கோபுலு: Difference between revisions
| Line 14: | Line 14: | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
கோபுலு விகடனில் ஓவியராகப் பணியாற்றினார். 1962ல் ஓர் விளம்பர நிறுவனத்தை உருவாக்கினார். பின்னர் மீண்டும் முழுநேர ஓவியராக வாழ்ந்தார்.மனைவி | கோபுலு விகடனில் ஓவியராகப் பணியாற்றினார். 1962ல் ஓர் விளம்பர நிறுவனத்தை உருவாக்கினார். பின்னர் மீண்டும் முழுநேர ஓவியராக வாழ்ந்தார்.மனைவி மைதிலி. ஒரே மகன் ராஜேஷ் என்னும் ஜி.ராஜேஸ்வரன். | ||
== கலைவாழ்க்கை == | == கலைவாழ்க்கை == | ||
| Line 35: | Line 35: | ||
== விளம்பரத்துறை == | == விளம்பரத்துறை == | ||
கோபுலு 1963 ல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் (Adwave Advertisements Ltd) என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை | கோபுலு 1963 ல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் (Adwave Advertisements Ltd) என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஜி.விமலாவுடன் சேர்ந்து ஆரம்பித்தார். [[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
| Line 49: | Line 49: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://web.archive.org/web/20200118151932/http://www.cartoonistsindia.com/htm/pr_gopulu.htm கேலிச்சித்திர ஓவியர் சங்கமலர் கட்டுரை] | |||
* [https://web.archive.org/web/20200118151932/http://www.cartoonistsindia.com/htm/pr_gopulu.htm கேலிச்சித்திர ஓவியர் சங்கமலர் கட்டுரை] | |||
* [https://solvanam.com/2015/06/25/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF/ கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்] | |||
* [https://mediamantrabymrinalchatterjee.blogspot.com/2015/06/50-great-indian-cartoonists-gopulu.html 50 Great Indian Cartoonists | Gopulu] | |||
Revision as of 11:27, 18 June 2026
கோபுலு ( (18 ஜூன் 1924 - 29 ஏப்ரல் 2015) ) ஓவியர். கேலிச்சித்திரக்காரர். தமிழின் முதன்மையான வார இதழ்களில் கதைகளுக்கான ஓவியங்களை வரைந்தார். பின்னர் விளம்பரத்துறையில் பணியாற்றினார். கோட்டோவியங்களில் தனிப்பாணியையும், காட்சி நுட்பத்தையும் உருவாக்கியவராக அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
பழைய தஞ்சையில் 18 ஜூன் 1924 ல் பிறந்த கோபுலுவின் இயற்பெயர் எஸ்.கோபாலன்.
கோபுலு கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் ஓவியக்கலை பயின்றார். 1941ல் ஆனந்த விகடன் ஓவியர் மாலி கும்பகோணத்திற்கு ஆலயங்களை வரைவதற்காக வந்தபோது அவரைச் சந்தித்து அவரிடமும் ஓவியம் பயின்றார்.
தனிவாழ்க்கை
கோபுலு விகடனில் ஓவியராகப் பணியாற்றினார். 1962ல் ஓர் விளம்பர நிறுவனத்தை உருவாக்கினார். பின்னர் மீண்டும் முழுநேர ஓவியராக வாழ்ந்தார்.மனைவி மைதிலி. ஒரே மகன் ராஜேஷ் என்னும் ஜி.ராஜேஸ்வரன்.
கலைவாழ்க்கை
மாலி கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோபுலு திருவையாறு தியாகராயரின் வீட்டில், அவர் பூசை செய்த இராமர் பட்டாபிஷேகப் படத்தை வரைந்தார். 1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம்பெற்றது. மாலி கோபாலனின் பெயரை கோபுலு என்று மாற்றினார்.
விகடன் அட்டைப்படங்கள்
கோபுலு விகடனில் மாலியுடன் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் விகடனின் நட்சத்திர ஓவியராக அறியப்பட்டார். விகடன் 1940-1960 காலகட்டத்தில் அமெரிக்க இதழான சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் இதழை முன்மாதிரியாகக் கொண்டு அட்டையில் யதார்த்தமான வாழ்க்கைச்சூழலைச் சித்தரிக்கும் நகைச்சுவை ஓவியங்களை வெளியிட்டது. சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் இதழில் நார்மன் ராக்வெல் (Norman Rockwell) வரைந்த ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்டு கோபுலு அத்தகைய ஓவியங்களை ஆனந்த விகடனில் வரைந்தார். அவை தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதியவை. ஆகவே அவை மிகவும் புகழ்பெற்றன.
நகைச்சுவை துணுக்குகள்
ஆனந்தவிகடன் இதழ் அதன் நகைச்சுவைத் துணுக்குகளுக்காக புகழ்பெற்றிருந்தது. கோபுலு அதில் ஏறத்தாழ முப்பதாயிரம் நகைச்சுவை துணுக்கு ஓவியங்களை வரைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்கதைக்கான படங்கள்
கோபுலு விகடனில் வெளியான பல புகழ்பெற்ற தொடர்கதைகளுக்கு காட்சிச்சித்திரங்களை வரைந்தார். தில்லானா மோகனாம்பாள், துப்பறியும் சாம்பு, ஆலவாய் அழகன் போன்ற தொடர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் மிகப்புகழ்பெற்றவை.
கேலிச்சித்திரங்கள்
தமிழில் இந்தியா இதழ் முதல் அரசியல் கேலிச்சித்திரங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனந்த விகடன் இதழ் அதில் குறிப்பிடத்தக்க முன்னகர்வை உருவாக்கியது. மாலிக்குப்பின் கோபுலு வரைந்த அரசியல் கேலிச்சித்திரங்கள் புகழ்பெற்றவை. கோபுலு அதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஓவியர் டேவிட் லோ (David Low) வை முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார்.
பிற்கால ஓவியங்கள்
கோபுலு முதிய வயதில் விளம்பரத்துறையில் இருந்து விலகி மீண்டும் இதழ்களுக்கான ஓவியங்களை வரைந்தார். அமுதசுரபி, கலைமகள் போன்ற இதழ்களின் சிறப்புமலர்களுக்காக வரைந்த அட்டை ஓவியங்கள் மரபான பாணியில் வண்ணமயமாக அமைந்திருந்தன.
விளம்பரத்துறை
கோபுலு 1963 ல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் (Adwave Advertisements Ltd) என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஜி.விமலாவுடன் சேர்ந்து ஆரம்பித்தார். குங்குமம் இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார்.
மறைவு
கோபுலு 29 ஏப்ரல் 2015 அன்று சென்னையில் காலமானார்
விருதுகள்
- கலைமாமணி விருது- 1991
- சித்ரகலாரத்னா -சங்கர மடம் விருது- 1995
- எம். ஏ. சிதம்பரம் செட்டியார் விருது- 1999
- முரசொலி விருது -2000
- இந்தியக் கேலிச்சித்திரக்காரர்கள் சங்கம் வாழ்நாள் சாதனை விருது 2001