மாடலூர் கிழார்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்) |
(Corrected typo errors;) |
||
| Line 14: | Line 14: | ||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]] | ||
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_150.html தமிழ்ச்சுரங்கம்-எட்டுத்தொகை-150] | * [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_150.html தமிழ்ச்சுரங்கம்-எட்டுத்தொகை-150] | ||
Revision as of 15:57, 22 November 2025
- கிழார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிழார் (பெயர் பட்டியல்)
மாடலூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மாடலூரில் பிறந்தார். இதன் தற்போதைய இடம் அறிய இயலவில்லை. கிழார் என்பது சிறப்புப் பெயர்.
இலக்கிய வாழ்க்கை
குறிஞ்சித்திணையில் இரவுக்குறிக்கு இசைந்து வந்து நிற்கும் தோழியிடம் தன் இசைவினைத் தெரிவிக்கும் தலைவியின் கூற்றாக குறிஞ்சித்திணைப் பாடலாக குறுந்தொகையில் ஒரு பாடல் பாடினார்.
பாடல் நடை
சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம்-எட்டுத்தொகை-150
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Nov-2023, 18:27:32 IST