under review

பரஞ்சோதி முனிவர்: Difference between revisions

From Tamil Wiki
(; Added info on Finalised date)
(Corrected typo errors;)
Line 8: Line 8:
திருவிளையாடல் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர் சோழநாட்டில் வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காட்டில் 16-ம் நூற்றாண்டில்  சைவ வேளாளர் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகருக்குப்  பிறந்தார்.  தம் தந்தையிடம் இருந்து தமிழ், சமஸ்கிருதம், சித்தாந்த சாஸ்திரம், சைவத் திருமுறைகள் ஆகியவற்றை கற்றுக்கொண்டார்.  சிவபக்தராகத் திகழ்ந்தார்.

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யத்திற்கு அருகில் சேகல் என்ற மடப்புரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் அடக்கமான இடம் அவரால் அமைக்கப்பட்ட சிவாலயத்தின் மூலையில், பிள்ளையார் கோவிலாக விமானத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வூருக்கு அருகில் உள்ள ‘பரஞ்சோதிபுரம்’ என்ற சிற்றூரில் அமைந்துள்ள சிவாலயத்தில், பரஞ்சோதி முனிவரின் உருவச்சிலை உள்ளது.
பரஞ்சோதி முனிவர் வேதாரண்யத்திற்கு அருகில் சேகல் என்ற மடப்புரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் அடக்கமான இடம் அவரால் அமைக்கப்பட்ட சிவாலயத்தின் மூலையில், பிள்ளையார் கோவிலாக விமானத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வூருக்கு அருகில் உள்ள ‘பரஞ்சோதிபுரம்' என்ற சிற்றூரில் அமைந்துள்ள சிவாலயத்தில், பரஞ்சோதி முனிவரின் உருவச்சிலை உள்ளது.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பரஞ்சோதி முனிவர் தமிழகத்திலுள்ள சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்துகொண்டிருந்த காலத்தில் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை தமிழில் பாடும்படி சொன்னதாக தொன்மக்கதை கூறுகிறது.  வடமொழி நூலான ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியான, ‘ஹாலாஸ்ய மகாத்மியத்’தில் காணப்படும் [[சிவன்|சிவபெருமானின்]] திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் [[பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணமாக]] இயற்றினார்,
பரஞ்சோதி முனிவர் தமிழகத்திலுள்ள சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்துகொண்டிருந்த காலத்தில் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை தமிழில் பாடும்படி சொன்னதாக தொன்மக்கதை கூறுகிறது.  வடமொழி நூலான ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியான, ‘ஹாலாஸ்ய மகாத்மியத்'தில் காணப்படும் [[சிவன்|சிவபெருமானின்]] திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் [[பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணமாக]] இயற்றினார்,

பொ.யு. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.
பொ.யு. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.

Revision as of 16:03, 22 November 2025

பரஞ்சோதி முனிவர்(பொ.யு. 16-ம் நூற்றாண்டு) திருவிளையாடல் புராணம் இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பரஞ்சோதி முனிவர் என்ற பெயரில் என நான்கு முனிவர்கள் இருந்துள்ளனர்.

திருவிளையாடல் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர் சோழநாட்டில் வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காட்டில் 16-ம் நூற்றாண்டில் சைவ வேளாளர் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகருக்குப் பிறந்தார். தம் தந்தையிடம் இருந்து தமிழ், சமஸ்கிருதம், சித்தாந்த சாஸ்திரம், சைவத் திருமுறைகள் ஆகியவற்றை கற்றுக்கொண்டார். சிவபக்தராகத் திகழ்ந்தார்.

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யத்திற்கு அருகில் சேகல் என்ற மடப்புரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் அடக்கமான இடம் அவரால் அமைக்கப்பட்ட சிவாலயத்தின் மூலையில், பிள்ளையார் கோவிலாக விமானத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வூருக்கு அருகில் உள்ள ‘பரஞ்சோதிபுரம்' என்ற சிற்றூரில் அமைந்துள்ள சிவாலயத்தில், பரஞ்சோதி முனிவரின் உருவச்சிலை உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

பரஞ்சோதி முனிவர் தமிழகத்திலுள்ள சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்துகொண்டிருந்த காலத்தில் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை தமிழில் பாடும்படி சொன்னதாக தொன்மக்கதை கூறுகிறது. வடமொழி நூலான ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியான, ‘ஹாலாஸ்ய மகாத்மியத்'தில் காணப்படும் சிவபெருமானின் திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் திருவிளையாடல் புராணமாக இயற்றினார்,

பொ.யு. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் விரிவான செய்திகளைக் கொண்டது. மதுரையின் தலபுராணமாகக் கருதப்படுகிறது

பரஞ்சோதி முனிவர் இயற்றிய பிற நூல்கள்: மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம்.

பாடல் நடை

விறகு விற்ற படலம்

நெடியவன் பிரமன் தேட நீண்டவன் தென்னற்கு ஏழின்
முடியது ஆம் சிவ லோகத்தைக் காட்டிய முறை ஈது ஐயன்
படிமிசை நடந்து பாடிப் பாணன் தன் விறகு ஆளாகி
அடிமை என்று அடிமை கொண்ட அருள் திறம் எடுத்துச் சொல்வாம்.

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

சம்பு மதுரைப் பரன் இரவு தனியே வந்து தனைப் பணிந்த
வெம்பு கதிரோன் மருமானை விடுத்து மீண்டும் தாழ்இறுக்கி
அம் பொன் கதவின் விடை பொறித்தது அறைந்தும் தென்னன் அடு படைக்கு
வம்பு மலர் தோய் புனல் பந்தர் வைத்துக் காத்த வகை சொல்வாம்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:55:05 IST