தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை): Difference between revisions
No edit summary |
|||
Line 20: | Line 20: | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
1736 செப்டம்பர் ஆறாம் நாளிலிருந்து எழுதியுள்ளார். வெளியூர் சென்றபோதும், பணிச்சுமை இருந்தபோதும் எழுத்தர்களைக் கொண்டு எழுதியுள்ளார். இடையிடையே சில பகுதிகள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு “அவராலேயே சொந்த கையெழுத்தில் 29 மார்ச் 1760 வரை மட்டுமே எழுதப்பட்டது” என்று நாட்குறிப்பின் மூலநகலைப் பார்வையிட்ட ஜெயசீல ஸ்டீபன் (1999; 37) எழுதியுள்ளார். 1760 ஏப்ரல் தொடங்கி 1760 செப்டம்பர் வரை அவர் நோயுற்றிருந்த நிலையில் வேறொருவரைக் கொண்டு எழுதியுள்ளார் (மேலது). ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் இறுதித் தொகுதி 1761 சனவரி 12 -ஆம் நாளுடன் முடிவடைகிறது. ஆனால் ஜெயசீல ஸ்டீபன் (1999; 45) 1760 செப்டம்பர் 24 உடன் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு முடிவடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வருகிறார். ஏனெனில் 1760 செப்டம்பர் 24-க்குப் பின்னால் வரும் பகுதியில் “ஸ்ரீராமஜெயம்”, “கிருஷ்ண சகாயம்”, “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. | |||
“ஸ்ரீராமஜெயம்”, “கிருஷ்ண சகாயம்”, “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று குறிப்பிட்டே தமது நாட்குறிப்பைத் தொடங்குவதை திருவேங்கடம்பிள்ளை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் ஆனந்தரங்கரிடம் இப்பழக்கம் கிடையாது என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதனடிப்படையிலேயே இம்முடிவுக்கு அவர் வருகிறார். | |||
நாட்குறிப்பின் மூலப் பிரதியில் ஆங்காங்கே சில வரிகள் சிதைந்துள்ளமையால் சில செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. சான்றாக 1739 ஜுலை 8 ஆம் நாள் நாட்குறிப்பில்,சாயங்காலம் நாலு மணிக்கு வெள்ளைக்காரர் ஒருத்தனை கோட்டைக்கு தென்னண்டை இருக்கப்பட்ட வெளியிலே கொண்டுபோய் கண்ணைக்கட்டி முழங்காலிலே நிக்கவச்சு நாலு பேர் துப்பாக்கியிலே இரட்டைக் குண்டு போட்டு சமீபத்திலே நிண்ணு நாலுபேரும் ஒருமிக்க துப்பாக்கியை மாருக்குப் பிடிச்சு சுட்டுப் போட்டார்கள். அவனை அப்படி சுட்டுப் போடத்தக்கதாக என்ன நோக்கமென்றால் . . .என்று எழுதியுள்ளார். “என்ன நோக்கமென்றால்” என்ற சொல்லை அடுத்து நாட்குறிப்பு கிழிந்துள்ளமையால் சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை நாம் அறிய முடியாமல் போய்விடுகிறது. இடையிடையே தெலுங்கிலும் தமது நாட்குறிப்பை அவர் எழுதியுள்ளார் என்று கண்டோம். அவை தமிழ்ப் பதிப்பில் மொழிபெயர்க்கப்படாமையால் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. | |||
பிள்ளையின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலகட்டத்தை விவரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய-ஃப்ரென்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நடுவே அதிகாரப் போட்டி ஆரம்பித்திருந்தது. தமிழகம் ஆர்க்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தஞ்சையில் மராத்தியர் அரசு. இவை பல அதிகார மையங்கள் தலைமைக்காக கடும் போட்டியில் இருந்த வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள். | பிள்ளையின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலகட்டத்தை விவரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய-ஃப்ரென்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நடுவே அதிகாரப் போட்டி ஆரம்பித்திருந்தது. தமிழகம் ஆர்க்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தஞ்சையில் மராத்தியர் அரசு. இவை பல அதிகார மையங்கள் தலைமைக்காக கடும் போட்டியில் இருந்த வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள். | ||
Line 39: | Line 46: | ||
* [https://www.jeyamohan.in/128192/ காலப்பதிவு- ஆனந்தரங்கம் பிள்ளை- ஜெயமோகன்] | * [https://www.jeyamohan.in/128192/ காலப்பதிவு- ஆனந்தரங்கம் பிள்ளை- ஜெயமோகன்] | ||
* [https://nrajaselvam.blogspot.com/2013/12/blog-post_7032.html ஆனந்தரங்கம் பிள்ளை பதிப்பு வரலாறு-நா.இராசசெல்வம்)] | * [https://nrajaselvam.blogspot.com/2013/12/blog-post_7032.html ஆனந்தரங்கம் பிள்ளை பதிப்பு வரலாறு-நா.இராசசெல்வம்)] | ||
*https://www.vinavu.com/2019/08/07/anandharangam-pillai-history-free-download/ | |||
* <nowiki>https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZMy</nowiki> | * <nowiki>https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZMy</nowiki> | ||
Line 51: | Line 59: | ||
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010823_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி5] | *[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010823_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி5] | ||
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010824_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி6] | *[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010824_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி6] | ||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juh8#book1/ நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 7] | |||
*[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jul1#book1/ நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி8 பகுதி 1] | |||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juhd#book1/ நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி8 பகுதி 2] | |||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7l0Yy#book1/ நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 9] | |||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kuhy#book1/ நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 10] | |||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZMy#book1/ நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 12] | |||
* |
Revision as of 11:00, 7 February 2022
தினப்படி சேதிக்குறிப்பு (1736-1761 ) ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்புகள். பிரெஞ்சு அரசில் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்தரங்கம்பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதிய நாட்குறிப்புகள். இது தமிழக வரலாற்றை நேரடியாக பதிவுசெய்த முதல் நாட்குறிப்புத் தொகுப்பு எனப்படுகிறது.
பதிப்பு வரலாறு
ஆனந்தரங்கம் பிள்ளை மறைந்த நான்காவது நாளிலேயே புதுச்சேரி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. அவரது வழித்தோன்றல்கள் தரங்கம்பாடிக்குச் சென்று பொறையார் எனுமிடத்தில் குடியேறினர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மீண்டும் பிரஞ்சுக்காரர் வசமானது. ஆனந்தரம்பிள்ளை குடும்பத்தினர் 1765-இல் புதுச்சேரிக்குத் திரும்பினர். அவர்களின் இல்லச்சேமிப்புகளில் ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகளும் இருந்தன. ஆனந்தரங்கர் மறைந்து சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் பிரஞ்சு அரசின் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த கலுவா மொம்பிரான் என்பவர் ஆனந்தரங்கரின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றபோது பெரிய கணக்குப் பேரேடுகளில் எழுதப்பட்ட குறிப்புகளை உறவினர்கள் காட்டினர். கலுவா மொம்பிரான் அத்தொகுப்பில் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு, அவரது தம்பிமகன் அப்பாவு என்றழைக்கப்பட்ட ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளையின் நாட்குறிப்பு மற்றும் அரிய ஆவணங்கள் பல இருப்பதைக் கண்டார். கலுவா மொம்பிரான்1736 முதல் 1799 ஆண்டு வரையிலான 16 பதிவேடுகளையும் எழுத்தர்களை வைத்து நகல் எழுதிக் கொண்டார். 1846-இல் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பை, 1849-இல் 16 பக்கங்கள் கொண்ட ஒரு பிரெஞ்சுக் கட்டுரை மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பின் மூலத்தைக் கண்ணுற்ற கலுவா மொம்பிரான்; தனக்காக ஒரு பிரதியை எழுதிக்கொண்டார். கலுவா மொம்பிரான் வீட்டிலிருந்த இந்த முதல் பிரதி 1916-இல் புதுச்சேரியில் வீசிய புயல் மழையில் பாழாகிவிட எஞ்சிய 5 தொகுதிகள் மட்டும் தற்பொழுது புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளன. கலுவா மொம்பிரானின் பிரஞ்சுக் கட்டுரை மூலமாக நாட்குறிப்புப் பற்றி அறிந்த புதுச்சேரி அரசு ஆவணக் காப்பாளராகப் பணிபுரிந்த எதுவார் ஆரியேல் என்பார், 1849-இல் ஆனந்தரங்கப்பிள்ளை வீட்டிலிருந்த மூலச்சுவடியைப் பார்த்து, மீண்டும் தமக்கொரு பிரதியை எழுதிக்கொண்டார். எதுவார் ஆரியேலின் மறைவுக்குப் பிறகு அந்த பிரதி பாரீசு தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆங்கில அரசின் முகவராயிருந்த லெப்டினண்டு ஜெனரல் எச்.மெக்லீடு என்பவரும், அவர் மூலமாக இந்நாட்குறிப்புப் பற்றி அறிந்த கல்கத்தா இம்பீரியல் ஆவணக் காப்பகத் தலைவராயிருந்த பேரா.ஜி.டபிள்யூ.பாரஸ்ட் என்பவரும் விடுத்த வேண்டுகோளின்படி சென்னையிலிருந்த வென்லாக் பிரபுவின் ஆணையின்படி 1892 முதல் 1896 வரை கலுவா மொம்பிரானின் பிரதியிலிருந்து ஆங்கில அரசுக்காக மூன்றாவது பிரதி எழுதப்பட்டது. இம்மூன்றாவது பிரதி தற்பொழுது சென்னை மாநில வரலாற்று ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மூலப்பிரதியும் கலுவா மொம்பிரானின் முதல் பிரதியும் காணாமல் போய்விடவே பிரெஞ்சு அரசு ஓர் எழுத்தரை சென்னைக்கு அனுப்பி, சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்திலிருந்து நான்காவது பிரதி எழுதிக்கொண்டது. அப்பிரதி அந்நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு 12 தொகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. இந்நான்காவது பிரதியிலும் முதல் 8 தொகுதிகள் காணாமல் போய்விட்டன. மீதமுள்ள 4 தொகுதிகள் மட்டும் தற்பொழுது புதுச்சேரி இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு முதன்முதலில் கலுவா மொம்பிரானின் எழுத்துப் பிரதியிலிருந்து ஆங்கில அரசிற்காக எடுக்கப்பட்ட மூன்றாவது பிரதியை அடிப்படையாகக் கொண்டு பிரடரிக் பிரைஸ் என்பவரால் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு முதல் 3 ஆங்கிலத் தொகுதிகள் மட்டும் வெளியிடப்பட்டது. பிரடரிக் பிரைஸ் நாட்குறிப்பில் இரண்டு ஆண்டுகள், ஏழு மாதம், பதினைந்து நாட்கள் குறிப்புகள் விடுபட்டுள்ளன என்று குறிப்பிட்டார். எச்.டாட்வெல் என்வர் மீதமுள்ள குறிப்புகளை ஒன்பது தொகுதிகளாக ஆங்கில மொழியாக்கம் செய்து 1916 முதல் 1928 வரையிலான காலத்தில் வெளியிட்டார். ஆங்கிலப் பதிப்பு வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.ஜி.ழுவோ துய்ப்ராய் பாரீசு தேசீய நூலகத்திலிருந்து அச்சேறாத சில பக்கங்களைப் பிரதி செய்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிக்கு அனுப்பி வைத்தார். அவர் அதனை “New Pages From Anandaranga Pillai’s Dairy” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு அரசால் 1948 ஆனந்தரங்கம் பிள்ளை குறிப்புகளின் முதல் தொகுதி தமிழில் வெளியிடப்பட்டது. ஞானு தியாகு,ரா.தேசிகம்பிள்ளை போன்ற வரலாற்று ஆய்வாளர்களால் ஒன்று முதல் எட்டு தொகுதிகள் ஆங்கில மொழியாக்கத்தை அடிப்படையாகக்கொண்டு பதிப்பிக்கப்பட்டன. முதல் 7 தொகுதிகள் முறையே 1948, 1949, 1950, 1951, 1954, 1956, 1963 ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவை ’பிரத்தியேகமான ஆனந்தரங்க பிள்ளையவர்களின் சொஸ்தலிகித தினப்படி சேதிக்குறிப்பு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. 8 ஆம் தொகுதி இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.. ஆனால் அவை எப்பொழுது பதிப்பிக்கப்பட்டன என்ற பதிப்புச் செய்தியும் இல்லை. எட்டாம் தொகுதியின் இரண்டு பகுதிகள் மட்டும் “பிரத்தியேகமான ஆனந்தரங்க பிள்ளையவர்களின் தினப்படி சேதிக்குறிப்பு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெட்டுத் தொகுதிகளும் மறு பதிப்பாக, நகல் பதிப்பு (Photo-Print) முறையில்,புதுவைஅரசு, கலை பண்பாட்டுத் துறையால் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையுடன் 1988-இல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மொழியியல்,பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மீதமுள்ள நான்கு தொகுதிகளையும் சேர்த்து இர.ஆலாலசுந்தரம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2005 ல் மொத்தம் 12 தொகுதிகளாக வெளியிட்டது.
கலுவா மொம்பிரானும், எதுவார் ஆரியேலும் ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் மூலச்சுவடியைப் பார்த்துப் பிரதி செய்து கொண்டபின்,மூலத்தை, ஆனந்தரங்கரின் வாரிசுகளிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். 1916-இல் புதுச்சேரியில் வீசிய கடும் புயல்மழையில் மூலப்பிரதியும், கலுவா மொம்பிரானின் முதல்பிரதியும் அழிந்து போய்விட்டன என்று புதுச்சேரி ஆவணக் காப்பகத்தின் தலைவராயிருந்த சிங்காரவேலுப்பிள்ளை கூறியுள்ளதாக இர.ஆலாலசுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் மூலப்பிரதி காணாமல் போய்விட்டது என்பதும், எதுவார் ஆரியேலால் பிரதி எடுக்கப்பட்டுப் பாரீசு தேசீய நூலகத்தில் உள்ள பிரதியே கிடைத்தவற்றுள் முழுமையானது என்பதும் அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிபுகளாகும். பிரான்சில் வாழ்ந்து வரும் ஒர்சே கோபாலகிஷ்ணன், பாரீசிலுள்ள இரண்டாவது பிரதியை அடிப்படையாகக் கொண்டும், பிற இடங்களில் கிடைக்கும் ஏடுகளை ஒப்பு நோக்கியும் நாட்குறிப்பை முழுமைப்படுத்தும் நோக்கில் ஆனந்தரங்கப்பிள்ளை-வி-நாட்குறிப்பு என்ற பெயரில் ஒரு விரிவான பதிப்பினை வெளியிட்டு வருகிறார். இதுவரை 3 தொகுதிகள் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டுள்ளன. ( குறிப்பு நா.இராசசெல்வம்,தமிழ் விரிவுரையாளர்,பள்ளிக்கல்வித்துறை,புதுவை அரசு)
நாட்குறிப்பின் வரலாறு
ஆனந்தரங்கம் பிள்ளையை தொடந்து ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 – 1801) ஆகிய நால்வரும் தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதினர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். இந்த நாட்குறிப்பு ஒர் இயக்கம்போல கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் நிகழ்தது.
உள்ளடக்கம்
1736 செப்டம்பர் ஆறாம் நாளிலிருந்து எழுதியுள்ளார். வெளியூர் சென்றபோதும், பணிச்சுமை இருந்தபோதும் எழுத்தர்களைக் கொண்டு எழுதியுள்ளார். இடையிடையே சில பகுதிகள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு “அவராலேயே சொந்த கையெழுத்தில் 29 மார்ச் 1760 வரை மட்டுமே எழுதப்பட்டது” என்று நாட்குறிப்பின் மூலநகலைப் பார்வையிட்ட ஜெயசீல ஸ்டீபன் (1999; 37) எழுதியுள்ளார். 1760 ஏப்ரல் தொடங்கி 1760 செப்டம்பர் வரை அவர் நோயுற்றிருந்த நிலையில் வேறொருவரைக் கொண்டு எழுதியுள்ளார் (மேலது). ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் இறுதித் தொகுதி 1761 சனவரி 12 -ஆம் நாளுடன் முடிவடைகிறது. ஆனால் ஜெயசீல ஸ்டீபன் (1999; 45) 1760 செப்டம்பர் 24 உடன் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு முடிவடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வருகிறார். ஏனெனில் 1760 செப்டம்பர் 24-க்குப் பின்னால் வரும் பகுதியில் “ஸ்ரீராமஜெயம்”, “கிருஷ்ண சகாயம்”, “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஸ்ரீராமஜெயம்”, “கிருஷ்ண சகாயம்”, “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று குறிப்பிட்டே தமது நாட்குறிப்பைத் தொடங்குவதை திருவேங்கடம்பிள்ளை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் ஆனந்தரங்கரிடம் இப்பழக்கம் கிடையாது என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதனடிப்படையிலேயே இம்முடிவுக்கு அவர் வருகிறார்.
நாட்குறிப்பின் மூலப் பிரதியில் ஆங்காங்கே சில வரிகள் சிதைந்துள்ளமையால் சில செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. சான்றாக 1739 ஜுலை 8 ஆம் நாள் நாட்குறிப்பில்,சாயங்காலம் நாலு மணிக்கு வெள்ளைக்காரர் ஒருத்தனை கோட்டைக்கு தென்னண்டை இருக்கப்பட்ட வெளியிலே கொண்டுபோய் கண்ணைக்கட்டி முழங்காலிலே நிக்கவச்சு நாலு பேர் துப்பாக்கியிலே இரட்டைக் குண்டு போட்டு சமீபத்திலே நிண்ணு நாலுபேரும் ஒருமிக்க துப்பாக்கியை மாருக்குப் பிடிச்சு சுட்டுப் போட்டார்கள். அவனை அப்படி சுட்டுப் போடத்தக்கதாக என்ன நோக்கமென்றால் . . .என்று எழுதியுள்ளார். “என்ன நோக்கமென்றால்” என்ற சொல்லை அடுத்து நாட்குறிப்பு கிழிந்துள்ளமையால் சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை நாம் அறிய முடியாமல் போய்விடுகிறது. இடையிடையே தெலுங்கிலும் தமது நாட்குறிப்பை அவர் எழுதியுள்ளார் என்று கண்டோம். அவை தமிழ்ப் பதிப்பில் மொழிபெயர்க்கப்படாமையால் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
பிள்ளையின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலகட்டத்தை விவரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய-ஃப்ரென்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நடுவே அதிகாரப் போட்டி ஆரம்பித்திருந்தது. தமிழகம் ஆர்க்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தஞ்சையில் மராத்தியர் அரசு. இவை பல அதிகார மையங்கள் தலைமைக்காக கடும் போட்டியில் இருந்த வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள்.
அன்றைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய் செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் எப்படி கிடைத்தது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது, ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது என்று பல நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.
அன்றைய சமூக நிகழ்வுகளையும் உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு ஆகிய சிலவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
ஆனந்தரங்கர் மறைந்து சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரியில் பிரஞ்சு அரசின் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த கலுவா மொம்பிரான் என்பவர், ஒருமுறை ஆனந்தரங்கரின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றார். ஆனந்தரங்கரின் வாரிசுதாரர்கள் கலுவா மொம்பிரானிடம் வீட்டிலிருந்த பழைய சுவடிகளைக் காண்பித்தனர்; அவை பெரிய கணக்குப் பேரேடுகளையொத்த சுவடிகளாக இருந்தன. தமிழ் அறிந்த கலுவா மொம்பிரான் அவற்றைக் கூர்ந்து நோக்கினார். அவற்றுள் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு, அவரது தம்பிமகன் அப்பாவு என்றழைக்கப்பட்ட ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளையின் நாட்குறிப்பு மற்றும் வரலாற்றுத் தொடர்புடைய அரிய சாசனங்கள் பல இருப்பதைக் கண்டார். அது பெரும் வரலாற்றுப் புதையல் என்பதையும் உணர்ந்தார். அவற்றின் அருமையை உணர்ந்த கலுவா மொம்பிரான்,அவர்களது வீட்டிலிருந்த 1736 முதல் 1799 ஆண்டு வரையிலான 16 பதிவேடுகளையும் எழுத்தர்களை வைத்து நகல் எழுதிக் கொண்டார். 1846-இல் தாம் கண்ட ஆனந்தரங்கரின் நாட்குறிப்பை, 1849-இல் 16 பக்கங்கள் கொண்ட ஒரு பிரஞ்சுக் கட்டுரை மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்
உள்ளடக்கம்
பிள்ளையின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலகட்டத்தை விவரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய-ஃப்ரென்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நடுவே அதிகாரப் போட்டி ஆரம்பித்திருந்தது. தமிழகம் ஆர்க்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தஞ்சையில் மராத்தியர் அரசு. இவை பல அதிகார மையங்கள் தலைமைக்காக கடும் போட்டியில் இருந்த வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள்.
அன்றைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய் செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் எப்படி கிடைத்தது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது, ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது என்று பல நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.
அன்றைய சமூக நிகழ்வுகளையும் உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு ஆகிய சிலவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
உசாத்துணை
- கொலம்பியா பல்கலைக்கழக தளத்தில் நாட்குறிப்புகளின் சில பகுதிகள்
- காலப்பதிவு- ஆனந்தரங்கம் பிள்ளை- ஜெயமோகன்
- ஆனந்தரங்கம் பிள்ளை பதிப்பு வரலாறு-நா.இராசசெல்வம்)
- https://www.vinavu.com/2019/08/07/anandharangam-pillai-history-free-download/
- https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZMy
- https://www.scientificjudgment.com/2020/03/diary-of-history-diary-ventar-ananda-ranga-pillai-tamil-part2.html
- http://s-pasupathy.blogspot.com/2016/03/blog-post_30.html
- ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு விவாதம்
- https://archive.org/details/diaryofanandaran03anan ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு முழுமையாக
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி1
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி2
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி3
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி4
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி5
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி6
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 7
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி8 பகுதி 1
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி8 பகுதி 2
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 9
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 10
- நாட்குறிப்புகள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி 12