அப்புக்குட்டி ஐயர்: Difference between revisions
(Created page with "அப்புக்குட்டி ஐயர் (1788 – 1863) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், அர்ச்சகர். இவர் பாடிய நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் முக்கியமான சைவ சிற்றிலக்கிய...") |
No edit summary |
||
Line 20: | Line 20: | ||
* http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 | * http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 | ||
* https://www.thejaffna.com/tag/%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d | * https://www.thejaffna.com/tag/%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d | ||
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --> | |||
{{ready for review}} | |||
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --> | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 07:46, 8 February 2022
அப்புக்குட்டி ஐயர் (1788 – 1863) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், அர்ச்சகர். இவர் பாடிய நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் முக்கியமான சைவ சிற்றிலக்கிய நூலாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
1788-ல் யாழ்ப்பாணம், நல்லூரில் சிகிவாகனஐயரின் மகனாக அப்புக்குட்டி ஐயர் பிறந்தார். இவருடைய வேறுபெயர் வாலசுப்பிரமணியஐயர்.
பணி
நல்லூர் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதித்தலத்தில் புராக்டராக அனுமதி பெறவும் பதிவு செய்யவும் எட்வேட் பாண்ஸ் பிரபுவிடம் 1825-ல் உத்தரவு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சைவப் பிள்ளைத்தமிழில் ஒன்றான நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழைப் பாடினார். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் வல்லுநர். நினைவுத்திறனுடன் பாடல் பாடும் திறன் கொண்டவர். தனிக் கவிகள் பல பாடியுள்ளார்.
நூல்கள் பட்டியல்
பிள்ளைத்தமிழ்
- நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
புராணம்
- சூதுபுராணம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://www.thejaffna.com/tag/%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.