மெர்வின்: Difference between revisions
Para Added and Edited: Images Added; Link Created: Proof Checked. |
Corrected typo errors; |
||
| Line 11: | Line 11: | ||
மெர்வினின் தந்தை ஈரோட்டில் வட்டாட்சியராக பணியாற்றினார். அவர் சிறந்த வாசகராக இருந்தார். தந்தையிடமிருந்த நூல்களை வாசித்து மெர்வின் இலக்கிய ஆர்வம் பெற்றார். சுயமுன்னேற்ற நூல்களை அதிகம் எழுதிய [[எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்]] நூல்களை வாசித்தார். அவரையே தனது எழுத்துக்கான முன்னோடியாகக் கொண்டார். | மெர்வினின் தந்தை ஈரோட்டில் வட்டாட்சியராக பணியாற்றினார். அவர் சிறந்த வாசகராக இருந்தார். தந்தையிடமிருந்த நூல்களை வாசித்து மெர்வின் இலக்கிய ஆர்வம் பெற்றார். சுயமுன்னேற்ற நூல்களை அதிகம் எழுதிய [[எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்]] நூல்களை வாசித்தார். அவரையே தனது எழுத்துக்கான முன்னோடியாகக் கொண்டார். | ||
மெர்வினின் முதல் நூல், | மெர்வினின் முதல் நூல், 'வாழ்க்கை உன் கைகளிலே' 1970-ல் வெளிவந்தது. தொடர்ந்து மெர்வின் தன்னம்பிக்கை நூல்களையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். மெர்வினின் நூல்களை வாசித்துப் பலர் தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் பெற்றனர். மெர்வின் பல்வேறு தலைப்புகளில் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் எழுத்தாளர்கள் குறித்த தொகுப்பு நூல் ஒன்றையும், எழுத்தாளர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, 'எழுத்தாளர் கலைக் களஞ்சியம்' என்ற நூலையும் எழுதினார். | ||
மெர்வின் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தார். திரைப்பட விவாதங்கள் சிலவற்றில் கலந்துகொண்டார். பிற பணிகள் எதற்கும் செல்லவில்லை. | மெர்வின் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தார். திரைப்பட விவாதங்கள் சிலவற்றில் கலந்துகொண்டார். பிற பணிகள் எதற்கும் செல்லவில்லை. | ||
== இதழியல் == | == இதழியல் == | ||
மெர்வின், | மெர்வின், 'பூச்செண்டு' என்ற இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். | ||
== பதிப்பு == | == பதிப்பு == | ||
மெர்வின், தனது நூல்களை வெளியிடுதற்காகவே | மெர்வின், தனது நூல்களை வெளியிடுதற்காகவே 'மெர்வின் பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனத்தை நடத்தினார். | ||
[[File:Mervin Speech.jpg|thumb|மெர்வின் உரை]] | [[File:Mervin Speech.jpg|thumb|மெர்வின் உரை]] | ||
== விருது == | == விருது == | ||
* | * 'எண்ணம் வெற்றியின் சின்னம்' நூலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான பரிசு. | ||
* | * 'கடமை தருவது பெருமை' நூலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான பரிசு. | ||
== திறனாய்வு == | == திறனாய்வு == | ||
'மெர்வின் எழுத்து... வெற்றியின் கண்ணாடி' என்ற தலைப்பில், [[எஸ். குலசேகரன்|டாக்டர் எஸ். குலசேகரன்]] நூல் ஒன்றை எழுதினார். நிவேதிதா புத்தக பூங்கா இந்நூலை வெளியிட்டது. | |||
'வாழ்வியல் சாதனையாளர் மெர்வின்' என்ற தலைப்பில் டாக்டர் எஸ். குலசேகரன் மற்றுமொரு நூல் ஒன்றை எழுதினார். சுவாமி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. | |||
மெர்வினின் எழுத்து குறித்து, | மெர்வினின் எழுத்து குறித்து, 'மெர்வின் நூல்களின் மதிப்பும் மாண்பும்' என்றொரு திறனாய்வு நூல் வெளியானது. இதனை மெர்வின் பதிப்பகம் வெளியிட்டது. | ||
== மறைவு == | == மறைவு == | ||
| Line 41: | Line 41: | ||
== மதிப்பீடு == | == மதிப்பீடு == | ||
மெர்வின் தன்னம்பிக்கை நூல்களையும் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். கிறித்தவ மதம் சார்ந்த நூல்கள் சிலவற்றை எழுதினார். தனது சுய முன்னேற்ற நூல்களால் பலரது வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தினார். | மெர்வின் தன்னம்பிக்கை நூல்களையும் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். கிறித்தவ மதம் சார்ந்த நூல்கள் சிலவற்றை எழுதினார். தனது சுய முன்னேற்ற நூல்களால் பலரது வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தினார். "இவரது தன்னம்பிக்கையையும், சுய முன்னேற்ற சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி இருக்கிறது. சாதனைகள் படைக்கத் தூண்டுதலாக இருந்திருக்கின்றன." என்று கலாரசிகன் தினமணி இதழில் குறிப்பிட்டார். | ||
[[எம்.எஸ். உதயமூர்த்தி]], எம்.ஆர். எம் அப்துற் றஹீம் வரிசையில் தன்னம்பிக்கை நூல்களை அதிகம் எழுதிய எழுத்தாளராக மெர்வின் மதிப்பிடப்படுகிறார். | [[எம்.எஸ். உதயமூர்த்தி]], எம்.ஆர். எம் அப்துற் றஹீம் வரிசையில் தன்னம்பிக்கை நூல்களை அதிகம் எழுதிய எழுத்தாளராக மெர்வின் மதிப்பிடப்படுகிறார். | ||
Revision as of 22:25, 1 February 2026


மெர்வின் (இ.எஸ். மெர்வின்) (மே 31, 1947 - பிப்ரவரி 14, 2024) எழுத்தாளர். பத்திரிகை ஆசிரியர். தன்னம்பிக்கைக் கட்டுரை நூல்கள் பலவற்றை எழுதினார். சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றார். மெர்வினின் நூல்கள், தமிழக அரசால், 2025-ல் நாட்டுடைமை செய்யப்பட்டன.
வாழ்க்கைக் குறிப்பு
மெர்வின், மே 31, 1947 அன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் பிறந்தார். பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். மணமானவர். மகள்: சுதர்ஷினி.

இலக்கிய வாழ்க்கை
மெர்வினின் தந்தை ஈரோட்டில் வட்டாட்சியராக பணியாற்றினார். அவர் சிறந்த வாசகராக இருந்தார். தந்தையிடமிருந்த நூல்களை வாசித்து மெர்வின் இலக்கிய ஆர்வம் பெற்றார். சுயமுன்னேற்ற நூல்களை அதிகம் எழுதிய எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் நூல்களை வாசித்தார். அவரையே தனது எழுத்துக்கான முன்னோடியாகக் கொண்டார்.
மெர்வினின் முதல் நூல், 'வாழ்க்கை உன் கைகளிலே' 1970-ல் வெளிவந்தது. தொடர்ந்து மெர்வின் தன்னம்பிக்கை நூல்களையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். மெர்வினின் நூல்களை வாசித்துப் பலர் தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் பெற்றனர். மெர்வின் பல்வேறு தலைப்புகளில் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் எழுத்தாளர்கள் குறித்த தொகுப்பு நூல் ஒன்றையும், எழுத்தாளர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, 'எழுத்தாளர் கலைக் களஞ்சியம்' என்ற நூலையும் எழுதினார்.
மெர்வின் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தார். திரைப்பட விவாதங்கள் சிலவற்றில் கலந்துகொண்டார். பிற பணிகள் எதற்கும் செல்லவில்லை.
இதழியல்
மெர்வின், 'பூச்செண்டு' என்ற இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
பதிப்பு
மெர்வின், தனது நூல்களை வெளியிடுதற்காகவே 'மெர்வின் பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனத்தை நடத்தினார்.

விருது
- 'எண்ணம் வெற்றியின் சின்னம்' நூலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான பரிசு.
- 'கடமை தருவது பெருமை' நூலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான பரிசு.
திறனாய்வு
'மெர்வின் எழுத்து... வெற்றியின் கண்ணாடி' என்ற தலைப்பில், டாக்டர் எஸ். குலசேகரன் நூல் ஒன்றை எழுதினார். நிவேதிதா புத்தக பூங்கா இந்நூலை வெளியிட்டது.
'வாழ்வியல் சாதனையாளர் மெர்வின்' என்ற தலைப்பில் டாக்டர் எஸ். குலசேகரன் மற்றுமொரு நூல் ஒன்றை எழுதினார். சுவாமி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.
மெர்வினின் எழுத்து குறித்து, 'மெர்வின் நூல்களின் மதிப்பும் மாண்பும்' என்றொரு திறனாய்வு நூல் வெளியானது. இதனை மெர்வின் பதிப்பகம் வெளியிட்டது.
மறைவு
மெர்வின், பிப்ரவரி 14, 2024 அன்று காலமானார்.
நாட்டுடைமை
மெர்வினின் நூல்கள், 2025-ல், தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்டன. ரூ. 10 லட்சம் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டது.
மதிப்பீடு
மெர்வின் தன்னம்பிக்கை நூல்களையும் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். கிறித்தவ மதம் சார்ந்த நூல்கள் சிலவற்றை எழுதினார். தனது சுய முன்னேற்ற நூல்களால் பலரது வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தினார். "இவரது தன்னம்பிக்கையையும், சுய முன்னேற்ற சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி இருக்கிறது. சாதனைகள் படைக்கத் தூண்டுதலாக இருந்திருக்கின்றன." என்று கலாரசிகன் தினமணி இதழில் குறிப்பிட்டார்.
எம்.எஸ். உதயமூர்த்தி, எம்.ஆர். எம் அப்துற் றஹீம் வரிசையில் தன்னம்பிக்கை நூல்களை அதிகம் எழுதிய எழுத்தாளராக மெர்வின் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- வாழ்க்கை உன் கைகளிலே
- செயலே செழுமை தரும்
- கடமை தருவது பெருமை
- வெற்றி நம் இதயத்திலே!
- வெற்றி நிச்சயம்
- உங்களால் வெற்றிபெற முடியும்
- எண்ணம் வெற்றியின் சின்னம்
- வெற்றி தரும் நல்ல குடும்பம்
- உலகை உயர்த்திய உத்தமிகள்
- வெற்றி உங்களிடமே
- சிந்தனையே சாதனை
- உழைப்போம் உயர்வோம்
- முயற்சியே முன்னேற்றம்
- அறிவுக்கடல் அப்துற்றகீம்
- உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு
- கருப்பு காந்தி காமராசர்
- உலகம் போற்றும் உத்தமர்
- சமாதானச் சான்றோர்கள்
- லியோவின் வாழ்க்கை ஒரு வசந்தம்
- டால்ஸ்டாய்
- நெப்போலியன்
- கோபப்படாதே
- பயப்படாதே!
- சோர்ந்துவிடாதே
- வருத்தப்படாதே
- திறமையே நமது செல்வம்
- நம்பிக்கை நம்மிடமே
- நினைப்பது நிறைவேறும்
- மனித நேசம் மகிழ்ச்சிதரும்
- அணுவின் தந்தை ஐன்ஸ்டீன்
- மேதைகள் வாழ்விலே
- காசு இங்கே, இயேசு எங்கே
- விவசாய விஞ்ஞானி ஜகதீஸ் சந்திரபோஸ்
- தாமஸ் ஆல்வா எடிசன்
- தேர்வில் வெற்றி பெறமுடியும்
- வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்
- உயர்வு உன்னிடமே!
- கவலையே போ
- வெற்றியுடன் வாழ வழிகள்
- ஸ்டாலின்
- உலக வீரன் நெப்போலியன்
- அன்பின் அதிபர் ஆபிரகாம் லிங்கன்
- முடியாது என்பது கிடையாது
- வசியம் வாழ்க்கைக்கு அவசியம்
- மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி
- வாழ்க்கை ஒரு வசந்தம்
- தேர்வில் வெற்றி பெறமுடியும்
- பேராற்றல் பெற்ற பேரறிஞர்கள்
- சான்றோர் வாழ்வில் சாதனைகள்
- பயனுள்ள குடும்ப குறிப்புகள்
- வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்
- அறிஞர்களின் வாழ்வில் நடந்த அதிசயங்கள்
- அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள்
- மேதைகளின் வாழ்வில் மேன்மையான நிகழ்ச்சிகள்
- வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி
- வரலாறு தரும் வெற்றி
- பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்
- நல்ல எண்ணம் நன்மையைத் தரும்
- ஆங்கில அரசன் ஜான்சன்
- பெண் விடுதலைக்கு வழிகாட்டியவர்கள்
- விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள்
- நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
- நினைப்பதை சாதிக்கலாம்
- வாழ வழிகாட்டும் மனத்தின் சக்தி
- சிந்தனையே சாதனை
- தடைக்கு விடை கொடு
- உயர்வு தரும் உன்னத சம்பவங்கள்
- வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்
- நல்ல நட்பு உயர்வு தரும்
- வெற்றி உங்களுக்குத்தான்
- வெற்றியின் சின்னம்
- முயன்றால் முன்னேற முடியும்
- உலகை உயர்த்திய உத்தமர்கள்
- பிறந்தது வாழ்வதற்கே
- முயன்றால் முன்னேற முடியும்
- மென்மையான பேச்சு மேன்மை தரும்
- எழுத்ததிபர்கள்
- தமிழ் எழுத்தாளர்கள்
- எழுத்தாளர்கள் கலைக்களஞ்சியம்
- ஒரு நிபந்தனை
- பேராற்றல் பெற்ற பேரறிஞர்கள்
- மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி
- இயேசு பிறந்தார்
- எண்ணம் வெற்றியின் சின்னம்
- தமிழ் எழுத்தாளர்கள்
- எழுத்தாளர் கலைக் களஞ்சியம்
- பெண் வாழ்வின் கண்
- பாதிரியார்
- நற்செய்தி நாடக விழா
- இயேசு என்ன போதித்தார்
- ஊக்கமே உயர்வு தரும்
- வெற்றி தரும் பிரார்த்தனைகள்
- பிறந்தது வாழ்வதற்கே
- எழுத்தாளர் பதிப்பாளர் விற்பனையாளர்
- எழுத்தாளர் சேவை எல்லோருக்கும் தேவை
உசாத்துணை
- மெர்வின் வாழ்க்கைக் குறிப்பு, தமிழ் மின் நூலகம்
- மெர்வின் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
- மெர்வின் கட்டுரை, கலாரசிகன், தினமணி இதழ்
- மெர்வின், தினமணி இதழ் கட்டுரை
- மெர்வின் நூல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
- மெர்வின் உரை, யூ ட்யூப் தளம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.