first review completed

மாறனலங்காரம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இஃது [[உரைதருநூல்கள்|உரைதருநூல்]]களில் ஒன்று. இது [[திருக்குருகைப் பெருமாள் கவிராயர்]] என்பவரால் இயற்றப்பட்டது. வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.  
மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இஃது [[உரைதருநூல்கள்|உரைதருநூல்]]களில் ஒன்று. இது [[திருக்குருகைப் பெருமாள் கவிராயர்]] என்பவரால் இயற்றப்பட்டது. வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.  
==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார். பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் ''மாறன்'' என்ற பெயராலும் அறியப்பட்டவர். இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு ''மாறனலங்காரம்'' எனப் பெயரிடப்பட்டது.அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது. இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.
பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் [[நம்மாழ்வார்]]. பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் ''மாறன்'' என்ற பெயராலும் அறியப்பட்டவர். இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு ''மாறனலங்காரம்'' எனப் பெயரிடப்பட்டது.அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது. இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.
==ஆசிரியர்==
==ஆசிரியர்==
மாறனலங்காரத்தை இயற்றியவர் [[திருக்குருகைப் பெருமாள் கவிராயர்]]. <poem>
மாறனலங்காரத்தை இயற்றியவர் [[திருக்குருகைப் பெருமாள் கவிராயர்]]. <poem>

Revision as of 08:07, 27 October 2022

Tamil digital library

மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இஃது உரைதருநூல்களில் ஒன்று. இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.

பெயர்க்காரணம்

பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார். பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர். இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது.அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது. இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.

ஆசிரியர்

மாறனலங்காரத்தை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்.

பெருநிலம் புகழ் திருக்குருகைப் பிரா
னருள்குரு கூர்வரு மனகன் செழுந்தேன்
மருக்கமர் சீர்வணிகத்தார் வணிகன் புகழ்த்
திருக்குரு கைப்பெரு மாள்கவி ராயன்
அருட்குணத்துடன் வளர்சடையன்
பொருட்டொடர் நவம்புணர் புலமையோனே

என்ற சிறப்புப்பாயிரத்தின் மூலம் இச்செய்தியை அறியலாம்.

நூல் அமைப்பு

இந்நூல் சிறப்புப் பாயிரம் தவிர்ந்த 326 பாடல்களைக் கொண்டது. இவை பொதுப் பாயிரப் பகுதியிலும்,

  1. பொதுவியல்,
  2. பொருளணியியல்
  3. சொல்லணியியல்,
  4. எச்சவியல்

எனும் நான்கு இயல்களுள் அடங்குகின்றன. இது 64 செய்யுள் அணிகள் பற்றிக் கூறுகின்றது. அணிகளுக்கான இலக்கணங்களும், அவ்வணிகளுக்கான உதாரணங்களும் உரையுடன் எழுதப்பட்டுள்ளன. உதாரணப் பாக்கள் நம்மாழ்வாரைப்(மாறன்) பாட்டுடத் தலைவனாகக் கொண்டவை

எடுத்துக்காட்டு

இல்பொருள் உவமையணிக்கான உதாரணப்பாடல் :

உதிக்கும் கரிஞாயிரென்றே உவமை
மதிக்கும் வடமலைமா யோனத் துதிக்குந்
திருநா வுடையபிரான் செந்தமிழை யோதி
யிருநாவே வாரா திடர்

உசாத்துணை

தமிழ் இணைய நூலகம்-மாறனலங்காரம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.