under review

மதுரைப் பெருங்கொல்லன்: Difference between revisions

From Tamil Wiki
(Removed extra blank characters from template paragraphs)
No edit summary
Line 18: Line 18:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:47, 4 December 2022

மதுரைப் பெருங்கொல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் இரும்புத்தொழில் செய்து வாழ்ந்தார். மிகப்பெரிய தொழிற்சாலை வைத்திருந்தவர் என்பதால் மதுரை பெருங்கொல்லன் என்றழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

குறுந்தொகையின் 141-ஆவது பாடல் மதுரைப் பெருங்கொல்லன் பாடினார். குறிஞ்சித்திணைப்பாடலாக, தலைவியின் கூற்றாக பாடல் அமைந்துள்ளது. யானையால் தாக்குண்ட புலி செந்நாயின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் கொடிய காட்டு வழியில் வரும் தலைவனை நினைத்து வருந்தி தலைவி அவனை வரவேண்டாம் என்று கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை: 141

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.

உசாத்துணை

  • புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9


✅Finalised Page