கதே: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
Normalized selected wikitext line breaks;
 
Line 21: Line 21:
கதே சில்லர்(Schiller) என்ற கவிஞரை சந்தித்தார். 1791-ல் வீமரில் சில்லரை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு அமர்த்தி அதே ஊரிலேயே புதிய நாடக அரங்கை நிர்மாணித்தார். அதன் பொறுப்பாளரச் செயல்பட்டார். மாதம் ஒரு நாடகம் உருவாக்குவதற்கான திட்டத்தில் சில்லருடன் இணைந்து செயல்பட்டார். இருவரும் ஒரு இலக்கிய இதழைத் தொடங்கினர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அதை நடத்தினார்.
கதே சில்லர்(Schiller) என்ற கவிஞரை சந்தித்தார். 1791-ல் வீமரில் சில்லரை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு அமர்த்தி அதே ஊரிலேயே புதிய நாடக அரங்கை நிர்மாணித்தார். அதன் பொறுப்பாளரச் செயல்பட்டார். மாதம் ஒரு நாடகம் உருவாக்குவதற்கான திட்டத்தில் சில்லருடன் இணைந்து செயல்பட்டார். இருவரும் ஒரு இலக்கிய இதழைத் தொடங்கினர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அதை நடத்தினார்.


==இலக்கிய வாழ்க்கை==  
==இலக்கிய வாழ்க்கை==
கதே தன்னுணர்வுப்பாடல்கள், தத்துவக் கவிதைகள், நாடகங்கள், நீண்ட கவிதைகள், காப்பியம், திறனாய்வு, நாவல், குறு நாவல், சிறுகதை, கடித இலக்கியம், கட்டுரைகள், உரையாடல்கள், நாட்குறிப்பு இலக்கியம் என இலக்கியத்தின் பலவகைப்பட்ட வடிவங்களிலும் எழுதியுள்ளார்.
கதே தன்னுணர்வுப்பாடல்கள், தத்துவக் கவிதைகள், நாடகங்கள், நீண்ட கவிதைகள், காப்பியம், திறனாய்வு, நாவல், குறு நாவல், சிறுகதை, கடித இலக்கியம், கட்டுரைகள், உரையாடல்கள், நாட்குறிப்பு இலக்கியம் என இலக்கியத்தின் பலவகைப்பட்ட வடிவங்களிலும் எழுதியுள்ளார்.
=====கவிதை=====
=====கவிதை=====

Latest revision as of 23:57, 11 October 2026

ஜான் வொல்ப்கேன்க் வான் கதே
கதே (ஓவியர்: Gerhard von Kugelgen)
கதே

கதே (ஜான் வொல்ஃப்கேன்க் வான் கதே) (Johann Wolfgang von Goethe) (ஆகஸ்ட் 28, 1749 - மார்ச் 22, 1832) ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், ஓவியர், தத்துவவாதி, விஞ்ஞானி. கவிதை, நாவல்கள், நாடகங்கள் எழுதினார். கற்பனாவாதத்தின் தந்தை என அழைக்கப்பட்ட ஹெர்டரின் மாணவர். ஐரோப்பிய இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். ஐரோப்பாவின் ஒரு நூற்றாண்டின் அனைத்து அறிவுத்துறைகளின் போக்கையும் தீர்மானித்த மேதை.

பிறப்பு, கல்வி

ஜான் வொல்ப்கேன்க் வான் கதே ரோமன் நகரிலுள்ள ஃப்ராங்க்பர்ட்டில் ஜோஹன் கேஸ்பர் கதே (Johann Caspar Goethe), கேத்தரினா எலிசபெத் டெக்ஸர் (Catharina Elisabeth Textor) இணையருக்கு ஆகஸ்ட் 28, 1749-ல் பிறந்தார். செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கதேயுடன் பிறந்தவர்கள் அனைவரும் குழந்தையிலேயே இறந்தனர். தந்தை மற்றும் ஆசிரியர்களிடமிருந்து வீட்டில் இருந்தபடியே ஆரம்பக்கல்வி கற்றார். தந்தை வழக்கறிஞர். லத்தீன், கிரேக்கம், பிரெஞ்ச், ஹீப்ரூ, ஆங்கிலம், இத்தாலி ஆகிய மொழிகளைக் கற்றார். ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, பியானோ என பல கலைகளைக் கற்றார். ஆரம்பத்தில் ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார்.

1765-ல் ஜெர்மனியிலுள்ள லெய்ப்ஜிக் (Leipzig) பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆனால் அவர் கலை, இலக்கியம், நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இந்த காலகட்டத்தில் கவிதைகள் எழுதினார். நாடகத்தில் ஈடுபாடு கொண்டார். உடல்நிலை சரியில்லாததால் 1768-ல் ஃப்ராங்ஃபர்ட்டுக்கு திரும்பினார். அங்கு தன் சட்டக்கல்வியைத் தொடர்ந்தார். 1770-ல் ஸ்ட்ராஸ்பெர்கிற்கு இடம்பெயர்ந்து அங்கு சட்டக் கல்வியை நிறைவு செய்தார். 1775-ல் வீமரின்(Weimer) ஆட்சியாளரான அகஸ்டஸின்(Karl August) அழைப்பின் பேரில் ஜெர்மனியின் வீமருக்கு இடம்பெயர்ந்தார். வீமரின் கலை இலக்கிய உலகில் முக்கியமான ஆளுமையாக மாறினார்.

தனிவாழ்க்கை

கதே தன் மாணவப் பருவத்தில் அண்ணா காத்ரீனாவைக் (Anna Katherina) காதலித்தார். பிரியான்(Friederike Brion), சார்லட் பஃப்(Charlotte Buff) ஆகியோர் பிற காதலிகள். ஆனால் குறைந்த நாட்களே இவர்களுடனான தொடர்பு நீடித்தது. சார்லட் பஃப் இன்னொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்.

கதே கிறிஸ்டைன் வுல்பியஸை (Christiane Vulpius) 1788-ஐ சந்தித்தார். 1806-ல் மணந்தார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அகஸ்ட் என்ற மூத்த மகனைத்தவிர பிற குழந்தைகள் இறந்தனர்.

1823-ல் உல்ரிக்கேவிடம் (Ulrike von Levetzow) காதல் வயப்பட்டார். ஆனால் அவர் கதேவின் திருமண கோரிக்கையை ஏற்கவில்லை.

நாடக வாழ்க்கை

கதே 1767-68 காலகட்டத்தில் 'Die Laune des Verliebten (The Lover's Caprice)' என்ற நாடகத்தை எழுதினார். அதன்பின் 'Die Mitschuldigen (The Accomplices)' என்ற நாடகத்தை எழுதினார். 1773-ல் 'Gotz von Berlichingen' என்ற நாடகத்தை எழுதினார். வரலாற்று நாயகரும், கவிஞருமான Gotz von Berlichingen என்பவரின் குறிப்பிலிருந்து வெளியான நூல். இது 1799-ல் 'Goetz of Berlichingen of the Iron Hand' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது.

கதே சில்லர்(Schiller) என்ற கவிஞரை சந்தித்தார். 1791-ல் வீமரில் சில்லரை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு அமர்த்தி அதே ஊரிலேயே புதிய நாடக அரங்கை நிர்மாணித்தார். அதன் பொறுப்பாளரச் செயல்பட்டார். மாதம் ஒரு நாடகம் உருவாக்குவதற்கான திட்டத்தில் சில்லருடன் இணைந்து செயல்பட்டார். இருவரும் ஒரு இலக்கிய இதழைத் தொடங்கினர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அதை நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

கதே தன்னுணர்வுப்பாடல்கள், தத்துவக் கவிதைகள், நாடகங்கள், நீண்ட கவிதைகள், காப்பியம், திறனாய்வு, நாவல், குறு நாவல், சிறுகதை, கடித இலக்கியம், கட்டுரைகள், உரையாடல்கள், நாட்குறிப்பு இலக்கியம் என இலக்கியத்தின் பலவகைப்பட்ட வடிவங்களிலும் எழுதியுள்ளார்.

கவிதை

கதே ஆரம்ப காலகட்டத்தில் தன் காதலியான அன்னா காத்ரீனாவின் (Anna Katharina Schonkopf) நினைவாக கவிதைகளை எழுதினார். 'Annette' என்ற கவிதைத்தொகுப்பாக பின்னர் வெளியானது. ஆரம்பகட்ட எழுத்துக்கள் எளிமையாகவும், இலகுவாகவும் இருந்தன. பிற்காலத்தில் 'Hermann and Dorothea', 'the Roman Elegies', 'the West-Eastern Diwan' ஆகிய கவிதை நூல்களை எழுதினார்.

நாவல்

கதே 1774-ல் "The Sorrows of Young Werther" என்ற தன் முதல் நாவலை எழுதினார். இந்த நாவல் உலகப்புகழ் பெற்றது. இந்த நாவலே கற்பனாவாத காலகட்டத்தின் துவக்கமாகக் கருதப்பட்டது. ஆனால் இந்த துன்பியல் காதல் கதை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வலைகளால் அதிலிருந்து மெல்ல விலகினார். 1795-96 காலகட்டத்தில் 'Wilhelm Meister's Apprenticeship' என்ற இரண்டாவது நாவலை எழுதினார். இது பருவமடைதல் சார்ந்த கதைகளின் முன்னோடி வடிவமாகக் கொள்ளப்படுகிறது. வில்ஹெம் என்ற கதாநாயகனின் சுயதேடல் சார்ந்த கதையாகவும், கல்வி, கலை, இலக்கியம், வாழ்க்கையின் பொருள் சார்ந்த தேடலாகவும் விரிகிறது. இதன் இரண்டாவது பாகம் 'Wilhelm Meister's Journeyman Years' 1821-ல் வெளியானது.

கதே 'Faust Part One' (1808), 'Elective Affinities' (1809), Faust Part Two (1832) ஆகிய நாவல்களை எழுதினார். 'Aus meinem Leben: Dichtung und Wahrheit' என்பது இவரின் சுயசரிதை நூல். பாஸ்ட் நாவல் சாத்தானுடன் கதைசொல்லி போட்டுக் கொண்ட ஒப்பந்தம் பற்றியது. தன் ஆன்மாவுக்கு மாற்றாக அறிவையும், உலகியல் இன்பங்களையும் வழங்கச்சொல்லி சாத்தானுடன் கதைசொல்லி போட்டுக் கொண்ட ஒப்பந்தம் பற்றியது. இந்த நூலில் கதே பல வகையான தத்துவ விசாரணைகளையும், மனித லட்சியம், அறிவு, நன்மை, தீமை ஆகியவை பற்றிய விசாரணையும் செய்துள்ளார்.

கதே தன் ஆதர்ச எழுத்தாளர்களாக ஹோமர்(Homer), க்ளோப்ஸ்டாக் (Friedrich Gottlieb Klopstock) ஆகியோரைக் குறிப்பிட்டார்.

அறிவியல்

  • தாவர வளர்சிதைமாற்றம் குறித்து 'Metamorphosis of Plants' என்ற நூலை 1788-ல் எழுதினார்.
  • மனித மண்டையோட்டில் தாடை எலும்பைக் கண்டறிந்தார். இதுவே டார்வினின் பரிணாமவியல் தத்துவத்திற்கு உறுதுணையாக இருந்தது.
  • இவரின் ஒளியியல் கோட்பாடு நியூட்டனின் ஒளியியல் கோட்பாட்டை முற்றிலும் மறுக்கும் விதமாக இருந்தது. இது விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் பின்னாளில் பல விஞ்ஞான கோட்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. விட்ஜெண்டைன் போன்ற தத்துவவாதிகளையும், ஓவியர்களையும் பாதித்தது.
  • கதே கனிமவியலிலும் ஆர்வம் கொண்டவர். அத்துறைக்கு அவரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக அவரின் பெயர் ஒரு கனிமத்திற்கு சூட்டப்பட்டது (Goethite).
  • கதேயின் நிறக்கோட்பாடு (color theory) டர்னர் போன்ற ஓவியர்களை பாதித்தது.

தத்துவம்

1770-ல் ஸ்ட்ராஸ்பெர்கில் இலக்கிய விமர்சகரும் தத்துவவாதியுமான ஜோகன் காட்ஃப்ரிட் ஹெர்டரை (Johann Gottfried Herder) சந்தித்தார். அவர் வழியாக கற்பனாவாத அலையைப் (Sturm und Drang (Storm and Stress) movement) பற்றிய அறிமுகத்தைக் கொண்டார். ஹெர்டரின் நாட்டுப்புறவியல், கவிதை பற்றிய சிந்தனைகள் கதேயை பாதித்தன.

தனிமனிதத்துவம், உணர்வாழம், இயற்கை மற்றும் மனித அனுபவத்திற்கிடையேயான ஊடாட்டம் ஆகிய சிந்தனைகளின் மேல் ஈர்ப்பு கொண்டார். 17-ம் நூற்றாண்டில் கதே தொட்டுக்காட்டிய பல தத்துவக் கருத்துக்கள் பின்னாளில் ஹெகல், நீட்சே, ஹெர்மன் ஹெஸ்ஸே, சிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற தத்துவ அறிஞர்களைப் பாதித்தன.

பொறுப்புகள்

  • வெய்மரின் அரசவையில் அமைச்சர், முதலமைச்சர், சுரங்க அதிகாரி போன்ற பல முக்கியப்பதவிகளை வகித்தார்.
  • பல்வேறு பொது அமைப்புகளின் நிர்வாகியாக இருந்தார்.

மதிப்பீடு

"இயற்கை அன்னை தன் ரகசியங்களையெல்லாம் வரம்பின்றி வெளிப்படுத்தியது தன் ஒரே மகன் கதே மூலமாகத்தான்" என ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் மதிப்பிட்டார்.

"இதுவரை எழுதப்பட்ட நாவல்களிலேயே மிகச்சிறந்த நாவல் என 'Wilhelm Meister's Apprenticeship' நாவலை ஷோப்பனோவர் மதிப்பிட்டார்.

கதேயின் கவிதைகளை மொசார்ட், பீதோவன், வேக்னர் போன்ற இசை மேதைகள் இசையமைத்துள்ளனர். கதேயின் 'ஃபாஸ்ட்'(Faust) என்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்ட இசைக்கோர்வையை உலகின் மிக உன்னதமான கலைப்படைப்பு என பீத்தோவன் குறிப்பிட்டார்.

எமர்சனின் ஏழு உரைகள் அடங்கிய 'Representative Men'-ல் ப்ளேட்டோ, இம்மானுவேல் காண்ட், ஸ்வீடன்போர்க், மோண்டைகைன், நெப்போலியன், ஷேக்ஸ்பியர் ஆகியோருடன் கதேயையும் உயர்ந்த மனிதராக மதிப்பிட்டார்.

"1774-ல் வெளியான கதேயின் 'The Sorrows of Young Werther' என்ற நாவல் ஜெர்மன் மொழியின் நவீன புனைக்கதை வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பின் அதி உச்சங்களை மிக எளிமையான வடிவத்தில் சொல்லும் இந்த நாவல் காதல் ஈடேறாத ஒருவனின் கதை மட்டுமல்ல, அகத்தின் வேட்கைகளுக்கும் யதார்த்த உலகின் அபத்தங்களுக்கும் நடுவில் தவித்து நிற்கும் ஆன்மாவின் துயரக்கதையும் கூட" என எம்.கோபாலகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

வீமரிலுள்ள கதேயின் வீடு

மறைவு

கதே மார்ச் 22, 1832-ல் ஜெர்மனியில் உள்ள வீமரில் காலமானார்.

நூல்பட்டியல்

கவிதை
  • Hermann and Dorothea
  • the Roman Elegies
  • the West-Eastern Diwan
நாவல்
  • The Sorrows of Young Werther (1774)
  • Wilhelm Meister's Apprenticeship
  • Faust Part One (1808)
  • Elective Affinities (1809)
  • Faust Part Two (1832)
  • Aus meinem Leben: Dichtung und Wahrheit (சுயசரிதை)
நாடகம்
  • Gotz von Berlichingen
  • Iphigenia in Tauris
  • Egmont
  • Torquato Tasso
  • Reynard the Fox
  • The Natural Daughter
தமிழில்
  • காதலின் துயரம் (எம்.கோபாலகிருஷ்ணன்)

உசாத்துணை

  • எம்.கோபாலகிருஷ்ணன் - காதலின் துயரம் - தமிழினி பதிப்பகம்
  • கதே - worldhistoryedu

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Apr-2025, 12:51:56 IST