under review

பேயோன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 19: Line 19:
* மடியில் விழுந்த மலர்  
* மடியில் விழுந்த மலர்  
* வாழ்க லைக்குகள்!  
* வாழ்க லைக்குகள்!  
* குடும்ப மகிழ்ச்சி  
* குடும்ப மகிழ்ச்சி
* இருண்ட காலங்கள்(கிண்டில்)
 
===== புனைவு =====
===== புனைவு =====
* முதலையும் சியாமள விகாச பட்சியும் (குழந்தைகளுக்கான புனைவு)
* முதலையும் சியாமள விகாச பட்சியும் (குழந்தைகளுக்கான புனைவு)

Revision as of 17:01, 12 October 2022

பேயோன் டிவிட்டர் முகப்பு படம்

பேயோன் (செப்டம்பர் 11, 2009) தமிழ் இலக்கிய உலகின் கற்பனைப் பாத்திரம். தமிழில் கவிதை, புனைவு, கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதிவருகிறார். ஓவியர்.

அறிமுகம்

செப்டம்பர் 11, 2009-ல் டிவிட்டரில் “பேயோன்” (@ThePayon) என்ற கணக்கின் மூலம் அறிமுகமானார். “நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதை விட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன்” என்ற அறிமுகக் குறிப்போடு எழுத ஆரம்பித்தார். 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற நெடுங்கதையில் வரும் பேயோன் என்ற முக்கியப் பாத்திரத்திற்கு வடிவம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

பேயோனின் முதல் நூல் 'பேயோன் 1000' தமிழின் முதல் ட்விட்டர் நுண்பதிவுத் தொகுப்பாக 2010-ல் வெளியானது. இரண்டாவது நூல் 'திசை காட்டிப் பறவை' நெடுங்கதை, சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை அடங்கியது 2010-ல் வெளியானது. 2012 ஜனவரியில் வெளியான 'காதல் இரவு', 'பாம்புத் தைலம்' ஆகியவை கவிதை, உரைநடைத் தொகுப்புகள். 2013ஜனவரியில் 'நள்ளிரவும் கடலும் நானும்' என்ற கவிதைத் தொகுப்பும்(மின்னூல்) 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற உரைநடைத் தொகுப்பும் வெளிவந்தன. அச்சு நூல்களை ஆழி பதிப்பகம் வெளியிட்டது. 2014இல் 'பிரிட்டிஷ் ஏஜெண்ட்', 'சாட்டையடித் தோலுரிப்பில் கிழிந்து தொங்கும் முகமூடிகளும் வாழ்க்கையின் நிதர்சனம் சக்கையாகப் பிழிந்துபோட்ட சுயங்களும்', 'குமார் துப்பறிகிறார்' ஆகிய மின்னூல்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியாயின. 2016இல் japonaise என்ற ஆங்கில கவிதை மின்னூலை வெளியிட்டார்.

நவம்பர் 2011இல் 'ஓவியத்துவம்' என்ற வெப்காமிக்கைச் சிறிது காலம் நடத்தினார். ஆகஸ்ட் 2012 முதல் ஜனவரி 2013 வரை ஆனந்த விகடன் வார இதழில் 'பேயோன் பக்கம்' என்ற பத்தியை எழுதினார். சொந்த ஆண்ட்ராய்டு நிரலான ThePayon, 'சாட்டையடி...' நூலின் ஆண்ட்ராய்டு நிரல் வடிவம் ஆகியவையும் வெளியாகியுள்ளன.

திரைவாழ்க்கை

பேயோன் 'புனைவு' என்று ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். 2016இல் 'பறந்து செல்ல வா' என்ற தமிழ்த் திரைப்படத்திற்குத் திரைக்கதையின் உபஆசிரியராகவும் வசன எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

நூல் பட்டியல்

கவிதை
  • நிகழ்வுகள்
  • என் இடம்
  • உங்களுக்கு மூன்று தடவை ஃபோன் செய்தேன்தேடிச் சோறு
  • எழுதலாம்
  • கடத்தல்
  • மாஸ்டர் பீஸ்
  • மடியில் விழுந்த மலர்
  • வாழ்க லைக்குகள்!
  • குடும்ப மகிழ்ச்சி
  • இருண்ட காலங்கள்(கிண்டில்)
புனைவு
  • முதலையும் சியாமள விகாச பட்சியும் (குழந்தைகளுக்கான புனைவு)
  • ஐந்து ரியோ (குட்டிக் கதை)
கட்டுரை
  • டெவலப்பிங் ஸ்டோரி (புனைகட்டுரை)
  • ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேனே
  • தகவல் தொடர்பு
  • ஒமர் முக்தார்
  • ஈரோடு புத்தகத் திருவிழா
  • ‘மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்’ முன்னுரை
  • லேசில் தீராத பக்கங்கள் (மதிப்புரை)
  • தமிழனின் அடையாளச் சிக்கல்
மொழிபெயர்ப்பு
  • சட்டத்தின் முன்பு (ஃப்ரான்ஸ் காஃப்கா)
  • பிணந்தின்னிக் கழுகு (ஃப்ரான்ஸ் காஃப்கா)
  • பாலம் (ஜெர்மன் மொழிச் சிறுகதை)
ஓவியம்
  • மலர்கள்

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.