அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்: Difference between revisions
(→உரைகள்) |
(Corrected section header text) |
||
Line 37: | Line 37: | ||
''அழகியமணவாளன்தன் அடியிணைகள் வாழியே.'' | ''அழகியமணவாளன்தன் அடியிணைகள் வாழியே.'' | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | == உசாத்துணை == | ||
[https://guruparamparaitamil.wordpress.com/2017/03/30/azhagiya-manavala-perumal-nayanar/ குருபரம்பரைத் தமிழ்-அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்][https://srivaishnavagranthamstamil.wordpress.com/2017/12/21/thiruppavai-saram-by-nayanar/ நாயனார் அருளிய திருப்பாவை சாரம்] | [https://guruparamparaitamil.wordpress.com/2017/03/30/azhagiya-manavala-perumal-nayanar/ குருபரம்பரைத் தமிழ்-அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்][https://srivaishnavagranthamstamil.wordpress.com/2017/12/21/thiruppavai-saram-by-nayanar/ நாயனார் அருளிய திருப்பாவை சாரம்] | ||
Revision as of 09:06, 19 December 2022
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (ஜகத்குருவரானுஜர் ) வைணவ ஆசாரியர்களில் ஒருவர். பிள்ளை லோகாச்சார்யாரின் இளைய சகோதரர் .நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதியவர். ஆசார்ய ஹிருதயத்தை இயற்றியவர்.
பிறப்பு, இளமை
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வடக்கு திருவீதி பிள்ளைக்கு, மார்கழி மாத, அவிட்ட நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் பிள்ளை லோகாச்சார்யார். அதனால் 'ஜகத்குருவானுஜர்' (ஜகத்குருவின் இளைய சகோதரர்) என்ற பெயரும் உண்டு. தந்தையாரிடம் தமிழும், வடமொழியும், சமயநூல்களையும் கற்றார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருமணம் செய்துகொள்ளவில்லை.
உரைகள்
- திருப்பாவை ஆறாயிரப்படி வ்யாக்யானம் - திருப்பாவைக்கு விரிவான, நுணுக்கமான உரை. எம்பெருமானே அடையப்பட வேண்டியவனும் (உபேயத்வம்), அவனை அடைவதற்கு அவனே உபாயம் (உபாயத்வம்) இறைவனின் நிர்ஹேதுக க்ருபை (ஒரு காரணமுமின்றி காட்டும் கருணை), பிராட்டியின் புருஷகாரம் (அடியவனுக்காக எம்பெருமானிடம் பரிந்து பேசுவது), பரகத ஸ்வீகாரம், கைங்கர்யத்தில் களை (எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும்பொழுது ஏற்படும் விரோதி) முதலியவைகளைப் பற்றி மிகவும் தெளிவாக விவரித்துள்ளார்.
- அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அமலனாதிபிரான் உரை வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார் அனுபவித்த அரங்கனின் திருமேனியையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தையும் இணைத்து எடுத்துரைக்கப்பட்ட உரையாகும்.
- அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு உரை பஞ்சமோபாயத்தின் (ஆசார்யனே எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு கைங்கர்யம் செய்வது) சிறப்புகளை விளக்குகிறது.
- அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அருளிச்செயல் ரஹஸ்யம் என்ற க்ரந்தமானது ரஹஸ்ய த்ரயத்தை (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்), ஆழ்வார்களின் அருளிச்செயலான பாசுரங்களிலுள்ள சொற்களைக்கொண்டே விவரிக்கின்றது.
- நாயனாரின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த 'ஆசார்யஹ்ருதயம்' என்னும் நம்மாழ்வார் திருவாய்மொழி அருளியபோது அவருக்கிருந்த மனநிலையையும், திருவாய்மொழி மூலமாக ஆழ்வார் எடுத்துரைத்துள்ளதையும் ஆழ்வாரின் மனநிலையைக்கொண்டே தெளிவுபடுத்தியுள்ளார். 'ஆசார்ய ஹ்ருதயம்' பிள்ளை லோகாசார்யர் அருளிய “ஸ்ரீவசன பூஷணம்” என்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் தத்துவங்களை விவரிக்கின்றது.
சிறப்புகள்
மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்தின மாலை 47-ஆவது பாசுரத்தில் நாயனாரையும் அவருடைய க்ரந்தங்களையும் கீழ்வருமாறு சிறப்பித்திருக்கிறார்.
நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையேதம் சீரால்
வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும் சில
(பெரியவாச்சான் பிள்ளைக்கு முன்பே நஞ்சீயர் என்னும் ஆசார்யர் ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு உரை அருளியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளைக்குப் பின்பு, ஆத்ம குணங்கள் நிரம்பியவரும் பிள்ளை லோகாசார்யரின் அன்பு சகோதரருமான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார்.)
பிள்ளை லோகாச்சார்யார் தன் சகோதரன் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இறந்தபோது எழுதிய இரங்கற்பா
மாமுடும்பை மன்னு மணவாள அண்ணலொடு
சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்
மாம் என்று தொட்டுரைத்த சொல்லும்
துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்.
(நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? )
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வாழித்திருநாமம்
மன்னியசீர் மதிளரங்கம் மகிழ்வந்தோன் வாழியே
மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே
மின்னுபுகழ் ஆர்யமனம் மொழிந்தருள்வோன் வாழியே
மேன்மைமிகு திருப்பாவை விரித்துரைத்தான் வாழியே.
தன்னுரையில் உலகாரியன் திருவடியோன் வாழியே
ஸ்ரீக்ருஷ்ணபாதகுரு செல்வமைந்தன்தன் வாழியே!
அன்னபுகழ் முடும்பை நம்பிக்கன்புடையோன் வாழியே
அழகியமணவாளன்தன் அடியிணைகள் வாழியே.
உசாத்துணை
குருபரம்பரைத் தமிழ்-அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்நாயனார் அருளிய திருப்பாவை சாரம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.