standardised

ஒரு புளியமரத்தின் கதை: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
(Moved to Standardised)
Line 35: Line 35:
* சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதை - ஐந்தாம் பதிப்புக்கான முன்னுரை 1996 -  காலச்சுவடு பதிப்பகம்
* சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதை - ஐந்தாம் பதிப்புக்கான முன்னுரை 1996 -  காலச்சுவடு பதிப்பகம்


{{ready for review}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:52, 6 February 2022

ஒரு புளியமரத்தின் கதை

எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய நாவல். 1966ல் இந்நாவல் வெளிவந்தது. தமிழின் நவீனத்துவ நாவல்களில் முக்கியமானது என விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது நாகர்கோயில் நகரில் இருந்ததாக கற்பனை செய்யப்படும் ஒரு புளியமரத்தை மையமாக்கி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பும் பின்பும் இருந்த காலகட்ட மாற்றங்களைச் சித்தரிக்கிறது.

பதிப்பு

சுந்தர ராமசாமி எழுதிய முதல் நாவல் இது. 1958ல் வ. விஜயபாஸ்கரன் நடத்திய இடதுசாரி இதழான சரஸ்வதிக்கு ஒரு தொடர்கதையாக இந்நாவல் எழுதப்பட்டது. அப்போது 'புளியமரம்' என இதற்கு தலைப்பு இருந்தது. சில அத்தியாயங்கள் வெளிவந்ததும் சரஸ்வதி நின்றுவிட்டது. சுந்தர ராமசாமி அதை தொடர்ந்து எழுதவில்லை.

1966ல் இந்நாவலை முழுமைசெய்தார். காஞ்சிபுரத்தில் ஓர் விடுதியில் தங்கி இதை எழுதினார் என்று 1996ல் காலச்சுவடு வெளியிட்ட இதன் ஐந்தாம் பதிப்புக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார். தமிழ்ப்புத்தகாலயம் கண.முத்தையா இந்நூலை வெளியிட்டார்.

சரஸ்வதியில் புளியமரம் தொடர்கதைக்கு 15.7.59-ல் வந்த விளம்பரம்

கதைச்சுருக்கம்

ஒரு புளியமரத்தின் கதை பாலு என்னும் கதைசொல்லியின் பார்வையில் சொல்லப்படுகிறது. தாமோதர ஆசான் என்னும் நாட்டுப்புறக் கதைசொல்லி புளியமரத்தின் பழையகதையைச் சொல்கிறார். குளம் ஒன்றின் நடுவே நின்றிருந்த புளியமரம் திருவிதாங்கூர் மகாராஜா நாகர்கோயிலுக்கு வருவதை ஒட்டி போடப்பட்ட சாலை காரணமாக சாலைநடுவே வந்துவிட்டது. அதன்பின் அது வரலாற்றின் மையமாக ஆகிறது

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கிறது. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தாமு, வணிகனாகிய காதர் போன்றவர்கள் வழியாக பின்னர் நடந்த வணிகப்போட்டி விவரிக்கப்படுகிறது. அப்போட்டியில் புளியமரம் நஞ்சூட்டி அழிக்கப்படுகிறது.

பின்புலம்

ஒரு புளியமரத்தின் கதை நாவலின் பின்புலம் பண்டைய திருவிதாங்கூர் சம்ஸ்தானமும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டின் கன்யாகுமரி மாவட்டமும் ஆக இருந்த நிலப்பகுதி. கதை நாகர்கோயில் நகரில் நடைபெறுகிறது. தமிழும் மலையாளமும் கலந்த உரையாடல்கள் இந்நாவலில் உள்ளன. பண்பாடும் கேரளமும் தமிழ்நாடும் கலந்ததாக உள்ளது.

நாகர்கோயிலில் வேப்பமூடு ஜங்ஷன் என்று சொல்லப்படும் இடமே இந்நாவலில் புளியமர ஜங்ஷன் என்று சொல்லப்படுகிறது என்று சுந்தர ராமசாமி 1996ல் ஐந்தாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

ஒரு புளியமரத்தின் கதை மூன்று அடிப்படைகளால் ஒரு செவ்வியல்படைப்பு என்று கருதப்படுகிறது.

அதன் வடிவம் தமிழிலக்கியத்திற்கு புதியது. அதில் மையக்கதாபாத்திரங்களும் அவர்களின் உறவுச்சிக்கல்களும் சீராக ஓடும் கதையும் இல்லை. ஒரு புளியமரத்தை ஒட்டி நடக்கும் உதிரி நிகழ்வுகளும் நினைவுகளும்தான் நாவலாகியிருக்கின்றன.

நேரடியாக கருத்துவிவாதம் எதையும் நிகழ்த்தாமல் புளியமரம் என்னும் உருவகம் வழியாகவே இந்திய வரலாற்றில் நிகழ்ந்த அரசியல் மற்றும் அறவியல் மாற்றங்களை விவரிக்கிறது இந்நாவல்.

தமிழில் எழுதப்பட்ட அங்கத நாவல்களில் முதன்மையானது என்னும் இடம் இந்நாவலுக்கு உண்டு. பல கதாபாத்திரங்களை கேலிச்சித்திரங்களாகவே சுந்தர ராமசாமி அமைத்திருக்கிறார்.

மொழியாக்கம்

  • சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை சி. கிருஷ்ணன் மொழியாக்கத்தில் பெங்குவின் வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவந்தது (Tale of a Tamarind Tree, 1995). அதன் இரண்டாவது மொழியாக்கமும் பெங்குவின் வெளியீடாக வந்தது. (Tamarind History, Blake Wentworth, 2009)
  • Sipuro shel Ets Hatamarhindi, Hebrew translation, Dr Ronit Ricci, Tel Aviv: Hakibbutz Hame'uchad, 2000

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.