under review

தெ.வே.ஜெகதீசன்: Difference between revisions

From Tamil Wiki
(Category:கல்வியாளர்கள் சேர்க்கப்பட்டது)
(Category:கல்வியாளர்கள் சேர்க்கப்பட்டது)
Line 20: Line 20:
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[]]
[[]]
[[Category:கல்வியாளர்கள்]]
Category:கல்வியாளர்கள்
Category:கல்வியாளர்கள்

Revision as of 20:42, 23 December 2022

தெ.வே.ஜெகதீசன்

To read the article in English: T V Jegatheesan. ‎


தெ.வே.ஜெகதீசன் ( 16 மே-1965) தமிழறிஞர், நாட்டாரியல் ஆய்வாளர், கல்வியாளர். நாகர்கோயில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றுகிறார்

பிறப்பு, கல்வி

தெரிசனங்கோப்பு வேலாயுதப் பெருமாள் ஜெகதீசன் டி.எஸ்.வேலாயுதப் பெருமாள் பிள்ளைக்கும் மாத்தம்மாளுக்கும் 16 மே-1965 ல் நாகர்கோயில் அருகே அருமநல்லூரில் பிறந்தார். அருமநல்லூர் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பூதப்பாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிநிறைவுக் கல்வியும் முடித்தார். தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுநிலைப் பட்டம் பெற்றார். தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் ஆய்வுநிறைஞர் (எம்ஃபில்) பட்டம் பெற்று பேராசிரியர் ஸ்ரீகுமாரின் கீழ் வலங்கை நூல்கதை ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் இலக்கியத்தையும் நாட்டாரியலையும் இணைத்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம்பெற்றார்.

தனிவாழ்க்கை

தெ.வே.ஜெகதீசன் 1997ல் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்து தமிழ்த்துறை தலைவராக பணிபுரிகிறார். மனைவி ஏ.நாகலட்சுமி. மகன் ராகவ் கார்த்திகேயன்.

கல்விப்பணி

தெ.வே.ஜெகதீசன் அ.கா. பெருமாளின் அணுக்க மாணவராக அவருடைய நாட்டாரியல் ஆய்வுகளில் உதவியிருக்கிறார். அ.கா.பெருமாளின் பெரும்பாலான நூல்களில் தெ.வே.ஜெகதீசன் ஆய்வுத்துணைவராக குறிப்பிடப்பட்டிருக்கிறார். முனைவர் மா. சுப்பிரமணியத்துடன் இணைந்து மொழியாக்கப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் இலக்கியக் கருத்தரங்குகள், செம்மொழி ஆய்வரங்குகளை நடத்திவருகிறார்

ஆய்வு

தெ.வே.ஜெகதீசனின் வலங்கை நூல் கதை என்னும் ஆய்வேடு பத்ரகாளியின் புத்திரர்கள் என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளது. தமிழக நாட்டார் காவியங்களிலொன்றான வெங்கலராசன் கதையின் முழுவடிவமும் அதையொட்டிய தொன்மங்களும் அந்நூலில் முதல்முறையாக வெளியிடப்பட்டு விரிவாக விவாதிக்கப்படுகின்றன

நூல்கள்

பத்ரகாளியின் புத்திரர்கள், தமிழினி பதிப்பகம்

உசாத்துணை


✅Finalised Page [[]] Category:கல்வியாளர்கள்