under review

முன் தேர்க்குரவை(வாகைத் திணை): Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Corrected typo errors;)
 
Line 13: Line 13:
முழுவலி வயவர் முன்ஆ டின்று            - (கொளு-17)
முழுவலி வயவர் முன்ஆ டின்று            - (கொளு-17)
</poem>
</poem>
‘கணைய மரத்தைப் போன்று வலிய தோள்களையுடைய அரசனது வெற்றி மிக்க தேரின் முன் வலிமையில் சிறந்த வீரர் ஆடுதல்' என்று முன் தேர்க்குரவையில் இலக்கணத்தை வகுக்கிறது.
'கணைய மரத்தைப் போன்று வலிய தோள்களையுடைய அரசனது வெற்றி மிக்க தேரின் முன் வலிமையில் சிறந்த வீரர் ஆடுதல்' என்று முன் தேர்க்குரவையில் இலக்கணத்தை வகுக்கிறது.

எடுத்துக்காட்டு வெண்பா,
எடுத்துக்காட்டு வெண்பா,
Line 22: Line 22:
குழுமணித் திண்தேர்க் கொடி.
குழுமணித் திண்தேர்க் கொடி.
</poem>
</poem>
என்று காட்டுகிறது ‘வீரர்கள் தேரின் முன்னே ஆட, மின்னல் ஆடுவது போன்று தேரின் கொடி ஆடும்' என்பது இதன் பொருள். இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.
என்று காட்டுகிறது 'வீரர்கள் தேரின் முன்னே ஆட, மின்னல் ஆடுவது போன்று தேரின் கொடி ஆடும்' என்பது இதன் பொருள். இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.

குரவையும் துணங்கையும் இணைய வைத்தே பேசப்படுகின்றன. குரவை என்பது கைகளைக் கோர்த்தும், கைகளை உயர்த்தியும் ஆடப்படும் நிகழ்த்து கலை.  முன் தேர்க்குரவையை போர்க்குரவை என்றும் அழைப்பர்.
குரவையும் துணங்கையும் இணைய வைத்தே பேசப்படுகின்றன. குரவை என்பது கைகளைக் கோர்த்தும், கைகளை உயர்த்தியும் ஆடப்படும் நிகழ்த்து கலை.  முன் தேர்க்குரவையை போர்க்குரவை என்றும் அழைப்பர்.

Latest revision as of 17:41, 22 November 2025

முன் தேர்க்குரவை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. அரசனின் தேரின் முன்னே ஆடுதல் என்பது இதன் பொருள். முந்தேர்க்குரவை பண்டக்காலத்தின் நிகழ்த்துகலைகளில் ஒன்று. போரிலே வென்ற மன்னனின் படைவீரர்கள் வெற்றி பெற்ற மன்னனது தேரின் முன்னேயும் பின்னேயும் ஆடுதல், அரசனுடன் சேர்ந்து ஆடுதல், களிற்றைக் கொன்று அதன் கீழ்ப்பட்டவனைப் பாராட்டுதல், வெற்றி பெற்ற அரசனை இருபக்க வீரர்களும் பாராட்டுதல் என வெற்றி கொண்டாடப்படுகிறது.

வென்று வாகை சூடிய மன்னனின் தேரின் முன்னே வீரர்கள் ஆடிச்செல்வது முன் தேர்க்குரவை.

தும்பைத் திணையிலும் முன்தேர்க் குரவை என்னும் துறை உண்டு.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு,

எழுஉறழ் திணிதோள் வேந்தன் வெல்தேர்
முழுவலி வயவர் முன்ஆ டின்று - (கொளு-17)

'கணைய மரத்தைப் போன்று வலிய தோள்களையுடைய அரசனது வெற்றி மிக்க தேரின் முன் வலிமையில் சிறந்த வீரர் ஆடுதல்' என்று முன் தேர்க்குரவையில் இலக்கணத்தை வகுக்கிறது.

எடுத்துக்காட்டு வெண்பா,

ஆனா வயவர்முன் ஆட அமர்க்களத்து
வானார்மின் னாகி வழிநுடங்கு - நோனாக்
கழுமணிப் பைம்பூண் கழல்வேந்தன் ஊரும்
குழுமணித் திண்தேர்க் கொடி.

என்று காட்டுகிறது 'வீரர்கள் தேரின் முன்னே ஆட, மின்னல் ஆடுவது போன்று தேரின் கொடி ஆடும்' என்பது இதன் பொருள். இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.

குரவையும் துணங்கையும் இணைய வைத்தே பேசப்படுகின்றன. குரவை என்பது கைகளைக் கோர்த்தும், கைகளை உயர்த்தியும் ஆடப்படும் நிகழ்த்து கலை. முன் தேர்க்குரவையை போர்க்குரவை என்றும் அழைப்பர்.

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:06:57 IST