under review

அ. சரவணமுத்தன்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(changed template text)
Line 38: Line 38:
[[Category:1930ல் மறைந்தவர்கள்]]
[[Category:1930ல் மறைந்தவர்கள்]]
[[Category:ஆண்கள்]]
[[Category:ஆண்கள்]]
Finalised
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 12:05, 15 November 2022

To read the article in English: A. Saravanamuththan. ‎

தோத்திர மஞ்சரி

அ. சரவணமுத்தன் (1882 - 1930) (நாணலம் நித்திலக் கிழார்) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர்.

பிறப்பு

இலங்கை மட்டக்களப்பு நகரில் அருணகிரியாருக்கு மகனாக 1882-ல் சரவணமுத்தன் பிறந்தார். இவர் தனது பெயரை தனித்தமிழில் நாணலம் நித்திலக் கிழார் (சரவணம்-முத்து-பிள்ளை - நாணல்-நித்திலம்-கிழார்) என மாற்றிக் கொண்டார்.

கல்வி

பள்ளிப் படிப்பில் சிந்தை இல்லாததால் ஏழாம் வகுப்போடு பாடசாலையை விட்டு நீங்கினார். இந்து வாலிபர் சங்கத்தினர் நடத்திய வாசகசாலை காப்பாளராக பணி செய்தார். வாசகசாலையில் நூல்கள் பலவற்றை வாசித்தார். அக்காலத்தில் அர்ச் மைக்கேல் கல்லூரி ஆசிரியராக இருந்த பண்டித மயில்வாகனனாரிடம் (சுவாமி விபுலானந்தர்) இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

பணி

வாசகசாலை காப்பாளர் பணியைத் துறந்து அரசாங்கத்தில் எழுதுவினைஞராக பணியில் சேர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சந்தக் கவி பாடுவதில் வல்லவர். வசனங்களில் சிலேடை வழங்குதல், கண்டனங்கள் வழங்குவதில் வல்லவர். இலங்கா தகனம், பாதுகா பட்டாபிஷேகம், வனவாசம் முதலிய பல நாடகங்கள் எழுதினார். அவர் எழுதிய நாடகங்களில் நடிகராகவும் இருந்தார். தோத்திரம், பதிகம், வெண்பா ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

மறைவு

1930-ல் அ. சரவணமுத்தன் இலங்கையில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

தோத்திரம்
  • கதிர்காம வேலவர் தோத்திரமஞ்சரி
பதிகம்
  • மாமாங்கப் பிள்ளையார் பதிகம் - 1915
வெண்பா
  • சனி வெண்பா
நாடகங்கள்
  • இலங்கா தகனம்
  • பாதுகா பட்டாபிஷேகம்
  • வனவாசம்

உசாத்துணை


✅Finalised Page