நாச்சியார் திருமொழி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய நாயகி பாவம் கொண்ட 143 பாடல்களைக் கொண்ட நூல். கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட காதலையும், அவளது பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்துவன.  
நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய நாயகி பாவம் கொண்ட 143 பாடல்களைக் கொண்ட நூல். கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட காதலையும், அவளது பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்துவன. பக்திச் சுவையும்  பெண்ணின் அகமொழியின் கட்டற்ற  வெளிப்பாடும் நாச்சியார் திருமொழியின் சிறப்புகள்.  
== ஆசிரியர் ==
 
நாச்சியார் திருமொழியை இயற்றியவர் பெரியாழ்வாரின் புதல்வியும், பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்]]களில் ஒரே பெண் ஆழ்வாருமான [[ஆண்டாள்]]. ஆண்டாள் இயற்றிய இரு பிரபந்தங்களான [[திருப்பாவை]]யும் நாச்சியார் திருமொழியும்<ref>திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே”
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே”
ஆண்டாளின் வாழி திருநாமம் </ref> நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் இடம்பெறுகின்றன.'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என அழைக்கப்பட்ட ஆண்டாள் திருமாலின் அவதாரமான கண்ணனின் மேல் கொண்ட பக்தியாலும், காதலாலும் அவனை அடைய வேண்டி பாவை நோன்பிருந்து இயற்றியது திருப்பாவை. நாச்சியார் திருமொழி திருப்பாவை முடிந்த இடத்தில் தொடங்குகிறது என வைணவ அறிஞர்கள் கருதுகின்றனர். நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143-ம் பக்திப் பனுவல்கள் மட்டுமல்ல; அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை; இலக்கிய மரபுகளைப் பதிவு செய்துள்ள வரலாற்றுச் சிறப்புக்குரியவை. தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. பெண்ணின் அகமொழியும், அகவெளியும் பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல் கட்டற்று வெளிப்படும் ஓர் படைப்பாகவும் விளங்குகிறது.  
ஆண்டாளின் வாழி திருநாமம் </ref> நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் இடம்பெறுகின்றன.'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என அழைக்கப்பட்ட ஆண்டாள் திருமாலின் அவதாரமான கண்ணனின் மேல் கொண்ட பக்தியாலும், காதலாலும் அவனை அடைய வேண்டி பாவை நோன்பிருந்து இயற்றியது திருப்பாவை. நாச்சியார் திருமொழி திருப்பாவை முடிந்த இடத்தில் தொடங்குகிறது என வைணவ அறிஞர்கள் கருதுகின்றனர். நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143-ம் பக்திப் பனுவல்கள் மட்டுமன்றி அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை.தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. பெண்ணின் அகமொழியும், அகவெளியும் பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல் கட்டற்று வெளிப்படும் ஓர் படைப்பாகவும் விளங்குகிறது.  
== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
நாச்சியார் திருமொழியில் உள்ள 143 பாசுரங்களை 14 பதிகங்களாக ஆண்டாள் இயற்றியுள்ளார். 143 பாடல்களும் அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடி ஆசிரியப்பாக்களாலும் கலிப்பாக்களாலும் ஆனவை. காமனிடம் வேண்டுதல் ,  கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது , அழகருக்குப் பாடிய பாடல்கள் ,திருமணக் கனவு , பிரிவாற்றாமை , வேதனை, தன்னை பிருந்தாவனத்திலோ, துவாரகையிலோ கண்ணன் இருக்குமிடம் சென்று சேர்க்கும்படி உற்றாரிடம் வேண்டல்  

நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணபிம்பம்,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, அவளின் இளமை உணர்வுகள்விழித்துக்கொண்ட நிலையில்,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.
நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணன் எனும் பிம்பம் ,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, ,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.
===== தையுறு திங்களும்-முதல்பத்து =====
===== தையுறு திங்களும்-முதல்பத்து =====
தை முதல் நாளில் காமனைத் தொழுது, நோன்பிருந்து கண்ணனுடன் இணைய வேண்டும் என்ற வரத்தைக் கோரும் பத்து பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களாக அமைந்தவை
தை முதல் நாளில் காமனைத் தொழுது, நோன்பிருந்து கண்ணனுடன் இணைய வேண்டும் என்ற வரத்தைக் கோரும் பத்து பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களாக அமைந்தவை
Line 18: Line 18:
===== தெள்ளியார்பலர்- நீ கூடிடு கூடலே- நான்காம்பத்து =====
===== தெள்ளியார்பலர்- நீ கூடிடு கூடலே- நான்காம்பத்து =====
நான்காம் பத்து கண்ணன் வரக் காத்திருந்த ஆண்டாள் கண்ணனை அடையும் தன் நோக்கம் நிறவேறுமா என அறிய கூடல் இழைத்துப் பார்ப்பதை கூறும் பத்து கலிவிருத்தங்களால் ஆனது. சங்க காலம் தொட்டே தலைவன் வருவானா என்ற ஐயத்தில்  [[கூடல் இழைத்தல்]] என்பது மரபாக இருந்தது.  ஆண்டாள் தன் தோழியருடன் 'கூடிடு கூடலே' என மஞ்சள் கிழங்குகளைக் கையில் அள்ளியெடுத்து அவற்றின் எண்ணிக்கை இரட்டைப்படையாக அமைந்தால் கண்ணன் வருவான் எனக் கூடல் இழைத்துப் பார்க்கிறாள்.  

# .

== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==

Revision as of 14:07, 30 December 2022

நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய நாயகி பாவம் கொண்ட 143 பாடல்களைக் கொண்ட நூல். கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட காதலையும், அவளது பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்துவன. பக்திச் சுவையும் பெண்ணின் அகமொழியின் கட்டற்ற வெளிப்பாடும் நாச்சியார் திருமொழியின் சிறப்புகள்.

நாச்சியார் திருமொழியை இயற்றியவர் பெரியாழ்வாரின் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாருமான ஆண்டாள். ஆண்டாள் இயற்றிய இரு பிரபந்தங்களான திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும்[1] நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் இடம்பெறுகின்றன.'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என அழைக்கப்பட்ட ஆண்டாள் திருமாலின் அவதாரமான கண்ணனின் மேல் கொண்ட பக்தியாலும், காதலாலும் அவனை அடைய வேண்டி பாவை நோன்பிருந்து இயற்றியது திருப்பாவை. நாச்சியார் திருமொழி திருப்பாவை முடிந்த இடத்தில் தொடங்குகிறது என வைணவ அறிஞர்கள் கருதுகின்றனர். நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143-ம் பக்திப் பனுவல்கள் மட்டுமன்றி அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை.தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. பெண்ணின் அகமொழியும், அகவெளியும் பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல் கட்டற்று வெளிப்படும் ஓர் படைப்பாகவும் விளங்குகிறது.

நூல் அமைப்பு

நாச்சியார் திருமொழியில் உள்ள 143 பாசுரங்களை 14 பதிகங்களாக ஆண்டாள் இயற்றியுள்ளார். 143 பாடல்களும் அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடி ஆசிரியப்பாக்களாலும் கலிப்பாக்களாலும் ஆனவை. காமனிடம் வேண்டுதல் ,  கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது , அழகருக்குப் பாடிய பாடல்கள் ,திருமணக் கனவு , பிரிவாற்றாமை , வேதனை, தன்னை பிருந்தாவனத்திலோ, துவாரகையிலோ கண்ணன் இருக்குமிடம் சென்று சேர்க்கும்படி உற்றாரிடம் வேண்டல்

நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணன் எனும் பிம்பம் ,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, ,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.

தையுறு திங்களும்-முதல்பத்து

தை முதல் நாளில் காமனைத் தொழுது, நோன்பிருந்து கண்ணனுடன் இணைய வேண்டும் என்ற வரத்தைக் கோரும் பத்து பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களாக அமைந்தவை

நாமமாயிரம்-இரண்டாம் பத்து

இரண்டாம் பத்து பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை. கண்ணனைக் கோபியர் தம் சிற்றில் வந்து சிதயேலே என வேண்டும் வகையில் அமைந்தவை.

கோழியழைப்பதன் -மூன்றாம் பத்து

மூன்றாம் பத்து தன்னையும் தன் தோழியரையும் கோபிகைகளாகப் பாவித்து, யமுனையில் நீராடும்போது தங்கள் ஆடைகளைக் கவர்ந்த கண்ணனை, அவற்றை திருப்பித் தர வேண்டுபவையாக அமைந்த பத்துஅறுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களைக் கொண்டது.

கண்ணா, இது என்ன மாயம், இந்தப் பொய்கைக்கு நீ எப்படி வந்தாய்? தேன் நிறைந்த திருத்துழாய் மாலையை அணிந்தவனே, பெரியவனே, மாயனே,  எங்கள் அமுதே, வித்தகனே, நீ செய்வது முறையல்ல. காளிங்கன் என்ற பாம்பின்மீது குதித்து நடனமாடியவனே, ஓடாதே, குருந்தமரத்தின்மீது நீ  வைத்துள்ள ஆடைகளைத் திரும்பக் கொடுத்துவிடு!

தெள்ளியார்பலர்- நீ கூடிடு கூடலே- நான்காம்பத்து

நான்காம் பத்து கண்ணன் வரக் காத்திருந்த ஆண்டாள் கண்ணனை அடையும் தன் நோக்கம் நிறவேறுமா என அறிய கூடல் இழைத்துப் பார்ப்பதை கூறும் பத்து கலிவிருத்தங்களால் ஆனது. சங்க காலம் தொட்டே தலைவன் வருவானா என்ற ஐயத்தில் கூடல் இழைத்தல் என்பது மரபாக இருந்தது. ஆண்டாள் தன் தோழியருடன் 'கூடிடு கூடலே' என மஞ்சள் கிழங்குகளைக் கையில் அள்ளியெடுத்து அவற்றின் எண்ணிக்கை இரட்டைப்படையாக அமைந்தால் கண்ணன் வருவான் எனக் கூடல் இழைத்துப் பார்க்கிறாள்.

அடிக்குறிப்புகள்

  1. திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே” ஆண்டாளின் வாழி திருநாமம்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.