பத்மா விஸ்வநாதன்: Difference between revisions
(Inserted READ ENGLISH template link to English page) |
No edit summary |
||
| Line 55: | Line 55: | ||
* [https://solvanam.com/2020/05/24/%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%ae%e0%af%8b%e0%ae%b8%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-1/ க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1ப்ளேக்' நோயும்[2] - பத்மா விஸ்வநாதன் - சொல்வனம், தமிழாக்கம் மைத்ரேயன் ]] | * [https://solvanam.com/2020/05/24/%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%ae%e0%af%8b%e0%ae%b8%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-1/ க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1ப்ளேக்' நோயும்[2] - பத்மா விஸ்வநாதன் - சொல்வனம், தமிழாக்கம் மைத்ரேயன் ]] | ||
* [https://stargazerpuj.wordpress.com/2014/05/27/3555/ Book Review: Toss of a Lemon by Padma Viswanathan - stargazerpuj] | * [https://stargazerpuj.wordpress.com/2014/05/27/3555/ Book Review: Toss of a Lemon by Padma Viswanathan - stargazerpuj] | ||
* [https://www.youtube.com/watch?v=GYnzpgqXkgA&t=659s Padma Vishwanathan | Women Writing Today | Manasa Publications, youtube.com] | |||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|12-Mar-2026, 05:57:15 IST}} | {{Fndt|12-Mar-2026, 05:57:15 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 23:24, 13 July 2026
To read the article in English: Padma Viswanathan.
பத்மா விஸ்வநாதன் (Padma Viswanathan) (பிறப்பு: 1968) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பிரேசிலிய, போர்த்துகீசிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வருகிறார். நாவல்கள், சிறுகதைகள், சமூக விழிப்புணர்வு சார்ந்த நாடகங்கள், பண்பாடு பற்றிய கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதியுள்ளார். கனடாவிலும், அமெரிக்காவிலும் உள்ள இதழ்களில் இவரின் கதைகள் வெளிவந்துள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மா விஸ்வநாதன் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்திலுள்ள நெல்சன் என்ற இடத்தில் 1968-ல் பிறந்தார்.
அல்பெர்ட்டா பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்றார். நூலகராகப் பணியாற்றினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் எழுதுகலையில் முதுகலைப் பட்டமும், ஆர்கென்சா (Arkansas) பல்கலைக்கழகத்தில் எழுதுகலையில் MFA (Master of Fine Arts in Creative Writing) பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
பத்மா விஸ்வநாதனின் கணவர் ஜெஃப்ரி ப்ராக். பத்மா அவரை நியூ ஹாம்ப்ஷயரில் மெக்டோவல் (Mac Dowell) காலனி என்ற அமைப்பில் நிதிநல்கை பெற்று எழுதிக் கொண்டிருந்தபோது சந்தித்தார். ஜெஃப்ரி ப்ராக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பத்மா விஸ்வநாதன் குடும்பத்துடன் ஆர்கென்சா மாநிலம் ஃபெயட்வில்(Fayetteville) நகரில் வசிக்கிறார்.
பத்மா ஆர்கென்சா பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்துத் துறையில் (புனைகதை மற்றும் மொழிபெயர்ப்பு) பேராசிரியர்.
இலக்கிய வாழ்க்கை
பத்மா விஸ்வநாதன் Banff Playwrights' Colony என்னும் அமைப்பில் எழுத்தாளர்களுக்கான நிதிநல்கை பெற்று எழுத ஆரம்பித்தார்.
1999-ல் வெளியான 'Ethnicities: Plays from the New West' என்ற நவீன நாடகத் தொகுப்பு நூலில் பத்மா விஸ்வநாதனின் 'ஹௌஸ் ஆஃப் சேக்ரெட் கௌஸ்'( House of sacred cows) என்ற நாடகம் இடம்பெற்றுள்ளது. பத்மா இரு நாடக நூல்களின் ஆசிரியர். இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் கிராண்டா(Granta), பிரிக்(Brick) மற்றும் பல கனடிய, அமெரிக்க இதழ்களில் வெளிவந்துள்ளன.
நாவல்
இவரின் முதல் நாவல் 'த டாஸ் ஆஃப் அ லெமன்' (The Toss of a Lemon) 1890 முதல் 1960 வரை வாழ்ந்த ஒரு தமிழ் பிராமணப் பெண்ணின் கதையை வைத்து பின்னப்பட்ட, தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட ஒரு வரலாற்று நாவல். எட்டு நாடுகளில் வெளியிடப்பட்டது.
1985-ல் ஏர் இந்தியா விமானம் குண்டுகளால் தகர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் உயிரிழக்க, அவர்களின் நட்பும் உறவும், சமூகமும் இழப்பை எதிர்கொண்டதையும், அதன் விளைவுகளையும் ஆராயும் 'த எவெர் ஆஃப்டெர் ஆஃப் அஷ்வின் ராவ்'(The Ever After of Ashwin Rao) நாவல் 1985-ல் வெளியானது. நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட நட்பு மற்றும் உண்மையான குற்றம் சார்ந்த நாவல் 'Like Every Form of Love' 2023-ல் வெளியானது. மூன்று புனைகதை மற்றும் அல்புனைவுகள் அடங்கிய 'த சார்டர்ஹௌஸ் ஆஃப் பத்மா' (The Charterhouse of Padma) என்ற பல்லூடக நாவல் 2024-ல் வெளியானது.
தொகுப்பாசிரியர்
பென்குயின் புக் நிறுவனம் தொகுத்த பிரேசில் சிறுகதைகளின் (The Penguin Book of Brazilian Short Stories) இணை ஆசிரியர்.
விருது
- பாஸ்டன் ரிவ்யூ சிறுகதைப் போட்டியில் 'Transitory Cities' சிறுகதைக்கு முதல் பரிசு
- முதல் புத்தகமான 'The Toss of a Lemon' நூல் 'பென் யுஎஸ்ஏ' பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- ஆர்கென்சா மாநிலத்தின் போர்ட்டர் விருது( இலக்கியப் பங்களிப்புக்காக)
- 'The Toss of a Lemon' நூல் புக்கர் பரிசு 2026 குறும்பட்டியலில் இடம்பெற்றது.
நூல் பட்டியல்
சிறுகதைகள்
- Transitory Cities (Boston Review, 2012)
- The Barber Lover (AGNI Online, 2023)
- Better Protect America (Granta, 2017)
நாவல்
- The Toss of a Lemon (Random House, 2008)
- The Ever After of Ashwin Rao (Random House, 2014)
- Like Every Form of Love (Random House, 2023)
நாடகங்கள்
- House of Sacred Cows (1999)
- By Air, By Water, By Wood (2000)
மொழிபெயர்ப்பு
- Sao Bernardo (Graciliano Ramos) (New York Review Books Classics, 2020)
மொழிபெயர்ப்பு
- The Penguin Book of Brazilian Short Stories
இணைப்புகள்
- பத்மா விஸ்வநாதன் - வலைதளம்
- பத்மா விஸ்வநாதன் நேர்காணல் - அலமேலு மணி - tamilonline-thendral
- க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1ப்ளேக்' நோயும்[2 - பத்மா விஸ்வநாதன் - சொல்வனம், தமிழாக்கம் மைத்ரேயன் ]]
- Book Review: Toss of a Lemon by Padma Viswanathan - stargazerpuj
- Padma Vishwanathan | Women Writing Today | Manasa Publications, youtube.com
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Mar-2026, 05:57:15 IST