சுஜா செல்லப்பன்: Difference between revisions
(Corrected typo errors;) |
|||
| Line 22: | Line 22: | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
"தன் எளிமையினூடாக, கண்விரித்து காட்சியுலகைக் கொண்டாடும் தீரா இளமையினூடாக, வீரான்குட்டி அடைந்த மொழிக்களியாட்டை நேர்த்தியாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் சுஜா" என [[ஜெயமோகன்]] மதிப்பிட்டார். | |||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
Revision as of 20:24, 27 May 2026
சுஜா செல்லப்பன் (பிறப்பு: மே 16, 1978) சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவர் தமிழில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தமிழ் அறிவியல் புனைகதை இதழான அரூ இதழின் இணை நிறுவனர் மற்றும் இணை ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
சுஜா செல்லப்பன் தமிழ்நாட்டின் காரைக்குடியில் செல்லப்பன், யஷோதா இணையருக்கு மே 16, 1978-ல் பிறந்தார். கீழக்கரை முகமத் சதக் பொறியியல் கல்லூரியில் மின்சாரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
சுஜா செல்லப்பன் 2001-ல் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்து 2008-ல் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றார். ஷ்ரேயா, ஷ்ரிஹா ஆகிய இரண்டு மகள்களுடன் சிங்கப்பூரில் வசிக்கிறார்.
மொழியாக்கத்தையும் செம்மையாக்கத்தையும் சுயாதீனத் தொழிலாக செய்துவருகிறார். சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தமிழ்த் துணைத்தலைப்புகளும் எழுதிவருகிறார்.
இதழியல்
தமிழ் அறிவியல் புனைகதை இதழான அரூ இதழின் இணை நிறுவனர் மற்றும் இணை ஆசிரியர். 2018-ல் நண்பர்கள் ராம்சந்தர், நா.பாலாவுடன் இணைந்து அரூ இணைய இதழைத் துவங்கி நடத்தி வந்தார். தமிழில் கனவுருப்புனைவு மற்றும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கான களமாக அரூ இதழ் செயல்பட்டது.
அரூவின் உள்ளடக்கத்திலும் அறிவியல் சிறுகதைப் போட்டிகளின் கதைகள் தேர்வுகளிலும், நேர்காணல்களிலும் முக்கியப் பங்கு வகித்தார். அரூவில் வெளியான அனைத்துப் படைப்புகளையும் செம்மையாக்கம் செய்தார். அரூவிற்கு மொழியாக்கங்களும் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
சுஜா செல்லப்பனின் படைப்புகள் காலச்சுவடு, தமிழ்வெளி, பதாகை, தமிழ் முரசு, அவள் விகடன், கல்கி, கணையாழி, தி சிராங்கூன் டைம்ஸ், அரூ, கனலி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரின் 'ஒளிவிலகல்' சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் 'Refraction' என்கிற தலைப்பில் Unwinding (2019) தொகுப்பில் இடம்பெற்றது. தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.
மொழியாக்கம்
சுஜா செல்லப்பன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்து வருகிறார். வீரான்குட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு 'வீரான்குட்டி கவிதைகள்' எனும் தலைப்பில் தன்னறம் பதிப்பகத்தால் 2024-ல் வெளியாகியது.
இலக்கிய இடம்
"தன் எளிமையினூடாக, கண்விரித்து காட்சியுலகைக் கொண்டாடும் தீரா இளமையினூடாக, வீரான்குட்டி அடைந்த மொழிக்களியாட்டை நேர்த்தியாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் சுஜா" என ஜெயமோகன் மதிப்பிட்டார்.
விருதுகள்
- தங்கமுனை விருது 2025 - 'உன்னி நெக்குருகி' சிறுகதை
- தங்கமுனை விருது 2025 - சிறந்த மொழியாக்கப் பிரிவில் 'அகண்' கதையின் ஆங்கில மொழியாக்கத்திற்காக
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் குறுநாவல் போட்டி பரிசு 2017
நூல்கள் பட்டியல்
மொழியாக்கம்
- வீரான்குட்டி கவிதைகள் (2024) - தன்னறம் பதிப்பகம்
சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்
- பொன்விழா சிறுகதைகள் (2015)
- அக்கரைப் பச்சை (2017)
- Unwinding (2019)
கவிதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்
- நதிமிசை நகரும் கூழாங்கற்கள் (2014)
- காலப்பெருவெளி (2015)
- யாதுமாகி (2019)
- புவி எங்கும் தமிழ்க் கவிதை (2019)
இணைப்புகள்
- சுஜா செல்லப்பனின் இணையதளம்
- வீரான்குட்டி கவிதைகள் 1 - ஜெயமோகன் இணையதளம்
- வீரான்குட்டி கவிதைகள் 2 - ஜெயமோகன் இணையதளம்
- தனித்திருக்க விரும்பும் மனம்: சுஜா செல்லப்பனின் ஒளிவிலகல் - அ. ராமசாமி
- காமத்தை மையமாக்குதலும் சொல்முறைச் சோதனைகளும்: சுஜாவின் இரண்டு சிறுகதைகள் - அ. ராமசாமி
- அகண்: உள்ளோடும் தோற்றமயக்கம் - அ. ராமசாமி
- அக்கரைப் பச்சை - சிவானந்தம் நீலகண்டன்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.