மமங் தாய்: Difference between revisions
Line 2: | Line 2: | ||
[[File:சாகித்ய அக்காதமி விருது.jpg|thumb|சாகித்ய அக்காதமி விருது]] | [[File:சாகித்ய அக்காதமி விருது.jpg|thumb|சாகித்ய அக்காதமி விருது]] | ||
[[File:மமங் தாய் பத்மஸ்ரீ.jpg|thumb|பத்மஸ்ரீ]] | [[File:மமங் தாய் பத்மஸ்ரீ.jpg|thumb|பத்மஸ்ரீ]] | ||
மமங் தாய் (Mamang Dai) (23 பெப்ருவரி1957) அருணாச்சலப்பிரதேசத்து கவிஞர். ஆங்கில மொழியில் | மமங் தாய் (Mamang Dai) (23 பெப்ருவரி1957) அருணாச்சலப்பிரதேசத்து கவிஞர். மமங் தாயின் தாய்ழி ஆதி. ஆங்கில மொழியில் எழுதுகிறார். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
அருணாச்சல பிரதேசத்தில், கிழக்கு சியாங் மாவட்டத்தில், பாஸிகாட் (Pasighat) என்னும் ஊரில், ஆதி என்கிற பழங்குடி இனத்தில் ,மாடின் தாய் - ஓடின் தாய் இணையருக்கு 23 பெப்ருவரி1957 ல் பிறந்தவர் மமங் தாய். | அருணாச்சல பிரதேசத்தில், கிழக்கு சியாங் மாவட்டத்தில், பாஸிகாட் (Pasighat) என்னும் ஊரில், ஆதி என்கிற பழங்குடி இனத்தில் ,மாடின் தாய் - ஓடின் தாய் இணையருக்கு 23 பெப்ருவரி1957 ல் பிறந்தவர் மமங் தாய். | ||
Line 13: | Line 13: | ||
== அமைப்புப்பணிகள், பதவிகள் == | == அமைப்புப்பணிகள், பதவிகள் == | ||
* சர்வதேச இயற்கை நிதி (Worldwide Fund for Nature, WWF) ஆதரவில் கிழக்கு இமையமலைப் பகுதியின் பல்லுயிர்த்தளங்களை அடையாளம் கண்டு பேணும் பணியில் ஈடுபட்டார். | * சர்வதேச இயற்கை நிதி (Worldwide Fund for Nature, WWF) ஆதரவில் கிழக்கு இமையமலைப் பகுதியின் பல்லுயிர்த்தளங்களை அடையாளம் கண்டு பேணும் பணியில் ஈடுபட்டார். | ||
* டோன்யி போலோ ( Donyi- Polo Mission) அமைப்பின் சார்பாக கேட்டல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கல்விப்பணிகளில் ஈடுபட்டார். | |||
* இடாநகர் இதழாளர் சங்க செயலாளராக பணியாற்றினார் | * இடாநகர் இதழாளர் சங்க செயலாளராக பணியாற்றினார் | ||
* அருணாச்சலப்பிரதேச இதழாளர் சங்கம் (Arunachal Pradesh Union of Working Journalists (APUW)) தலைவாக இருந்தார் | * அருணாச்சலப்பிரதேச இதழாளர் சங்கம் (Arunachal Pradesh Union of Working Journalists (APUW)) தலைவாக இருந்தார் | ||
Line 20: | Line 21: | ||
* சங்கீத நாடக அக்காடமி டெல்லி யின் பொதுக்குழு உறுப்பினர்i. | * சங்கீத நாடக அக்காடமி டெல்லி யின் பொதுக்குழு உறுப்பினர்i. | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
மமங் தாய் அருணாச்சலப்பிரதேசத்தின் இலக்கிய முகமாக அறியப்படுகிறார். | மமங் தாய் அருணாச்சலப்பிரதேசத்தின் இலக்கிய முகமாக அறியப்படுகிறார். | ||
====== கவிதை ====== | ====== கவிதை ====== | ||
மமங் தாய் மென்மையான கற்பனாவாதக் கவிதைகள் எழுதத்தொடங்கி பின்னர் யதார்த்தவாத நோக்கில் சிறுகதை நாவல்களும் எழுதினார். 2004ல் வெளிவந்த ஆற்றங்கரைக் கவிதைகள் (River Poems) அவருக்கு இலக்கிய இடம் தேடித்தந்தது. ஐந்து கவிதைதத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. | மமங் தாய் மென்மையான கற்பனாவாதக் கவிதைகள் எழுதத்தொடங்கி பின்னர் யதார்த்தவாத நோக்கில் சிறுகதை நாவல்களும் எழுதினார். 2004ல் வெளிவந்த ஆற்றங்கரைக் கவிதைகள் (River Poems) அவருக்கு இலக்கிய இடம் தேடித்தந்தது. ஐந்து கவிதைதத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. | ||
====== நாவல் ====== | ====== நாவல் ====== | ||
மமங் தாயின் முதல் நாவல் பென்சாமின் தொன்மங்கள் (The Legends of Pensam) | மமங் தாயின் முதல் நாவல் பென்சாமின் தொன்மங்கள் (The Legends of Pensam) 2006 ல் வெளிவந்தது. தொடர்ந்து முட்டாள் க்யூபிட் (Stupid Cupid) 2008, கரிய குன்று (The Black Hill ) 2014 , தப்பிச்செல்லும் நிலம் (Escaping the Land ) 2021ஆகிய நாவல்கள் வெளிவந்தன. | ||
====== கட்டுரைகள் ====== | ====== கட்டுரைகள் ====== | ||
மமங் தாய் அருணாச்சலப் பிரதேசத்தின் பண்பாட்டை உலகப்பார்வைக்குக் கொண்டுசென்றவராக கருதப்படுகிறார். அவருடைய முதல் நூல் ’அருணாச்சலப் பிரதேசம் -மறைந்திருக்கும் நிலம்’ ( Arunachal Pradesh: The Hidden Land ) 2003 ல் வெளிவந்தது. மலை அறுவடை - அருணாச்சலப்பிரதேசத்தின் உணவு ( Mountain harvest : The Food of Arunachal) 2004 ல் வெளிவந்தது | மமங் தாய் அருணாச்சலப் பிரதேசத்தின் பண்பாட்டை உலகப்பார்வைக்குக் கொண்டுசென்றவராக கருதப்படுகிறார். அவருடைய முதல் நூல் ’அருணாச்சலப் பிரதேசம் -மறைந்திருக்கும் நிலம்’ ( Arunachal Pradesh: The Hidden Land ) 2003 ல் வெளிவந்தது. மலை அறுவடை - அருணாச்சலப்பிரதேசத்தின் உணவு ( Mountain harvest : The Food of Arunachal) 2004 ல் வெளிவந்தது | ||
====== நாட்டாரியல் ====== | ====== நாட்டாரியல் ====== | ||
மமங் தாய் வானரசி (The Sky Queen) ஒரு நிலவுப்பொழுதில் ( Once Upon a Moontime) ஆகியவை அருணாச்சல நாட்டுப்புறக் கதைகளின் ஓவியச்சித்தரிப்பு நூல்கள். | மமங் தாய் வானரசி (The Sky Queen) ஒரு நிலவுப்பொழுதில் ( Once Upon a Moontime) ஆகியவை அருணாச்சல நாட்டுப்புறக் கதைகளின் ஓவியச்சித்தரிப்பு நூல்கள். | ||
மமங் தாய் மறைந்து வரும் பழங்குடி கலாச்சாரத்தைப் பற்றி தேசிய, சர்வதேச மேடைகளில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து பேசிவருகிறார். | மமங் தாய் மறைந்து வரும் பழங்குடி கலாச்சாரத்தைப் பற்றி தேசிய, சர்வதேச மேடைகளில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து பேசிவருகிறார். | ||
== அழகியல் == | == அழகியல் == | ||
“உலகின் முணுமுணுப்புக்களை சுமந்து செல்லும் பத்தாயிரம் தூதுவர்களுள் நானும் ஒருத்தி” என்று தன் படைப்புளைப் பற்றி பேசும்போது மமங் தாய் சொல்கிறார். | “உலகின் முணுமுணுப்புக்களை சுமந்து செல்லும் பத்தாயிரம் தூதுவர்களுள் நானும் ஒருத்தி” என்று தன் படைப்புளைப் பற்றி பேசும்போது மமங் தாய் சொல்கிறார். | ||
Line 47: | Line 43: | ||
* 2017ம் ஆண்டு ‘கருப்பு மலை’ (the black hill) என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது. | * 2017ம் ஆண்டு ‘கருப்பு மலை’ (the black hill) என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது. | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
====== கட்டுரை ====== | ====== கட்டுரை ====== | ||
* Arunachal Pradesh: The Hidden Land (2003) | * Arunachal Pradesh: The Hidden Land (2003) | ||
* Mountain harvest : The Food of Arunachal (2004 | * Mountain harvest : The Food of Arunachal (2004 | ||
====== நாட்டாரியல் ====== | ====== நாட்டாரியல் ====== | ||
* The Sky Queen (2003) | * The Sky Queen (2003) | ||
* Once Upon a Moontime (2003) | * Once Upon a Moontime (2003) | ||
====== நாவல் ====== | ====== நாவல் ====== | ||
* The Legends of Pensam (2006) | * The Legends of Pensam (2006) | ||
* Stupid Cupid (2008) | * Stupid Cupid (2008) | ||
* The Black Hill (2014) | * The Black Hill (2014) | ||
* Escaping the Land (2021) | * Escaping the Land (2021) | ||
====== கவிதை ====== | ====== கவிதை ====== | ||
* River Poems (2004) | * River Poems (2004) | ||
* The Balm of Time (2008) | * The Balm of Time (2008) | ||
* Hambreelmai's Loom (2014) | * Hambreelmai's Loom (2014) | ||
* Midsummer Survi''val Lyrics'' (2014) | * Midsummer Survi''val Lyrics'' (2014) | ||
== உசாத்துணை == | |||
== | * [https://journals.flinders.edu.au/index.php/wic/article/view/23/19 In Conversation with Mamang Dai.Jaydeep Sarangi] | ||
* [https://web.archive.org/web/20180526193457/https://www.poetryinternationalweb.net/pi/site/poet/item/16974/27/Mamang-Dai மமங் தாய் வெப் ஆர்க்கேவ் தளம்] | |||
* [https://books.google.co.in/books?id=FWCiWWeRCU4C&pg=PA23&redir_esc=y#v=onepage&q&f=false மமங் தாய் அறிமுகம்] |
Revision as of 10:07, 7 December 2022
மமங் தாய் (Mamang Dai) (23 பெப்ருவரி1957) அருணாச்சலப்பிரதேசத்து கவிஞர். மமங் தாயின் தாய்ழி ஆதி. ஆங்கில மொழியில் எழுதுகிறார்.
பிறப்பு, கல்வி
அருணாச்சல பிரதேசத்தில், கிழக்கு சியாங் மாவட்டத்தில், பாஸிகாட் (Pasighat) என்னும் ஊரில், ஆதி என்கிற பழங்குடி இனத்தில் ,மாடின் தாய் - ஓடின் தாய் இணையருக்கு 23 பெப்ருவரி1957 ல் பிறந்தவர் மமங் தாய்.
மமங் தாய் மேகாலயாவில் ஷில்லாங் நகரில் பைன் மௌண்ட் பள்ளியில் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டத்தை அஸாமில் கௌகாத்தி பல்கலைக் கழகத்தில் முடித்தார்.
மமங் தாய் 1979ல் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வானார். அருணாச்சலப்பிரதேசத்தில் இருந்து குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அவரே . ஆனால் உடனடியாக அந்தப் பணியை துறந்தார்
ஊடகவியல்
மமங் தாய் இலக்கிய ஆர்வத்தால் குடிமைப்பணியை துறந்தார். டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ், செண்டினெல் ஆகிய இதழ்களில் இதழாளராகப் பணியாற்றினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் செய்தியாளராகவும், வானொலி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்
அமைப்புப்பணிகள், பதவிகள்
- சர்வதேச இயற்கை நிதி (Worldwide Fund for Nature, WWF) ஆதரவில் கிழக்கு இமையமலைப் பகுதியின் பல்லுயிர்த்தளங்களை அடையாளம் கண்டு பேணும் பணியில் ஈடுபட்டார்.
- டோன்யி போலோ ( Donyi- Polo Mission) அமைப்பின் சார்பாக கேட்டல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கல்விப்பணிகளில் ஈடுபட்டார்.
- இடாநகர் இதழாளர் சங்க செயலாளராக பணியாற்றினார்
- அருணாச்சலப்பிரதேச இதழாளர் சங்கம் (Arunachal Pradesh Union of Working Journalists (APUW)) தலைவாக இருந்தார்
- மமங் தாய் 2011 ல் அருணாச்சலப்பிரதேச மாநில பொதுத்தேர்வுக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். (Arunachal Pradesh state public service commission)
- அருணாச்சலப்பிரதேச இலக்கியக் கழகம் ( Arunachal Pradesh Literary Society) செயலர்
- வடகிழக்கு எழுத்தாளர் கழக உறுப்பினர் (North East Writers’ Forum)
- சங்கீத நாடக அக்காடமி டெல்லி யின் பொதுக்குழு உறுப்பினர்i.
இலக்கியவாழ்க்கை
மமங் தாய் அருணாச்சலப்பிரதேசத்தின் இலக்கிய முகமாக அறியப்படுகிறார்.
கவிதை
மமங் தாய் மென்மையான கற்பனாவாதக் கவிதைகள் எழுதத்தொடங்கி பின்னர் யதார்த்தவாத நோக்கில் சிறுகதை நாவல்களும் எழுதினார். 2004ல் வெளிவந்த ஆற்றங்கரைக் கவிதைகள் (River Poems) அவருக்கு இலக்கிய இடம் தேடித்தந்தது. ஐந்து கவிதைதத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
நாவல்
மமங் தாயின் முதல் நாவல் பென்சாமின் தொன்மங்கள் (The Legends of Pensam) 2006 ல் வெளிவந்தது. தொடர்ந்து முட்டாள் க்யூபிட் (Stupid Cupid) 2008, கரிய குன்று (The Black Hill ) 2014 , தப்பிச்செல்லும் நிலம் (Escaping the Land ) 2021ஆகிய நாவல்கள் வெளிவந்தன.
கட்டுரைகள்
மமங் தாய் அருணாச்சலப் பிரதேசத்தின் பண்பாட்டை உலகப்பார்வைக்குக் கொண்டுசென்றவராக கருதப்படுகிறார். அவருடைய முதல் நூல் ’அருணாச்சலப் பிரதேசம் -மறைந்திருக்கும் நிலம்’ ( Arunachal Pradesh: The Hidden Land ) 2003 ல் வெளிவந்தது. மலை அறுவடை - அருணாச்சலப்பிரதேசத்தின் உணவு ( Mountain harvest : The Food of Arunachal) 2004 ல் வெளிவந்தது
நாட்டாரியல்
மமங் தாய் வானரசி (The Sky Queen) ஒரு நிலவுப்பொழுதில் ( Once Upon a Moontime) ஆகியவை அருணாச்சல நாட்டுப்புறக் கதைகளின் ஓவியச்சித்தரிப்பு நூல்கள்.
மமங் தாய் மறைந்து வரும் பழங்குடி கலாச்சாரத்தைப் பற்றி தேசிய, சர்வதேச மேடைகளில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து பேசிவருகிறார்.
அழகியல்
“உலகின் முணுமுணுப்புக்களை சுமந்து செல்லும் பத்தாயிரம் தூதுவர்களுள் நானும் ஒருத்தி” என்று தன் படைப்புளைப் பற்றி பேசும்போது மமங் தாய் சொல்கிறார்.
காடுகளும், மலைகளும் ஆறுகளும் சூழ்ந்த அவருடைய நிலத்தின் பிரதிபலிப்பாகவே அவருடைய படைப்புகளைக் காணலாம். காடுகளின் மரங்கள் நிலம் ஆகியவை எப்படி மர்மம், தொன்மம் மற்றும் பல நூற்றாண்டுகள் நினைவை தன்னுள் கொண்டிருக்குமோ அதைப் போலவே அவருடைய எழுத்துக்களும் ஒரு அடர்த்தியான தன்மை கொண்டவை. அவருடைய எழுத்துக்களில் மேலோட்டமாக காணும் அழகியலுக்குள் மண்ணின் முக்கிய அரசியலையும் கால மாற்றங்களையும் காண முடியும்.
அவருடைய எழுத்துக்கள் எத்தனை எளியவையாக தென்படுகின்றனவோ அத்தனை ஆழமானவையும் கூட. அந்தப் படிமங்கள் தொடர்ந்து மனதில் நின்று எளிய முடிவுகளுக்கு வருவதை தடுப்பவை. இயற்கை சூழ்ந்த இடத்தில் இருந்து வந்தாலும் அந்த அழகியலில் மட்டும் சிக்கிக்கொள்ளாத எழுத்துக்கள். தன்னுடைய மக்களை ‘ஊழைத்தேடும் பயணிகள்' என்று கூறுகிறார். பழங்குடிகளின் மறந்துபோன கடந்த காலங்கள், திசையற்று இருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பதற்றம் அவருடைய படைப்புலகம் நமக்கு தொடர்ந்து உணர்த்துபவை.
விருதுகள்
- 2003ம் ஆண்டு ‘அருணாச்சல பிரதேசம் : மறைந்திருக்கும் நிலம்' என்ற அவருடைய புத்தகத்திற்கு வெர்ரியர் எல்வின் விருது.
- 2011ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது
- 2017ம் ஆண்டு ‘கருப்பு மலை’ (the black hill) என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது.
நூல்கள்
கட்டுரை
- Arunachal Pradesh: The Hidden Land (2003)
- Mountain harvest : The Food of Arunachal (2004
நாட்டாரியல்
- The Sky Queen (2003)
- Once Upon a Moontime (2003)
நாவல்
- The Legends of Pensam (2006)
- Stupid Cupid (2008)
- The Black Hill (2014)
- Escaping the Land (2021)
கவிதை
- River Poems (2004)
- The Balm of Time (2008)
- Hambreelmai's Loom (2014)
- Midsummer Survival Lyrics (2014)