தேவதச்சன்: Difference between revisions
SakthivelS (talk | contribs) m (→கவிதை) |
(Corrected typo errors;) |
||
| Line 12: | Line 12: | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
தேவதச்சன் 1970-களில் '[[கசடதபற (இதழ்)|கசடதபற]] என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். [[எழுத்து (சிற்றிதழ்)|எழுத்து]] இதழ்களை வாசித்து நவீன இலக்கியத்தை அறிந்து கொண்டார். சென்னையில் [[ஞானக்கூத்தன்]], [[பாலகுமாரன்]], [[ஆத்மாநாம்]], [[ஸ்டெல்லா ப்ரூஸ்]], ஆனந்த் ஆகியோருடன் உரையாடலில் இருந்தார். தொடர்ந்து ' | தேவதச்சன் 1970-களில் '[[கசடதபற (இதழ்)|கசடதபற]] என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். [[எழுத்து (சிற்றிதழ்)|எழுத்து]] இதழ்களை வாசித்து நவீன இலக்கியத்தை அறிந்து கொண்டார். சென்னையில் [[ஞானக்கூத்தன்]], [[பாலகுமாரன்]], [[ஆத்மாநாம்]], [[ஸ்டெல்லா ப்ரூஸ்]], ஆனந்த் ஆகியோருடன் உரையாடலில் இருந்தார். தொடர்ந்து 'ழ' என்ற கவிதை இதழிலும் அதிகமாக எழுதி வந்ததார். காலச்சுவடு, [[கல்குதிரை]], உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. தேவதச்சனின் முதல் கவிதைத்தொகுப்பு 'கைமணல்' 1982-ல் வெளியானது. 2000-ல் இரண்டாவது தொகுப்பு 'அத்துவான வேளை' வெளியானது. 2017-ல் தேவதச்சனின் முழு கவிதைத்தொகுப்பு 'மர்ம நபர்' உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. கோவில்பட்டியில் உள்ள தேவதச்சனின் நகைக் கடை இலக்கிய மையங்களில் ஒன்று. | ||
[[File:தேவதச்சன்5.jpg|thumb|259x259px|தேவதச்சன்]] | [[File:தேவதச்சன்5.jpg|thumb|259x259px|தேவதச்சன்]] | ||
| Line 41: | Line 41: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.jeyamohan.in/81515/ 'அத்துவானவெளியின் | * [https://www.jeyamohan.in/81515/ 'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி - எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)] | ||
* [https://akazhonline.com/?p=5744 கவிதையில் மட்டுமே அனாதைத்தன்மை சாத்தியம்: தேவதச்சன்: உரையாடல்: விஷால் ராஜா] | * [https://akazhonline.com/?p=5744 கவிதையில் மட்டுமே அனாதைத்தன்மை சாத்தியம்: தேவதச்சன்: உரையாடல்: விஷால் ராஜா] | ||
* [https://www.hindutamil.in/news/literature/196017-.html தேவதச்சன் கவிதைகள்: தமிழ் மொழியின் அழகிய பறவைகள்: ஷங்கர்ராமசுப்ரமணியன்] | * [https://www.hindutamil.in/news/literature/196017-.html தேவதச்சன் கவிதைகள்: தமிழ் மொழியின் அழகிய பறவைகள்: ஷங்கர்ராமசுப்ரமணியன்] | ||
Latest revision as of 15:53, 22 November 2025
தேவதச்சன் (ஏ.எஸ். ஆறுமுகம்) (பிறப்பு: நவம்பர் 6, 1952) நவீனத் தமிழ்க் கவிஞர். தமிழ் நவீனக் கவிதையின் சிந்தனாவாதப்போக்கில் தாக்கம் செலுத்தியவர்களில் ஒருவர். தினசரி வாழ்வில் தொட்டு அறியக்கூடிய ஒவ்வொன்றிலும் இப்புடவியின் ரகசியங்களை திறந்து பார்ப்பவையாக இவரது கவிதைகள் உள்ளன.
வாழ்க்கைக்குறிப்பு
தேவதச்சனின் இயற்பெயர் ஏ.எஸ். ஆறுமுகம். தேவதச்சன் நவம்பர் 6, 1952-ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.எஸ்.ஏ. சேதுராமலிங்கம், சாரதா இணையருக்குப் பிறந்தார். கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பு பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆன்மிகம்
இளமையில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளால் கவரப்பட்டார். பின்னர் நிசர்கதத்த மகராஜ் (Nisargadatta Maharaj), குர்ஜீஃப் (Gurdjieff) ஆகியோரின் சிந்தனைகளாலும் கவரப்பட்டார். நிசர்கதத்த மகராஜை அவருடைய சீடரான செய்லர் பாப் ஆடம்ஸன் (Sailor Bod Adamson) வழியே வாசித்து அறிந்து கொண்டார்.
இலக்கியவாழ்க்கை
தேவதச்சன் 1970-களில் 'கசடதபற என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். எழுத்து இதழ்களை வாசித்து நவீன இலக்கியத்தை அறிந்து கொண்டார். சென்னையில் ஞானக்கூத்தன், பாலகுமாரன், ஆத்மாநாம், ஸ்டெல்லா ப்ரூஸ், ஆனந்த் ஆகியோருடன் உரையாடலில் இருந்தார். தொடர்ந்து 'ழ' என்ற கவிதை இதழிலும் அதிகமாக எழுதி வந்ததார். காலச்சுவடு, கல்குதிரை, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. தேவதச்சனின் முதல் கவிதைத்தொகுப்பு 'கைமணல்' 1982-ல் வெளியானது. 2000-ல் இரண்டாவது தொகுப்பு 'அத்துவான வேளை' வெளியானது. 2017-ல் தேவதச்சனின் முழு கவிதைத்தொகுப்பு 'மர்ம நபர்' உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. கோவில்பட்டியில் உள்ள தேவதச்சனின் நகைக் கடை இலக்கிய மையங்களில் ஒன்று.
இலக்கிய இடம்
"அறம், பாவம் என்னும் அருங்கயிற்றுக் கட்டிலிருந்து தமிழ்க் கவிதையை முற்றிலுமாக விடுவித்தவர் தேவதச்சன். தேவதச்சனின் கண்கள் துண்டிக்கப்பட்ட காண்நிலைகளை, உணர்நிலைகளை அதன் வேதிவினை தொடங்கும்போதே பார்க்கிறது. இலக்கியப்பூர்வமான உரைநடையோடு பேச்சுமொழியைச் சரியாக வைப்பதும் தேவதச்சன் தரும் அபூர்வ புலன் அனுபவங்களில் ஒன்றே. தேவதச்சனின் கவிதைகள், தொடக்க அனுபவமாக வசீகர ஒழுங்கையும் மகிழ்ச்சியையும் ருசியையும் மென்மையையும் தருவதாகவும், ஆழத்தில் பிரபஞ்சத்தில் தொடர்ந்து நிகழும் பெரும் குழப்படி, துயரம், காம மூர்க்கத்தைக் கொண்டதாகவும் உள்ளன. தேவதச்சனின் சமீபத்திய கவிதைகள் தரையிறங்கி, பூமியின் அழுக்கையும் மனிதர்களின் கண்ணீரையும் ஏற்றவையாக இருக்கின்றன." என ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.
ஆவணப்படம்
2015-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழாவையொட்டி கவிஞர் தேவதச்சன் பற்றிய ஆவணப்படத்தை சரவணவேல் இயக்கினார். துணை இயக்குனர்கள் யானிதரன், பாலுமகேந்திரா. சண்முகநாதன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். படத்தொகுப்பு மேகநாதன். நேர்கண்டவர் செந்தில் குமார் தேவன், பின்னணி பேசியவர் ராஜகோபாலன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாரித்த இந்த ஆவணப்படம் இயக்குனர் வெற்றிமாறனால் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது.
ஆவணப்படம்: நிசப்தத்தின் சப்தம் - கவிஞர் தேவதச்சன்
விருதுகள்
- அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பு வழங்கிய விளக்கு விருது (2010)
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது (2011)
- கோவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு வழங்கிய விஷ்ணுபுரம் விருது (2015)
- கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை வழங்கிய கவிக்கோ விருது (2017)
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய சிற்பி இலக்கிய விருது (2018)
நூல் பட்டியல்
கவிதை
- அவரவர் கை மணல் (1982)
- அத்துவான வேளை (2000)
- கடைசி டினோசார் (2004)
- யாருமற்ற நிழல் (2006)
- ஹோம்ஸ் என்ற காற்று (2010)
- இரண்டு சூரியன் (2012)
- எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது (2013)
- மர்மநபர் (முழு தொகுப்பு) (2017)
- தேதியற்ற மத்தியானம் (2023)
இணைப்புகள்
- 'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி - எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- கவிதையில் மட்டுமே அனாதைத்தன்மை சாத்தியம்: தேவதச்சன்: உரையாடல்: விஷால் ராஜா
- தேவதச்சன் கவிதைகள்: தமிழ் மொழியின் அழகிய பறவைகள்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
- Devathachan - Poetry World | தினசரி வாழ்வின் கவித்துவம் | சபரிநாதன் உரை
- உலகக் கவிதைகளும் தேவதச்சனும் | எஸ்.ராமகிருஷ்ணன் | S. Ramakrishnan
- தேவதச்சன்: writermaanee
- தேவதச்சனின் கவிதையுலகம்: இரசவாதம்
- மர்ம நபர் - நூல் வெளியீடு | தேவதச்சன் உரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Jan-2024, 10:53:23 IST

