இளங்கோவடிகள் விருது: Difference between revisions
From Tamil Wiki
Removed Category:Spc |
No edit summary |
||
| Line 39: | Line 39: | ||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | * [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | ||
* [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NTI%3D இளங்கோவடிகள் விருது: தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | * [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NTI%3D இளங்கோவடிகள் விருது: தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|01-Feb-2023, 09:18:52 IST}} | {{Fndt|01-Feb-2023, 09:18:52 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 15:26, 12 October 2026
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் இளங்கோவடிகள் விருதும் ஒன்று. இவ்விருது 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இளங்கோவடிகள் விருது
இளங்கோவடிகளின் நடையையொட்டிப் புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்பி வருபவருக்கோ இளங்கோவடிகள் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2015 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் கொண்டது.
இளங்கோவடிகள் விருது பெற்றவர்கள் (2021 வரை)
| எண் | ஆண்டு | விருது பெற்றவர் |
|---|---|---|
| 1 | 2015 | முனைவர் ஜி.டி. நிர்மலா மோகன் |
| 2 | 2016 | நா. நஞ்சுண்டன் |
| 3 | 2017 | முனைவர் வெ. நல்லதம்பி |
| 4 | 2018 | சிலம்பொலி சு. செல்லப்பன் |
| 5 | 2019 | கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம் |
| 6 | 2020 | மா. வயித்தியலிங்கன் |
| 7 | 2021 | நெல்லை கண்ணன் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Feb-2023, 09:18:52 IST