மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
No edit summary
No edit summary
 
Line 47: Line 47:
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்]

{{Finalised}}
{{Finalised}}

{{Fndt|04-Dec-2022, 13:44:55 IST}}
{{Fndt|04-Dec-2022, 13:44:55 IST}}

[[Category:புலவர்]]
[[Category:புலவர்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:41, 12 October 2026

மதுரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மதுரை (பெயர் பட்டியல்)

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றும் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

எண்வகைக் கூலத்தோடு உணவாகிப் பயன்படும் பிறபொருள்களையும் சேர்த்து "பண்டம்" என்றழைத்தனர். பண்டவாணிபம் இக்காலத்தைய பலசரக்கு கடை போன்றது. இளந்தேவனார் மதுரை பெருங்கடைத்தெருவில் பலசரக்குக் கடை வைத்து வாணிபத்தொழில் செய்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இளந்தேவனார் பாடிய பாடல் நற்றிணையில்(41) பாலைத்திணைப் பாடலாக உள்ளது. பிரிவு ஆற்றாளாகிய தலைமகளுக்கு தோழி உலகியலை எடுத்துக் கூறுவதாக பாடல் அமைந்துள்ளது. அகநானூற்றில் (58), (328) ஆகியவை குறிஞ்சித்திணைப்பாடலாக உள்ளது. தலைமகனுக்கு தலைவி கூறியதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் நடை

  • நற்றிணை 41

எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.

  • அகநானூறு 58

நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.

  • அகநானூறு 328

வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
அரவின் பைந் தலை இடறி, பானாள்
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி,
துனி கண் அகல அளைஇ, கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்,
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு
அடக்குவம் மன்னோ தோழி! மடப் பிடி
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே!

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Dec-2022, 13:44:55 IST