under review

இரட்டைப் புலவர்கள்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(changed template text)
Line 29: Line 29:
* [https://www.dinamani.com/tamilnadu/2011/jun/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-361274.html சிந்தைக்கினிய தில்லைக் கலம்பகம் - Dinamani]
* [https://www.dinamani.com/tamilnadu/2011/jun/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-361274.html சிந்தைக்கினிய தில்லைக் கலம்பகம் - Dinamani]


Finalised
{{Finalised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:07, 15 November 2022

To read the article in English: Irattai Pulavargal. ‎

இரட்டைப்புலவர்கள்

இரட்டைப் புலவர்கள் அல்லது இரட்டையர் (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்கள். சிலேடையாகப் பாடுவதில் வல்லவர்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர்கள் சோழ நாட்டில் உள்ள ஆலந்துறையில் செங்குந்தர் குலத்தில் அத்தை மகன் மாமன் மகனாக பிறந்தவர்கள். வரபதியாட்கொண்டார் என்னும் சேர மன்னன் காலத்தில் வாழ்ந்தவர்கள். இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது, மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார்; கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்திச் செல்வார் என்றும் பண்டைய காலச் சுவடுகள் தெரிவிக்கின்றன.

இலக்கிய வாழ்க்கை

கவி வகை பாடுவர். கலம்பகம் பாடுவதில் சிறப்புத் திறமை உடையவர்கள் என்பதால் ’பண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்’ என்று கூறுவர். முன் இரண்டடிகளை ஒருவர் பாடப் பின் இரண்டடிகளையும் மற்றவர் பாடி முடிப்பர். சிவதலத்திற்கு யாத்திரை சென்று அங்கிருக்கும் சிவன்மீது பல வகைச் செய்யுள்களைப் பாடியுள்ளனர். மேலும் வரபதியாட்கொண்டார் என்னும் சேர மன்னன்மீதும் பல பிரபுக்கள்மீதும் கவி பாடி பரிசிலும் பாராட்டும் பெற்றனர். பிரபந்தங்கள் மற்றும் பல தனி நிலைச் செய்யுள்கள் பாடியுள்ளனர். திருவேகம்பப் பெருமான் மீது ஏகாம்பர நாதருலாவை இயற்றினர். சிதம்பர நடராஜரைப் பற்றி 'தில்லைக் கலம்பகம்’ பாடியுள்ளனர். இந்நூலில் சிதம்பரத்தில் உள்ள சபைகள், மண்டபங்கள், திர்த்தங்கள், மூர்த்திகள், தில்லை மூவாயிரவர், பூஜை முறை மற்றும் சங்க இலக்கியம் சார்ந்த அகப்பொருள் துறைகளும் கூறப்பட்டுள்ளன.

நூல் பட்டியல்

  • தில்லைக் கலம்பகம்
  • நந்திக் கலம்பகம்
  • ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
  • திருபாதிரிப்புலியூர் கலம்பகம்
  • காஞ்சி ஏகாம்பர நாதருலா
  • காஞ்சி ஏகாம்பரநாதர் வண்ணம்
  • திரு ஆமாத்துர்க் கலம்பகம்
  • தியாகேசர் பஞ்சரத்தினம்
  • மூவர் அம்மானைப் பாடல்கள்
  • தியாகேசர் பஞ்சரத்தினம்
  • கச்சிக் கலம்பகம்
  • கச்சி உலா

உசாத்துணை


✅Finalised Page