சோ. விஜய குமார்: Difference between revisions
SakthivelS (talk | contribs) |
(Corrected typo errors;) |
||
| Line 15: | Line 15: | ||
== மதிப்பீடு == | == மதிப்பீடு == | ||
"மொழியும் உணர்வும் கூர்ந்து வரும் புதிய கவிகள் இன்று அபூர்வம். விஜயகுமாரின் கவிதைகளில் இரண்டுமே இயைந்து வந்திருக்கிறது. ஹராகிரி செய்யும் சாமுராய் தன் வாளை எவ்வளவு கூர்மையாகத் தீட்டுவானோ அதே கவனத்துடனும் உணர்வுத்தீவிரத்துடனும் எழுதப்பட்ட | "மொழியும் உணர்வும் கூர்ந்து வரும் புதிய கவிகள் இன்று அபூர்வம். விஜயகுமாரின் கவிதைகளில் இரண்டுமே இயைந்து வந்திருக்கிறது. ஹராகிரி செய்யும் சாமுராய் தன் வாளை எவ்வளவு கூர்மையாகத் தீட்டுவானோ அதே கவனத்துடனும் உணர்வுத்தீவிரத்துடனும் எழுதப்பட்ட கவிதைகள்" என [[போகன் சங்கர்]] 'சிற்றெறும்பின் நிழல்' தொகுப்பின் பின்னட்டைக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். | ||
== நூல்பட்டியல் == | == நூல்பட்டியல் == | ||
===== கவிதைத் தொகுப்பு ===== | ===== கவிதைத் தொகுப்பு ===== | ||
| Line 29: | Line 29: | ||
* [https://www.youtube.com/watch?v=z1dPy3J_wbk&ab_channel=ShrutiTVLiterature பாதை மாற்றிய புத்தகங்கள் | உலக புத்தகதினக் கொண்டாட்டம்- 2024 | சோ.விஜயகுமார்] | * [https://www.youtube.com/watch?v=z1dPy3J_wbk&ab_channel=ShrutiTVLiterature பாதை மாற்றிய புத்தகங்கள் | உலக புத்தகதினக் கொண்டாட்டம்- 2024 | சோ.விஜயகுமார்] | ||
* [https://www.vikatan.com/author/3572-vijayakumar.s சோ. விஜய குமார் - விகடன்] | * [https://www.vikatan.com/author/3572-vijayakumar.s சோ. விஜய குமார் - விகடன்] | ||
* [https://uyirmmai.com/literature/poetry/vijayakumar-kavithaigal/ கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன | * [https://uyirmmai.com/literature/poetry/vijayakumar-kavithaigal/ கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன - சோ விஜயகுமார் - உயிர்மை] | ||
* [https://uyirmmai.com/article/uyirmmai-magazine-october-2024-vijayakumar-poems-01/ சோ.விஜயகுமர் கவிதைகள் - உயிர்மை] | * [https://uyirmmai.com/article/uyirmmai-magazine-october-2024-vijayakumar-poems-01/ சோ.விஜயகுமர் கவிதைகள் - உயிர்மை] | ||
* [https://www.jeyamohan.in/215936/ விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு - ஜெயமோகன் தளம்] | * [https://www.jeyamohan.in/215936/ விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு - ஜெயமோகன் தளம்] | ||
Revision as of 16:03, 22 November 2025
சோ. விஜய குமார் (பிறப்பு: அக்டோபர் 20, 1996) தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். 2020 முதல் உயிர்மை இதழின் இணையாசிரியராக உள்ளார். உயிர்மை இதழில் இவர் எடுத்த நேர்காணல்கள் பரவலாக கவனம்பெற்றன.
வாழ்க்கைக் குறிப்பு
சோ. விஜய குமார் தமிழ்நாட்டின் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் சோமசுந்தரம், செல்வநாயகம் இணையருக்கு அக்டோபர் 20, 1996-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. கள்ளக்குறிச்சி வித்யாலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சேலம் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இதழியல்
- சோ. விஜய குமார் 2020 முதல் உயிர்மை இதழின் இணையாசிரியராக உள்ளார்.
- உயிர்மை பதிப்பகத்தின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
சோ. விஜய குமார் 2020 முதல் முகநூலில் கவிதைகள் எழுதி வந்தார். முதல் கவிதை வாசகசாலை இணைய இதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு 'ஒரு ஸ்க்ரோல் தூரம்' 2023-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. உயிர்மை, நீலம், மணல்வீடு ஆகிய இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. மனுஷ்ய புத்திரன், வெய்யில், பெருந்தேவி, போகன் சங்கர், அசோகமித்திரன், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
விருது
மதிப்பீடு
"மொழியும் உணர்வும் கூர்ந்து வரும் புதிய கவிகள் இன்று அபூர்வம். விஜயகுமாரின் கவிதைகளில் இரண்டுமே இயைந்து வந்திருக்கிறது. ஹராகிரி செய்யும் சாமுராய் தன் வாளை எவ்வளவு கூர்மையாகத் தீட்டுவானோ அதே கவனத்துடனும் உணர்வுத்தீவிரத்துடனும் எழுதப்பட்ட கவிதைகள்" என போகன் சங்கர் 'சிற்றெறும்பின் நிழல்' தொகுப்பின் பின்னட்டைக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)
- சிற்றெறும்பின் நிழல் (2024)
- அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)
தொகுப்பாசிரியர்
- உயிர்மை நேர்காணல் தொகுதி - 1
இணைப்புகள்
- எல்லாம் உனக்குத் தெரியும் : நீள் கவிதை : சோ.விஜய குமார் - உயிர்மை
- சோ.விஜயகுமார் உரை | யாழி எழுதிய உறுகழியில் நீந்தும் சிறுமீன்
- பாதை மாற்றிய புத்தகங்கள் | உலக புத்தகதினக் கொண்டாட்டம்- 2024 | சோ.விஜயகுமார்
- சோ. விஜய குமார் - விகடன்
- கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன - சோ விஜயகுமார் - உயிர்மை
- சோ.விஜயகுமர் கவிதைகள் - உயிர்மை
- விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு - ஜெயமோகன் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2025, 08:21:24 IST