under review

ஜங்கம பண்டாரம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 1: Line 1:
[[File:பகல் வேஷம்.jpg|thumb]]
[[File:பகல் வேஷம்.jpg|thumb]]
ஜங்கம பண்டாரம் சாதியினர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்.

பார்க்க: [[பகல் வேடம் (நிகழ்த்துக்கலை)|பகல் வேடம்]]

== வரலாறு ==
== வரலாறு ==
Line 18: Line 19:

இவர்களின் முதல் தெய்வம் வீரபத்திரர். திருமணம், பூப்பெய்தல், குழந்தைப் பிறப்பு, பெயரிடல் முதலிய நற்சடங்குகளை வீரபத்திரரை வழிபட்டே தொடங்குகின்றனர். மேலும் மாரியம்மன், காட்டேறி, முனீஸ்வரன், கங்கை அம்மன் போன்ற சிறு தெய்வ வழிபாடும் இவர்களிடம் உள்ளது.

== கோவில், விழாக்கள் ==
== கோவில், விழாக்கள் ==
பகல் வேடக் கலைஞர்களின் குலத் தெய்வமான வீரபத்திரருக்கு திண்டிவனம் அருகில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்திலும், நாமகிரிப் பேட்டையிலும் கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோவில்களிலும் சித்ரா பௌர்ணமியின் போது இரண்டு நாள் விழா நடத்துகின்றனர். இவ்விழாவில் நாடகம் போன்ற பிறர் கலைகளை நிகழ்த்துகின்றனர். பகல் வேடத்தை நிகழ்த்துவதில்லை.  

இக்கோவில்களுக்கான பூசகர்களே ஜங்கம பண்டார இனத்திலேயே தேர்வு செய்துக் கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படுபவரே பரம்பரையாக பூஜை நிகழ்த்துவார். பூசாரி இறந்துவிட்டால் அவரது மூத்த மகன் பூசாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆண் பிள்ளை இல்லாத வீடுகள் பங்காளி முறையுடையோர் அப்பதவியை ஏற்பர். கோவிலின் வருமானத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் வரி வசூலிக்கப்படும். விழாக் காலங்களில் குறவன் - குறத்தி போல் வேடமணிந்து வீடு வீடாகச் சென்று பணம் வசூலிப்பர்.

== சமூக மாற்றம் ==
== சமூக மாற்றம் ==
தமிழக பகல் வேடக் கலைஞர்கள் பகுதி நேரத்தில் கலையை நிகழ்த்தவும் மீதி நேரங்களில் விவசாயத்தில் ஈடுபடவும் செய்கின்றனர். ஆந்திர கலைஞர்கள் முழு நேர கலைஞர்களாகவே உள்ளனர். தமிழகத்தில் ஆறு மாதம் விவசாயம், ஆறு மாதம் பகல் வேடம் என்றே ஜங்கம பண்டார சாதியினர் தொழில் புரிகின்றனர். இக்கலை இன்று அழியும் நிலையிலேயே உள்ளது. பரம்பரையாகக் கலை நிகழ்த்திய இருபத்தைந்து குழுக்கள் மட்டுமே இன்று வேஷம் கட்டுகின்றனர். அடுத்த தலைமுறை கலைஞர்கள் யாரும் உருவாகவில்லை.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - ஜங்கம பண்டாரம், சோ. சேகர் (ஆசிரியர்) - பக்தவத்சல பாரதி (பதிப்பாசிரியர்)

{{Ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 21:00, 13 September 2022

பகல் வேஷம்.jpg

ஜங்கம பண்டாரம் சாதியினர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்.

பார்க்க: பகல் வேடம்

வரலாறு

பகல் வேடம் கலை நிகழ்த்தும் ஜங்கம பண்டாரம் சாதியினர் நாயக்க மன்னர்கள் தமிழகம் வந்த போது அவர்களுடன் வந்து குடியேறியவர்கள். பகல் வேடம் நிகழ்த்துக்கலை தமிழகத்தில் பொ.யு. 15 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே வழக்கில் இருந்ததன் மூலம் இதனை அறிய முடிகிறது. ஆந்திரா மாநிலத்தில் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இக்கலை நிகழ்ந்ததற்கு தெலுங்கு இலக்கிய சான்றுகள் கிடைக்கின்றன. நாயக்க மன்னர்கள் ஜங்கம பண்டாரங்களை ஒற்று வேலைகளுக்கு பயன்படுத்தினர். அதற்காக அவர்களுக்கு வல்லம் பகுதியில் மானியங்களும் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் தற்போது இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பகல் வேடம் கலை நிகழ்த்தும் குழுக்கள் உள்ளனர். ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து கலை நிகழ்த்தி செல்பவர்களும் உள்ளனர். இவர்களின் சாதி அதிகாரபூர்வமாக ‘ஜங்கம்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வாழ்கின்ற இடத்தைப் பொறுத்து தங்கள் சாதியை குல்லுக்கவர் நாயுடு, பலிங்க நாயுடு, லிங்காயத்து நாயுடு எனக் மாற்றிக் கொள்கின்றனர்.

வாழும் இடங்கள்

தமிழநாட்டில் தென் ஆற்காடு மாவட்டத்தில் அதிகம் வசிக்கின்றனர். தென்னாற்காடு மாவட்டத்தில் திண்டிவனத்திற்கும் விழுப்புரத்திற்கும் இடையில் தென்களவாய் எனும் ஊரின் அருகில் உள்ள மதுரவையிரம் பேட்டையில் பத்துக் குடும்பங்கள் வசிக்கின்றனர். இதன் அருகே உள்ள வேங்கை என்னும் கிராமத்தில் பத்து குடும்பங்கள் வசிக்கின்றனர். இதனைச் சுற்றி ஆண்டார்குப்பம், தர்க்காஸ், ஓமந்தூர் ஆகிய கிராமங்களிலும் சில குடும்பங்கள் வசிக்கின்றனர். நாடோடி சமூகமாக வாழும் இவர்கள் ஆந்திராவிலிருந்தும் வந்து முகாமிட்டு நிகழ்ச்சி நடத்திச் செல்பவர்களும் உள்ளனர்.

மொழி

ஜங்கம பண்டாரம் சாதியினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் நிகழ்ச்சி நடத்தும் போது தமிழிலேயே பாட்டுபாடி கதை சொல்கின்றனர். தெலுங்கு பாடல்களைப் பாடி கதை சொல்பவர்களும் உள்ளனர். ஆந்திராவிலிருந்து வந்து செல்பவர்கள் தெலுங்கு மொழியே பாடுகின்றனர்.

பொருளாதார நிலை

பகல் வேடத்தை பரம்பரை தொழிலாகக் கொண்ட ஜங்கம பண்டார சாதியினர் இன்று பொருளாதார சூழல் காரணமாக விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர். நிகழ்ச்சி நடக்கும் காலங்களில் முகாமிற்கு தங்கள் சொந்த செலவிலேயே செல்கின்றனர்.

ஒரு வேடத்தை இரண்டு நாள் போடுவர். அவ்வாறு இரண்டு அல்லது மூன்று வேடங்கள் கொண்டு ஒரு வார நிகழ்ச்சி நடத்துகின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒருவர் அனுமன் வேடம் பூண்டு மற்றவர்களுடன் வசூலுக்கு செல்வார். அப்படி செல்லும் போது இடையிலேயே சில பாடல்கள் பாடி பணம் வசூலிப்பார். ஒரு முகாமிற்கு ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இரண்டாயிரமோ அதற்கு குறைவாகவோ பணம் வசூலாகும். நிகழ்ச்சியில் கிடைக்கும் பணத்தை கலைஞர்கள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வர். ஜங்கம பண்டார சாதியினர் பொருளாதார நிலையில் பின் தங்கி உள்ளனர்.

சமயம்

ஜங்கம பண்டாரம் சாதியினர் சைவத்தின் பிரிவான வீரசைத்தைச் சார்ந்தவர்கள். தமிழகம் மற்றும் ஆந்திரக் கலைஞர்களும் வீரசைவர்கள் என்றே தங்களை அடையாளப்படுத்துகின்றனர். வீரசைவ மரபில் ’ஜங்கமர்’, ‘சரணர்’ என இருப் பிரிவுகள் உள்ளனர். இதில் ஜங்கமர்கள் கடவுளால் கொடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்ற வந்தவர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். பகல் வேடம் நிகழ்த்து ஜங்கம பண்டார சாதியினர் இக்கலையை கடவுளின் அவதாரகலை என்றே நம்புகின்றனர்.

இவர்களின் முதல் தெய்வம் வீரபத்திரர். திருமணம், பூப்பெய்தல், குழந்தைப் பிறப்பு, பெயரிடல் முதலிய நற்சடங்குகளை வீரபத்திரரை வழிபட்டே தொடங்குகின்றனர். மேலும் மாரியம்மன், காட்டேறி, முனீஸ்வரன், கங்கை அம்மன் போன்ற சிறு தெய்வ வழிபாடும் இவர்களிடம் உள்ளது.

கோவில், விழாக்கள்

பகல் வேடக் கலைஞர்களின் குலத் தெய்வமான வீரபத்திரருக்கு திண்டிவனம் அருகில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்திலும், நாமகிரிப் பேட்டையிலும் கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோவில்களிலும் சித்ரா பௌர்ணமியின் போது இரண்டு நாள் விழா நடத்துகின்றனர். இவ்விழாவில் நாடகம் போன்ற பிறர் கலைகளை நிகழ்த்துகின்றனர். பகல் வேடத்தை நிகழ்த்துவதில்லை.

இக்கோவில்களுக்கான பூசகர்களே ஜங்கம பண்டார இனத்திலேயே தேர்வு செய்துக் கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படுபவரே பரம்பரையாக பூஜை நிகழ்த்துவார். பூசாரி இறந்துவிட்டால் அவரது மூத்த மகன் பூசாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆண் பிள்ளை இல்லாத வீடுகள் பங்காளி முறையுடையோர் அப்பதவியை ஏற்பர். கோவிலின் வருமானத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் வரி வசூலிக்கப்படும். விழாக் காலங்களில் குறவன் - குறத்தி போல் வேடமணிந்து வீடு வீடாகச் சென்று பணம் வசூலிப்பர்.

சமூக மாற்றம்

தமிழக பகல் வேடக் கலைஞர்கள் பகுதி நேரத்தில் கலையை நிகழ்த்தவும் மீதி நேரங்களில் விவசாயத்தில் ஈடுபடவும் செய்கின்றனர். ஆந்திர கலைஞர்கள் முழு நேர கலைஞர்களாகவே உள்ளனர். தமிழகத்தில் ஆறு மாதம் விவசாயம், ஆறு மாதம் பகல் வேடம் என்றே ஜங்கம பண்டார சாதியினர் தொழில் புரிகின்றனர். இக்கலை இன்று அழியும் நிலையிலேயே உள்ளது. பரம்பரையாகக் கலை நிகழ்த்திய இருபத்தைந்து குழுக்கள் மட்டுமே இன்று வேஷம் கட்டுகின்றனர். அடுத்த தலைமுறை கலைஞர்கள் யாரும் உருவாகவில்லை.

உசாத்துணை

  • தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - ஜங்கம பண்டாரம், சோ. சேகர் (ஆசிரியர்) - பக்தவத்சல பாரதி (பதிப்பாசிரியர்)

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.