ஏ. தேவராஜன்: Difference between revisions
Parimitaa KM (talk | contribs) No edit summary |
Parimitaa KM (talk | contribs) No edit summary |
||
Line 14: | Line 14: | ||
1983ல் தேவராஜன் தனது 15 வயதில் காஜா பேராங் தமிழ் இளைஜர் மணிமன்றம் நடத்திய இலக்கிய போட்டியில் ‘ஒளியைத் தேடி’ எனும் சிறுகதையை எழுதி முதல் பரிசு பெற்றார். இச்சிறுகதை வானம்பாடி இதழில் வெளிவந்தது. | 1983ல் தேவராஜன் தனது 15 வயதில் காஜா பேராங் தமிழ் இளைஜர் மணிமன்றம் நடத்திய இலக்கிய போட்டியில் ‘ஒளியைத் தேடி’ எனும் சிறுகதையை எழுதி முதல் பரிசு பெற்றார். இச்சிறுகதை வானம்பாடி இதழில் வெளிவந்தது. | ||
தேவராஜன் தொடர்ந்து வானம்பாடி, மயில், கோமாளி, சூரியன், தென்றல், காதல், வல்லினம் ஆகிய இதழ்களில் சிறுகதைகள், நகைச்சுவை கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியுள்ளார். தேவராஜன் எழுதிய ‘ஒற்றை சிறகுடன் ஒரு தேவதை’ எனும் தொடர்கதை 'மலர்' இதழில் 2002ல் வெளிவந்தது. | தேவராஜன் தொடர்ந்து வானம்பாடி, மயில், கோமாளி, சூரியன், தென்றல், காதல், [[வல்லினம்]] ஆகிய இதழ்களில் சிறுகதைகள், நகைச்சுவை கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியுள்ளார். தேவராஜன் எழுதிய ‘ஒற்றை சிறகுடன் ஒரு தேவதை’ எனும் தொடர்கதை 'மலர்' இதழில் 2002ல் வெளிவந்தது. | ||
90ல் தேவராஜன் மலேசிய நண்பன் நாளிதழில் கவிதை களம் அங்கத்தில் மரபுக்கவிதைகளை எழுத தொடங்கினார். மலேசிய நண்பன் ஞாயிறு களம் அங்கத்தில் மது பழக்கத்தை ஒட்டி முதல் வெண்பா எழுதினார். தொடர்ந்து, ஏ. தேவராஜனின் ஹைக்கு கவிதைகள் நயனம், தென்றல், வானம்பாடி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்தன. | 90ல் தேவராஜன் மலேசிய நண்பன் நாளிதழில் கவிதை களம் அங்கத்தில் மரபுக்கவிதைகளை எழுத தொடங்கினார். மலேசிய நண்பன் ஞாயிறு களம் அங்கத்தில் மது பழக்கத்தை ஒட்டி முதல் வெண்பா எழுதினார். தொடர்ந்து, ஏ. தேவராஜனின் ஹைக்கு கவிதைகள் நயனம், தென்றல், வானம்பாடி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்தன. | ||
Line 20: | Line 20: | ||
தேவராஜனின் படைப்புகள் தமிழக இணைய இதழ்களான உயிரோசை, திண்ணை ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. | தேவராஜனின் படைப்புகள் தமிழக இணைய இதழ்களான உயிரோசை, திண்ணை ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. | ||
====== இதழியல் ====== | ====== இதழியல் ====== | ||
ஏ. தேவராஜன் மலேசிய நவீன கவிதைகளின் முன்னெடுப்பிற்காக 'மௌனம்' இதழை 2009ல் தொடங்கினார். எழுத்தாளர் பா.அ. சிவம் அஞ்சலி சிறப்பிதழுடன் மார்ச் 13, 2013ல் அவ்விதழை நிறுத்தினார். 'மௌனம்' மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்தன. | ஏ. தேவராஜன் மலேசிய நவீன கவிதைகளின் முன்னெடுப்பிற்காக '[[மௌனம் (இதழ்)|மௌனம்]]' இதழை 2009ல் தொடங்கினார். எழுத்தாளர் பா.அ. சிவம் அஞ்சலி சிறப்பிதழுடன் மார்ச் 13, 2013ல் அவ்விதழை நிறுத்தினார். 'மௌனம்' மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்தன. | ||
மேலும் 2000லிருந்து 2014 வரை எழுத்தாளர் மா. இராமையா நடத்திய இலக்கியகுரிசில் இதழில் துணையாசிரியராக பங்களித்தார். | மேலும் 2000லிருந்து 2014 வரை எழுத்தாளர் [[மா. இராமையா]] நடத்திய [[இலக்கியகுரிசில்]] இதழில் துணையாசிரியராக பங்களித்தார். | ||
====== வானொலி ====== | ====== வானொலி ====== | ||
2000க்கு முன் மின்னல் பண்பலையில் இலக்கிய பூச்சரம் எனும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்களைப் பேட்டி கண்டுள்ளார் தேவராஜன். மேலும் வானொலிக்காக சிறுவர் நாடகங்கள், சிறுகதைகள், இசை சொல்லும் கதை, நேயர் நெஞ்சம், வானொலி நாடகங்கள் என எழுதியுள்ளார். | 2000க்கு முன் மின்னல் பண்பலையில் இலக்கிய பூச்சரம் எனும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்களைப் பேட்டி கண்டுள்ளார் தேவராஜன். மேலும் வானொலிக்காக சிறுவர் நாடகங்கள், சிறுகதைகள், இசை சொல்லும் கதை, நேயர் நெஞ்சம், வானொலி நாடகங்கள் என எழுதியுள்ளார். | ||
====== தனிசிறப்பு ====== | ====== தனிசிறப்பு ====== | ||
[[File:தேவராஜன் 09.jpg|thumb|தேவராஜன்]] | |||
தேவராஜன் பல்குரல் திறமை பெற்றவர். மேடை நிகழ்ச்சிகளை வழிநடத்துவதிலும் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டவர். | தேவராஜன் பல்குரல் திறமை பெற்றவர். மேடை நிகழ்ச்சிகளை வழிநடத்துவதிலும் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டவர். | ||
====== இலக்கிய இடம் ====== | ====== இலக்கிய இடம் ====== | ||
ஏ. தேவராஜன் மலேசியாவில் குறிப்பிடத்தக்க கவிஞராகக் கருதப்படுகிறார். அவர் முன்னெடுத்த 'மௌனம்' இதழ் | ஏ. தேவராஜன் மலேசியாவில் குறிப்பிடத்தக்க கவிஞராகக் கருதப்படுகிறார். அவர் முன்னெடுத்த 'மௌனம்' இதழ் 2000ல் உருவான கவிஞர்களை ஒருங்கிணைக்க உதவியது. நவீன கவிதைகள் குறித்த உரையாடல் உருவாகக் காரணியாக அமைந்தது. | ||
ஏ. தேவராஜனின் 'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது' எனும் கவிதை தொகுப்பு குறித்து விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர் விஷால் ராஜா, ஏ. தேவராஜனின் தொகுப்பில் கவிதைக்குரிய அசலான மொழி வேகமோ உணர்ச்சி வேகமோ இல்லை என்கிறார். அவர் கவிதைகள் கவித்துவ மனநிலையில் இருந்து எழவில்லை என்று சொல்லும் விஷால் ராஜா நவீன கவிதை மரபுடனான பரிச்சயமற்ற கவிதையின் குரலில் உள்ள துணிச்சல் அசட்டுத்தனமானதாக மாற்றிவிடுகிறது என தன் கருத்தை முன் வைக்கிறார். | ஏ. தேவராஜனின் 'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது' எனும் கவிதை தொகுப்பு குறித்து விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர் விஷால் ராஜா, ஏ. தேவராஜனின் தொகுப்பில் கவிதைக்குரிய அசலான மொழி வேகமோ உணர்ச்சி வேகமோ இல்லை என்கிறார். அவர் கவிதைகள் கவித்துவ மனநிலையில் இருந்து எழவில்லை என்று சொல்லும் விஷால் ராஜா நவீன கவிதை மரபுடனான பரிச்சயமற்ற கவிதையின் குரலில் உள்ள துணிச்சல் அசட்டுத்தனமானதாக மாற்றிவிடுகிறது என தன் கருத்தை முன் வைக்கிறார். | ||
[[File:தேவராஜன் 4.jpg|thumb]] | [[File:தேவராஜன் 4.jpg|thumb]] | ||
====== நூல் பட்டியல் ====== | ====== நூல் பட்டியல் ====== | ||
அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது, தங்கமீன் பதிப்பகம், 2012 | * அரிதாரம் கலைந்தவன், தங்கமீன் பதிப்பகம், 2009 | ||
* அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது, தங்கமீன் பதிப்பகம், 2012 | |||
ஏழாவது குற்றம், தங்கமீன் பதிப்பகம், 2013 | * ஏழாவது குற்றம், தங்கமீன் பதிப்பகம், 2013 | ||
* காதல் நதி, சாய் அச்சகம் மலாக்கா, 2020 | |||
காதல் நதி, சாய் அச்சகம் மலாக்கா, 2020 | * மொட்டுகளே, (மாணவர் கவிதைகள்) சாய் அச்சகம் மலாக்கா, 2020 | ||
* தமிழ் மொழி, (மாணவர் கட்டுரை) சாய் அச்சகம் மலாக்கா, 2020 | |||
மொட்டுகளே, (மாணவர் கவிதைகள்) சாய் அச்சகம் மலாக்கா, 2020 | * விழிதிறவி சாய் அச்சகம் மலாக்கா, 2020 | ||
தமிழ் மொழி, (மாணவர் கட்டுரை) சாய் அச்சகம் மலாக்கா, 2020 | |||
விழிதிறவி சாய் அச்சகம் மலாக்கா, 2020 | |||
[[File:தேவராஜன் 5.jpg|thumb]] | [[File:தேவராஜன் 5.jpg|thumb]] | ||
[[File:தேவராஜன் 6 .jpg|thumb|முனைவர் மனோன்மணி, பி.எம். மூர்த்தி, ஏ. தேவராஜன் (இடமிருந்து வலம்)]] | [[File:தேவராஜன் 6 .jpg|thumb|முனைவர் மனோன்மணி, பி.எம். மூர்த்தி, ஏ. தேவராஜன் (இடமிருந்து வலம்)]] | ||
====== விருது, பரிசு ====== | ====== விருது, பரிசு ====== | ||
‘பல குரல் வேந்தன்’ விருது, டாக்டர் எம்.ஜி.ஆர் கொள்கை இயக்கம், 2015 | * ‘ஒளியைத் தேடி’, ‘புது துரை’, ‘விடியல்’, மலாக்கா காஜா பேராங், தமிழ் இளைஜர் மணிமன்றம் இலக்கிய போட்டி, 1983,1984,1985 | ||
* கவிதை துறையில் பரிசில், டான்ஶ்ரீ டத்தோ ஆதிநாகப்பன் இலக்கிய பரிசுப் பாராட்டு மடல், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், பிப்பரவரி 28, 1998 | |||
* ‘இடைச்சாரி’ முதல் பரிசு , தென்றல் சிறுகதை போட்டி 2005 | |||
* ‘பொய்யெல்லாம் பொய்யல்ல’ முதல் பரிசு, தென்றல் சிறுகதை போட்டி, 2008. | |||
* ‘ஏழாவது குற்றம்’, இரண்டாவது பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், மலேசிய எழுத்தாளர் சங்கம், 2014. | |||
* ’அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது’ முதல் பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், அக்டோபர் 16, 2016. | |||
* புதுக்கவிதை முதல் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010 | |||
* புதுக்கவிதை மூன்றாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010 | |||
* புதுக்கவிதை இரண்டாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், செப்டெம்பர் 18, 2017 | |||
* ‘வெட்டி வேலா’ இலக்கியச் செம்மல் முனைவர் ரெ. கார்த்திகேசு பரிசு, நவம்பர் 5, 2017. | |||
* மூன்றாம் பரிசு, நல்லார்க்கினியன் மரபு கவி விருது, ஏப்ரல் 28, 2018 | |||
* ‘பல குரல் வேந்தன்’ விருது, டாக்டர் எம்.ஜி.ஆர் கொள்கை இயக்கம், 2015 | |||
====== உசாத்துணை ====== | ====== உசாத்துணை ====== | ||
[https://vallinam.com.my/version2/?p=7207 மலேசிய நவீன கவிஞர்கள் (2) : ஏ.தேவராஜன் கவிதைகள்] | [https://vallinam.com.my/version2/?p=7207 மலேசிய நவீன கவிஞர்கள் (2) : ஏ.தேவராஜன் கவிதைகள்] |
Revision as of 17:08, 17 September 2022
தேவராஜன் (ஜூன் 20, 1967) ஒரு மலேசிய எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாசிரியர். இவர் ஏராளமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
தேவராஜன் ஜூன் 20, 1967ல் புக்கிட் செர்மின் தோட்டம், ஜாசின், மலாக்காவில் பிறந்தார். தேவராஜனின் தந்தையார் பெயர் யேசுதாஸ். தாயாரின் பெயர் ரூத். ஐந்து உடன் பிறந்தவர்களில் தேவராஜன் மூத்தவர். இவருக்கு இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் உள்ளனர்.
தேவராஜன் 1974லிருந்து 1979 வரை ஆரம்பகால கல்வியை ஜாசின் லாலாங் தோட்ட தமிழ்பள்ளியில் பயின்றார். தேவராஜன் 1980லிருந்து 1987 வரை ஜாசினில் உள்ள டத்தோ பென்டஹாரா இடைநிலைபள்ளியில் படிவம் ஆறு வரை பயின்றார். 1980லிருந்து 1982 வரை சிரம்பான் ராஜ மலேங்கார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் (Maktab Perguruan Raja Melewar) இடைநிலை தமிழ் மொழிக்கான கல்வியைப் பயின்றார். மலேசிய புத்ரா பலகலைகழகத்தில் தேசிய மொழி முதல் மொழியாக 2000ல் இளங்கலையும் 2006ல் கல்வி நிர்வாகவியலில் முதுகலை பட்டமும் பெற்றார்.
குடும்பம், தொழில்
தேவராஜன் டிசம்பர் 2, 2000ல் தமிழ்செல்வி என்பவரை மணமுடித்தார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள்.
தேவராஜன் ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர். மலாய் மொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவை இவர் பயிற்றுவிக்கும் பாடங்கள்.
இலக்கிய வாழ்கை
1983ல் தேவராஜன் தனது 15 வயதில் காஜா பேராங் தமிழ் இளைஜர் மணிமன்றம் நடத்திய இலக்கிய போட்டியில் ‘ஒளியைத் தேடி’ எனும் சிறுகதையை எழுதி முதல் பரிசு பெற்றார். இச்சிறுகதை வானம்பாடி இதழில் வெளிவந்தது.
தேவராஜன் தொடர்ந்து வானம்பாடி, மயில், கோமாளி, சூரியன், தென்றல், காதல், வல்லினம் ஆகிய இதழ்களில் சிறுகதைகள், நகைச்சுவை கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியுள்ளார். தேவராஜன் எழுதிய ‘ஒற்றை சிறகுடன் ஒரு தேவதை’ எனும் தொடர்கதை 'மலர்' இதழில் 2002ல் வெளிவந்தது.
90ல் தேவராஜன் மலேசிய நண்பன் நாளிதழில் கவிதை களம் அங்கத்தில் மரபுக்கவிதைகளை எழுத தொடங்கினார். மலேசிய நண்பன் ஞாயிறு களம் அங்கத்தில் மது பழக்கத்தை ஒட்டி முதல் வெண்பா எழுதினார். தொடர்ந்து, ஏ. தேவராஜனின் ஹைக்கு கவிதைகள் நயனம், தென்றல், வானம்பாடி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்தன.
தேவராஜனின் படைப்புகள் தமிழக இணைய இதழ்களான உயிரோசை, திண்ணை ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
இதழியல்
ஏ. தேவராஜன் மலேசிய நவீன கவிதைகளின் முன்னெடுப்பிற்காக 'மௌனம்' இதழை 2009ல் தொடங்கினார். எழுத்தாளர் பா.அ. சிவம் அஞ்சலி சிறப்பிதழுடன் மார்ச் 13, 2013ல் அவ்விதழை நிறுத்தினார். 'மௌனம்' மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்தன.
மேலும் 2000லிருந்து 2014 வரை எழுத்தாளர் மா. இராமையா நடத்திய இலக்கியகுரிசில் இதழில் துணையாசிரியராக பங்களித்தார்.
வானொலி
2000க்கு முன் மின்னல் பண்பலையில் இலக்கிய பூச்சரம் எனும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்களைப் பேட்டி கண்டுள்ளார் தேவராஜன். மேலும் வானொலிக்காக சிறுவர் நாடகங்கள், சிறுகதைகள், இசை சொல்லும் கதை, நேயர் நெஞ்சம், வானொலி நாடகங்கள் என எழுதியுள்ளார்.
தனிசிறப்பு
தேவராஜன் பல்குரல் திறமை பெற்றவர். மேடை நிகழ்ச்சிகளை வழிநடத்துவதிலும் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.
இலக்கிய இடம்
ஏ. தேவராஜன் மலேசியாவில் குறிப்பிடத்தக்க கவிஞராகக் கருதப்படுகிறார். அவர் முன்னெடுத்த 'மௌனம்' இதழ் 2000ல் உருவான கவிஞர்களை ஒருங்கிணைக்க உதவியது. நவீன கவிதைகள் குறித்த உரையாடல் உருவாகக் காரணியாக அமைந்தது.
ஏ. தேவராஜனின் 'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது' எனும் கவிதை தொகுப்பு குறித்து விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர் விஷால் ராஜா, ஏ. தேவராஜனின் தொகுப்பில் கவிதைக்குரிய அசலான மொழி வேகமோ உணர்ச்சி வேகமோ இல்லை என்கிறார். அவர் கவிதைகள் கவித்துவ மனநிலையில் இருந்து எழவில்லை என்று சொல்லும் விஷால் ராஜா நவீன கவிதை மரபுடனான பரிச்சயமற்ற கவிதையின் குரலில் உள்ள துணிச்சல் அசட்டுத்தனமானதாக மாற்றிவிடுகிறது என தன் கருத்தை முன் வைக்கிறார்.
நூல் பட்டியல்
- அரிதாரம் கலைந்தவன், தங்கமீன் பதிப்பகம், 2009
- அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது, தங்கமீன் பதிப்பகம், 2012
- ஏழாவது குற்றம், தங்கமீன் பதிப்பகம், 2013
- காதல் நதி, சாய் அச்சகம் மலாக்கா, 2020
- மொட்டுகளே, (மாணவர் கவிதைகள்) சாய் அச்சகம் மலாக்கா, 2020
- தமிழ் மொழி, (மாணவர் கட்டுரை) சாய் அச்சகம் மலாக்கா, 2020
- விழிதிறவி சாய் அச்சகம் மலாக்கா, 2020
விருது, பரிசு
- ‘ஒளியைத் தேடி’, ‘புது துரை’, ‘விடியல்’, மலாக்கா காஜா பேராங், தமிழ் இளைஜர் மணிமன்றம் இலக்கிய போட்டி, 1983,1984,1985
- கவிதை துறையில் பரிசில், டான்ஶ்ரீ டத்தோ ஆதிநாகப்பன் இலக்கிய பரிசுப் பாராட்டு மடல், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், பிப்பரவரி 28, 1998
- ‘இடைச்சாரி’ முதல் பரிசு , தென்றல் சிறுகதை போட்டி 2005
- ‘பொய்யெல்லாம் பொய்யல்ல’ முதல் பரிசு, தென்றல் சிறுகதை போட்டி, 2008.
- ‘ஏழாவது குற்றம்’, இரண்டாவது பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், மலேசிய எழுத்தாளர் சங்கம், 2014.
- ’அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது’ முதல் பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், அக்டோபர் 16, 2016.
- புதுக்கவிதை முதல் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010
- புதுக்கவிதை மூன்றாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010
- புதுக்கவிதை இரண்டாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், செப்டெம்பர் 18, 2017
- ‘வெட்டி வேலா’ இலக்கியச் செம்மல் முனைவர் ரெ. கார்த்திகேசு பரிசு, நவம்பர் 5, 2017.
- மூன்றாம் பரிசு, நல்லார்க்கினியன் மரபு கவி விருது, ஏப்ரல் 28, 2018
- ‘பல குரல் வேந்தன்’ விருது, டாக்டர் எம்.ஜி.ஆர் கொள்கை இயக்கம், 2015